தொடர்கள்
கவர் ஸ்டோரி
மும்பையில் சிலர் – பால்கி

மும்பைய்ல அப்ப எம்பேரு அது இப்ப எம்பேரு இதுன்னு சொல்லிட்டு இருக்காங்க.

வாங்க அவுங்களப்பாக்கலாம்.

20261024165918417.jpg

[ஃப்ளோரா ஃபௌண்டன்னு இருந்த எம்பேரு 1961ல ஹுதாத்மா சௌக் ஆனது]

----------

20261024165946722.jpg

[1888ல தயாரா விக்டோரியா டெர்மினஸ் என்ற நான் 2017ல சத்ரபதி சிவாஜி மஹராஜ் டெர்மினஸ்னு மாறிட்டேன்]

----------

20261024170027483.png

[1869லிருந்து 1947 வரைக்கும் என் பேரு கிராஃபோர்ட் மார்கெட்டு தான். அதுக்கப்புறமாத் தான் மஹாத்மா ஜோதிபா புலே மந்தைனு ஆயிடிச்சி]

----------

2026102417011560.jpg

[மரைன் டிரைவ்னு தான் மொதல்ல எம்பேரு சொன்னாங்க. இந்திய சுதந்திரத்துக்கு அப்புறமா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரோட்னு மாத்திட்டாங்க]

----------

20261024170327892.jpg

[1850களில் எல்பின்ஸ்டன் ரோட் தாங்க என்னோட பேரு.

20261024170405821.jpg

2018ல பிரபாதேவினு மாத்திட்டாங்க]

இது இப்படி இருக்க

கீழே கொடுக்கப்பட்டுள்ள லோக்கல் ஸ்டேஷன்ங்க பேரு கூட மாத்தலாம்னு மாநில அரசு கூட ஒப்புதல் குட்தாச்சி எப்பவோ!

அமுல் படுத்தணும் அவ்வளவுதான் பாக்கி

மரைன் லயின்ஸ் போயி மும்பா தேவி ஆயிடுமாம்

சார்னி ரோட் போயி கிர்கா(ம்) ஆயிடும்

கரி ரோட் என்ற பேரு லால்பாக்னு மாறிடும்

சாண்ஹர்ஸ்ட் ரோட் என்ற ஸ்டேஷனின் புதுப் பெயர் டோங்க்ரினு இருக்குமாம். இந்த ஸ்டேஷன் இருப்பிடம் ஒன்றே தான். கிரவுண்ட் தளத்தில் இருக்கும் ஸ்டேஷன் மத்திய ரயில்வேயின் மெயின் புறநகர் பகுதி தொடராகும்.

முதல் மாடியில் இருக்கும் ஸ்டேஷன் மத்திய ரயில்வேயின் ஹார்பர் புறநகர் பகுதி தொடராகும்.

காட்டன் கிரீன் ஸ்டேஷன் காலாசௌக்கினு மாத்திடுவாங்க.

டாக்யார்ட் ரோட், மஜ்கா(ம்) என்றும், கிங்க்ஸ் சர்க்கிள் ஸ்டேஷன் தீர்த்தாங்கர் பர்ஸ்வனாத் என்று மாறுமாம்.