
Heading : திருப்பரங்குன்றம் !! தீபத்திற்கு அரோகரா !! தொடரும் சர்ச்சை !! -விகடகவியார்
Comment : இந்த அரசுக்கு வோட்டு போட்ட தற்குறிகளின் தவறு.... இப்போது அனுபவிக்க வேண்டிய கட்டாயம் 😡
S Sriram , Chennai
Heading : வர்க்களாவில் வற்றாத தீர்த்தம் - நேரடி ரிப்போர்ட் - பால்கி
Comment : தெரியாத பல விஷயங்களை விகடகவி மூலம் தெரிந்து கொண்டேன், திரு பால்கி சார் அவர்களுக்கு நன்றிகள் பல
Ujjivanam , Chennai
Heading: 10 ஆம் ஆண்டில்
comments:
10 ஆம் ஆண்டில் விகடகவி நடை போடுகிறது.
வெளியான இதழ்களில் வந்த சில:
மஹாபெரியாவாளுடன் அனுபவங்கள்
வாழ்க்கை குறித்து பால்கியின் நச் மெஸேஜ்கள்
நீலகிரி குறித்த தகவல்கள்
இயற்கை, சூழல் பின்னணி கட்டுரைகள்
தேவாவின் ஜோக்ஸ்
கருத்து கதிர் வேலன்
ஆர் நடராஜன் பத்திரிகை அனுபவங்கள் போன்ற தொடர்கள்
ஆன்மீக தகவல்கள்
கொலு போட்டிகள்
தீபாவளி சிறப்பிதழ் சுஜாதா, மதன் சிறு வயது அனுபவங்கள்
வரும் இதழ் (களில் ) என்ன வரும்.... காத்திருப்போம்
வாழ்த்துகள்
வேல்முருகன்
பெங்களூர்
எல்லோருக்கும், வணக்கம்
10 ஆண்டுகள் வெற்றி நடை போட்டு 11-ஆம் ஆண்டில் நுழைய இருக்கும் விகடகவி இதழுக்கும், அதன் ஆசிரியர் திரு மதன் சாருக்கும், ஆசிரியர் குழுவிற்க்கும், மற்ற காரியதரிசிகளுக்கும், எங்கள் உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.
10 ஆண்டு காலம் ஒரு வாராந்திரியை, தற்கால சூழ்நிலையில், நடத்துவது ஒரு சுலபமான காரியம் இல்லை, என்பது எங்களுக்குத் தெரியும்.
இருந்தும், விடாமுயற்சியுடன் நடத்தி வரும் உங்கள் அனைவரின் உழைப்பை மனமார பாராட்டுகிறோம்
வரும் ஆண்டுகளில் வெற்றி நடையோடு விகடகவி வாராந்திர இதழ் முன்னேறி, செழிப்புடன் வெளிவர வேண்டுமென்று வாழ்த்துகிறோம், இறைவனையும் வேண்டுகிறோம்
உங்கள் ஆதரவையும், உதவிகளையும் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் சமர்ப்பித்துக் கொள்கிறோம்
நன்றி.
அன்புடன்,
திருமதி கமலா வெங்கடரமணி
முனைவர் B வெங்கடரமணி
பத்லாபூர் கிழக்கு
சார், வணக்கம்
நான் எழுதி அனுப்பிய எங்கள் குழுவைப் (பத்லாபூர் திருப்புகழ் குழு) பற்றிய சிறு கட்டுரையை தங்கள் மேலான விகடகவி மின் பத்திரிகையில் பிரசுரித்து எங்களை ஊக்கப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி
உங்கள் செயல் எங்கள் இறைப்பணியை தொடர்ந்து செய்ய ஆர்வத்தையும் முனைப்பையும் தரும் என்று நாங்கள் நம்புகிறோம்
மீண்டும் உங்கள் ஊக்கத்திற்கு நன்றி
இறைவன் அருள் உங்களுடன் என்றும் இருப்பதாக
முனைவர் B வெங்கடரமணி
பத்லாபூர் கிழக்கு

Leave a comment
Upload