
மயிலை கோலவிழி அம்மன் மற்றும் முண்டக கண்ணி அம்மனை தரிசிப்போம்!! - ஆரூர். சுந்தரசேகர்.
As there is a talk that this corona disease is a kind of ammai, we will pray to mundagakanni amman goddess to take away this disease and get releived from it...thanks to Aroor Sundarasekar for giving this timely article🙏
எஸ். சாய்லக்ஷ்மி
சிரிக்கதை - குப்புசாமி மாமாவும் குலேபகாவலியும்... - வேங்கடகிருஷ்ணன்
ஒருவாட்டி சதி பண்ணி சீட்டாட்டத்தில் ஜெயிச்சா மாதிரி, எல்லா தடவையும் நடக்குமா? அப்புராணியா இருக்காரே குப்பு மாமா... இவரால ஒவ்வொரு முறையும் மீனாட்சி மாமிதான் தண்டம் அழவேண்டியிருக்கு. அதான் அவர் டெபிட் கார்டை க்ளோஸ் பண்ணி, மாமி பியூஸ் பிடுங்கிட்டா!
சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை
தங்க ‘மாஸ்க்’! - மாலாஸ்ரீ
அடப்பாவமே... 20 ரூபா மாஸ்க் வாங்க காசில்லாத மக்கள் தவியா தவிக்கிறாங்க. சேலை முந்தானையால பெண்கள் முகத்தை மூடிக்கிறாங்க. இவங்க லட்சக்கணக்கில் செலவு செஞ்சு கோல்டு, வைரத்துல மாஸ்க் மாட்டி கடுப்பேத்தறாங்க. என்ன கொடுமை!
சுசிலா பாலகிருஷ்ணன், அண்ணாநகர்
வலையங்கம்...
அருமை. மக்கள் உணர வேண்டிய உன்மை.
சிவகாமாசுந்தரி
வியக்க வைக்கும் வியட்நாம் ஓட்டல்.... - மாலாஸ்ரீ
நம்ம நாட்டுல தங்கம் விலை கிர்ரென 40 ஆயிரத்துக்கு உயருது. இவங்க என்னடான்னா, தங்கத்திலேயே ஓட்டலை திறந்து வயிற்றெரிச்சலை கொட்டிக்கிறாங்க. எல்லாம் காசு, பணம், துட்டு, மணி, மணிதான் காரணமாம்!
யசோதா மணி, சைதாப்பேட்டை
இட்லி... - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
என்னப்பா இது... அப்பல்லோவில் தந்ததாக கூறிய ஒரு இட்லியை வைத்து, உம்ம வீட்டு இட்லி சுயபுராணத்தை கூறி, எங்களை ஜொள்ளு விட ! அதிலும் உம்ம நண்பரின் இட்லி கதை செம கலகல... எத்தனை அயிட்டம் சாப்பிட இருந்தாலும், சுடச்சுட இட்லி, சாம்பாருக்கு ஈடு இணை எதுவும் கிடையாது!
ஆரோக்கியவேல், சாலிகிராமம்
என்ன சத்தம் இந்த நேரம்? அதிசய நிகழ்வு... - வேங்கடகிருஷ்ணன்
சீனாவில் மஞ்சள் கால் பொத்தான் காடையின் கர்ணகடூர குரலுக்கு மலையே நடுங்குது. இவ்வுலகில் இதுபோன்ற ஒன்றிரண்டு அதிசயங்கள் இருக்கத்தான் செய்யுது.
ரோஹித் கிருஷ்ணா, மஸ்கட்
கொரோனா தோசை, மாஸ்க் பரோட்டா விற்பனை... - மாலாஸ்ரீ
அடடே... டைமிங் ஜோக் போலவே, கொரோனாவை பயன்படுத்தி மதுரையில் மாஸ்க் வடிவில் பரோட்டா, கொரோனா தோசையா? சாருக்கு 2 மாஸ்க் குடு. சூரி கூப்பிடுங்கப்பு... மாஸ்க் பரோட்டா பந்தயம் வைக்கலாம்!
ஏழுமலை, பொன்னேரி
தெரிந்த குறள்கள் - புரியும் வடிவில் - ஹைக்கூ... - வேங்கடகிருஷ்ணன்
தெரிந்த குறள்கள், புரியும் வடிவில் ஹைக்கூ... மிக சிறப்பான முயற்சி. பலே வெங்கடகிருஷ்ணா!
ராமச்சந்திரன், பெங்களூர்
எட்டு வயது இமாம்... - ஆர்னிகா நாசர்
எட்டு வயது இமாம் கதை மிக மிக அற்புதம். பெரியவர்கள் செய்யும் அனைத்து சடங்கு வழிமுறைகளை குட்டி இமாமாக செய்து, அதே சமயம் குட்டி பாலகனாக மற்ற சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது மிக நேர்த்தி.
சலாவுதீன், வாணியம்பாடி
ஓஷானிபோங்கா... - பொன் ஐஸ்வர்யா
பொன் ஐஸ்வர்யாவின் ஓஷானிபோங்கோ கதை மிக மிக அருமை. ஒரு தமிழ் தாய் ஆப்பிரிக்க குழந்தையை வளர்த்த விதத்தையும், அக்குழந்தை வளர்ந்து வாலிபனாகி, தாயாக வளர்த்தவள் இறந்ததும் இந்து முறைப்படி இறுதி சடங்குகள் செய்வதையும் மிக அழகாக விளக்கியிருக்கிறார்.
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
மயிலை கோலவிழி அம்மன் மற்றும் முண்டக கண்ணி அம்மனை தரிசிப்போம்!! - ஆரூர். சுந்தரசேகர்.
சுந்தரசேகரின் கோலவிழியம்மன், முண்டகக்கண்ணியம்மன் ஆகிய தலபுராணங்களை படித்து மெய்சிலிர்த்தேன். கண்விழித்து பார்த்தால்... ஆடி பொறந்தாச்சு! மிகச் சிறப்பு.
மாயா குப்புசாமி, வடபழனி
ஓஷானிபோங்கா... - பொன் ஐஸ்வர்யா
ஆப்ரிக்காவின் எல்லைகளில் துவங்கி ஜிம்பாப்வே நாட்டின் கனிமவளம், பொருளாதாரம், கலாச்சாரம் அனைத்து வர்ணனையும் அடங்கி விட்டது. பூகோளத் தேர்வில் உடனே சிறு குறிப்பு எழுதி விடலாம். ஆசிரியர் ஊரையும் காட்டி, உறவையும் காட்டி விட்டார். பயணக்கட்டுரையும், கதையும் ஒன்றுக்கொன்று பின்னிப் படர்ந்து பயணிக்கிறது. தலைப்பு கடுக்குமுடுக்கென்று இருக்கே என்று பார்த்தால் உடைத்த பின் இனிமையும், வாசமும் வீசும் பலாப்பழம் போல் இனிக்கிறது. பார்வதி பாட்டியின் பரிவு நம் மண்ணின் மணத்தை பறை சாற்றும் வேளையில் மபூலாவின் கைம்மாறு மனித நேயத்தின் மகத்துவத்தை காட்டுகிறது. கர்மா,விளைவு பற்றிய positive energy radiate ஆகி பரிமளிக்கிறது. பயண அனுபவத்தை சுவாரசியமான கதையூடே பகிர்ந்து வரும் ஆசிரியருக்கு Senior citizen சார்பில் “ஓஷானி போங்கா”.
சிவகாமாசுந்தரி
ஊட்டி சர்வதேச பள்ளிகள், கல்லூரிகளில் என்ன நடக்கிறது?- ஸ்வேதா அப்புதாஸ்
ஊட்டி மாவட்டத்தில் உள்ள சர்வதேச பள்ளிகள், கல்லூரிகளின் நிலைகளை தெளிவாக விளக்கினீர்கள். ஆனால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தனியார் பள்ளிகளின் வெவ்வேறு விதமான ஆன்லைன் வகுப்புகளினால் வீட்டில் இருக்கும் பெற்றோரும் மாணவர்களும் ஆளுக்கொரு தலையை பிய்த்துக் கொள்கின்றனர் என்பதே நிஜம்.
செண்பகமூர்த்தி, தாம்பரம்
காலமே போதி மரம் - 1 - ஒரு ராஜ-குமாரன் சம்பவம்! - என்.குமார்
குட்டிக்குட்டித் தீவாய் வட்டுபோட்ட சேலைக்காரி உடல் முழுவதும் கொடிபடர்ந்த பட்டு சேலைகண்டு சொக்கினதா கிடந்திருக்கிறார் நம் எழுத்தாளர்..திரு .குமார் அவர்கள். சொக்கிக் கிடப்பதும் சுகம்தானே...! இசையில் ...சொக்கிக் கிடப்பதும் சுகம்தானே...! இன்னும் இன்னும் சொக்கட்டுமே.. சொக்கினதை இன்னும் சொல்லட்டுமே...
சபீஷ், இந்தியா
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பெற்றோர்களைப் பற்றி இனி கவலைப் பட வேண்டாம் !! - ராம்.
சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வயதான பெற்றோரை தனியே தவிக்க விட்டுவிட்டு, வெளிநாடுகளில் வாழும் மகன்கள்/மகள்களுக்கு இது காஸ்ட்லி வரப்பிரசாதம்.
ராஜலட்சுமி, சூளைமேடு
காலமே போதி மரம் - 1 - ஒரு ராஜ-குமாரன் சம்பவம்! - என்.குமார்
சிறுவயதில் கேட்ட இசையில் மெய்மறந்து, அந்த இசையை தேடி தேடி கேட்டு அனுபவித்து, அந்த இசையை உருவாக்கியவரை நேரில் சந்தித்தபோது மெய்சிலிர்க்க வைத்ததை ராஜ-குமாரனாய் மிக அழகாக வர்ணித்த விதம் செம அட்டகாசம்... வார்த்தை ஜாலத்தில் கலக்கறீங்க குமார்!
கற்பகம் சீனிவாசன், அம்பத்தூர்
வாசகர் மெயில்...
இந்த வாரம், ஏன் ஒவ்வொரு வாரமும், நடக்கும் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் விவரமாக மக்களை சென்றடையச் செய்யும் முயற்சி பாராட்டுதற்குரியது
மரு.வெங்கட்ராமன், கோபி
வலையங்கம்...
அருமையான,நேர்மையான கருத்துக்கள். மக்கள் தான் பின்பற்ற வேண்டும்.
சிவகாமாசுந்தரி
கெட்ட பின்பு ஞானி?! - ஆர். ரங்கராஜ் (மூத்த பத்திரிகையாளர்)
சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆகும் பொருட்களினால் ஏற்படும் பொருளாதார இழப்பீட்டை ரங்கராஜ் தெளிவாக விளக்கியுள்ளார். இனியேனும் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிவகைகளை மத்திய அரசு உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.
மாயாவதி, மும்பை
கேரளா அரசை உலுக்கும் தங்கக் கடத்தல்! –ஆர்.ராஜேஷ் கன்னா.
அடடே... விகடகவியில் 2-வது த்ரில்லிங் கிரைம் ஸ்டோரி! பேஷ்... பேஷ்... வரவர விகடகவி டிஜிட்டல் உலகின் முதல் புலனாய்வு பத்திரிகையா மாறியது மிகுந்த மகிழ்ச்சி. ஸ்வப்னாவே கோல்ட் பிஸ்கட் மாதிரிதான் இருக்காங்க. கோல்டே கேரளாவுக்கு தங்கம் கடத்துச்சா? சேட்டன்களும் உடந்தையா? அழகுன்னாலே ஆபத்துதான்!
முரளிதரன், வியாசர்பாடி
விகாஸ் துபே என்கவுண்ட்டர்! - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
விகாஸ் துபே என்கவுண்டர் சம்பவத்தை த்ரில்லிங் கிரைம் ஸ்டோரி போல் ஜாசன் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். ஒருவர் போலீஸ் மீது கைவெச்சா, அவருக்கு என்கவுன்டர் நிச்சயம். ஆனால், போலீஸே மற்றவர்களை சாகடிச்சா... சாதி, அரசியல், அதிகார, பணபலம் காப்பாற்றிவிடும். இது எழுதப்படாத விதி.
ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர்
வலையங்கம்...
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஏற்படும் இன்னல்களையும் சமூக புறக்கணிப்பையும் மிகத் தெளிவாக வலையங்கம் விளக்கியது. மிகவும் கொடுமை.
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
ஓஷானிபோங்கா... - பொன் ஐஸ்வர்யா
நம்மூர் "பார்வதி பாட்டி " ஆப்ரிக்கா நாட்டில் என்று கதை ஆரம்பித்து அந்நாட்டிற்குள் நேஷனல் ஜியாக்ராஃபிக் ஆட்களை விட நாம் வேகமாக அனைத்தையும் சுற்றி பார்க்கிறோம் ஆசிரியரின் வர்ணனையின் அழகால். “மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூ சென்டாலே” என்று ஆப்ரிக்கா குழந்தை மபூலாவிற்கு தாலாட்டி அவளும் குழந்தையும் நாடு, மொழி உணர்வுகள் தாண்டி அன்பால் இணைகிறார்கள். பார்வதி பாட்டி அவனை வளர்த்த விதம், “நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” என்ற பாடலை. நினைவூட்டுகிறது. அந்நாட்டு ராணுவ அதிகாரியின் பாட்டியாய் நம் தாய் நாட்டின் இறுதி முறைப்படி அந்நாட்டில் நீங்கா துயல் கொள்கிறாள் பார்வதி பாட்டி. அந்த தாய்க்காக இன்டேபேல் மொழியில் நன்றி “ஓஷானி போங்கா” என்று (பாட்டியால் நம்நாட்டின் மைந்தனான) மபூலாவிற்கு கூறுவதாக கதையை நிறைவு செய்யும் பொழுது மனம் கனத்து ஒரு நிறைவு வருகிறது. ஆசிரியரோடு நாமும் ஆப்ரிக்கா நாட்டில் பார்வதி பாட்டியை சந்தித்து இறுதி விடை கொடுத்து வருகிறோம். மனம் தொடும் கதை.
மங்கள சுந்தரி (USA - Seattle)
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பெற்றோர்களைப் பற்றி இனி கவலைப் பட வேண்டாம்!! - ராம்.
வயது முதிர்வு அனைவருக்கும் உண்டு. ஆனால் அதில் நம்மை கவனிக்க யாருமில்லை என்ற நிலைமை நம் எதிரிக்கும் வரக்கூடாது. இது போல நிறுவனங்களுக்கு அரசு சிறப்பு சலுகைகள் தர வேண்டும். ராம் அவர்கள் தந்த தரமான பதிவுகளில் இப்பதிவும்மொன்று.
சபீஷ், இந்தியா
10 ஆயிரம் தேனியுடன் கர்ப்பிணி! - மாலாஸ்ரீ
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண்ணின் 10 ஆயிரம் தேனீ! இவங்க விளம்பர மோகத்துக்கு ஒரு அளவே இல்லையா? அந்த தேனீக்கள் கொட்டினா, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தாச்சே!
உமாமகேஸ்வரி, பெருங்களத்தூர்
தமிழகத்தில் இலவச மின்சாரம் விரைவில் ரத்து? - மாலாஸ்ரீ
ஐயையோ... ஊரடங்கு சமயத்துல இருமடங்கு மின் கட்டணம் வசூலிக்கிறதா மக்கள் புலம்பறாங்க. இதுல வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாச்சுன்னா... நடுத்தர, ஏழை மக்களின் நிலை பரிதாபம்தான். பார்த்து யோசிங்கப்பா... கூடிய சீக்கிரம் சட்டமன்ற தேர்தல் வருது!
திலோத்தமை நடராஜன், சேலம்
வாவ் வாட்ஸப்!
வாட்ஸ் அப் படங்கள் ஒண்ணு மாத்தி ஒண்ணு செமயா கலக்குதுப்பா... அதுவும் பரிசு கிணற்றில் இறங்கிய குழந்தை, ஒரு அறை விட்டதும் செல்போன் தரும் குழந்தைகள், தலைகீழாக ஒரு பெண்ணை நடக்க வைத்து பொருட்களை கூடையில் போடும் அழகி... எல்லாமே அட்டகாசம்!
கௌஷிக், தீட்சிதா, சூர்யா, சென்னை
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பெற்றோர்களைப் பற்றி இனி கவலைப் பட வேண்டாம் !! - ராம்.
Comment : A noble initiative. Very few are born to understand the needs of others and help. God bless you and your team to render service for decades..
சிஏ சுரேஷ், பாண்டிச்சேரி
வலைக்கள்ளன் - நெட்டில் சுட்டது.
அமரா் சுஜாதா அவா்களின் கதைகளில் ஆங்காங்கே குசும்புத்தனமான ஜோக்ஸ்கள் பரவியிருக்கும். அவரது கதைகளை படிக்கும்பொழுது, இதுபோன்ற ஜோக்ஸ்கள், கதையினை மேலும் விறுவிறுப்பாக்கும். அதுபோன்று, நமது வலைக்கள்ளனில் இந்த வாரம் இடம்பெற்ற சுஜாதாவின் ஸ்பூன் கதை அந்த ரகம்தான். பிரமாதம்! -
“நவோதயா” செந்தில், புதுவை-14
காலமே போதி மரம் - வாசகர் கடிதம் !
இயக்குனர் சரவணன்
நடிகர் முருகன் சே டிவி இயக்குனர்.
இயக்குனர் சஞ்சய் பாரதி.
இசையமைப்பாளர் சத்யா
Wow....kumar...beautifully scripted and the audio too took me back to travel along with you. Great feel😊😊
Fyi...I became a raja fan only after your friendship. When I used to listen to ARR those days...you changed my path and introduced me to listen to raja sir's re recording...
Seriously... first time in my 18years enjoyed the RR with all your explanation and I'm enjoying still..
Innikum sundari Kannal oru sedhi kekum bodhu (2 days back heard), fondly remembered you and thanked you for introducing me to a blissful music journey.... if not for you... romba porumai ya you have spent time talking about raja sir's music... I would not have enjoyed music all these years 👍🏻
Unakku kidaitha antha anubhavathai.... nee enakkum konjam share panni ...coz of that... I too became a crazy music lover. (not like you... you are extreme)....
All my good and bad times his music has uplifted me 🙏
Kumar....antha kavidhai....sooper and the reply from raja sir....class👏👏👏👏👏
பிரியா கிருஷ்ணன், யோகா
வெகு அருமை. கரைந்து போனேன் உன் எழுத்தில். அது எப்படி உன்னால் வெட்ட வெளியில் கொட்டிக்கிடக்கும் ரத்தினங்கள் அனைத்தையும் கூட்டிக் கொடுக்க முடிந்தது? நீ நிச்சயமாக தனியே நடக்க முடியாது. உன் பின்னால் உன்னோடு ஓடி வரும் ரசிகர்களின் அலை...
சியாமளா, சென்னை
அருமையான பதிவு. இத்தனை அழகான நடையில் யாரும் எழுத முடியாது. உணர்வு பிரவாகத்தில்... நானும் நனைந்து விட்டேன். சம காலத்தில் நானும் உன் அருகில் பயணித்ததால்.. இன்னும் ஆழமாக உணர முடிகிறது. எனக்கு இளையராஜாவின் பல பரிமாணங்களை புரியவைத்தது நீதான். இன்னும் இன்னும் ஏராளமான இனிய நினைவுகள்...
நன்றி நண்பா.!
நானும் ஒரு நாள் அவரை காண வேண்டும்...🎼
எஸ். குமாரசாமி, போயட்
Dear Kumar excellent article!
Congrats!!
I could see an emotional speech from the heart which is very true and informative
dear 3rd standard Kumar 😍
Everyone should realise the fact you had told Kumar
ரேண்டி, சினிமாட்டோகிராஃபர்
அந்த அவன் தான் அந்த இசை தேவதையை எங்களுக்கு அறிமுகம் செய்த '' அவர் ''..
அந்த அவன்(ர்) குரல் வழியே நாங்கள் அவரை தரிசிக்கிறோம்..
நன்றி.. உங்களை பகிர்ந்ததற்கு.. 🙏🏻🙏🏻🙏🏻
ரேணுகா கல்யாண், சென்னை
படித்தேன்..
காலமே போதி மரம்..
தவமிருந்ததால் கிடைத்த தரிசனம்..
அதுவே இறைவனின் வரம்...
நின் பிறப்பிற்கு இருவர்..
உந்துதலக்கு கலை ஞானம்...உடன்
இசைஞானி.
மற்றும் திரை ஞானிகள்..பலர் பலர்.
விடா முயற்ச்சியும்
தங்கள் உடன் பிறந்த திறமையும்....
நடத்தையில் நன்றியும்
பணிவும்...
பணியில் பக்தியும்
பழகுபவர்களிடம் நேசத்தோடு, பாசமும் வாஞ்சையும் காட்டி...
முக்கியமாக
எல்லோரிடமும் காட்டும் மதிப்பு மிகுந்த
மதிப்பில்லா மரியாதையும்...
தங்கள் இந்த மகோன்னத நிலையை அடைய காரணமன்றோ..
இசைத் தமிழ் நீ செய்த அருஞ் சாதனை..
திரு. குமாரை திரை உலகிற்கு அடையாளம் காட்டியது.
உன்னால் குமார் இன்னும் செய்திடுவார்..
செய்ய காத்திருக்கிறார்
பற்பல "சாதனை"
இதுவே நமக்கு... உமக்கு போதி மரம் தந்த "போதனை"
இனி வாழ்வில் இல்லையே உமக்கு "வேதனை"
வேதனையையே வேதனை படச் செய்து..
சோதனையில் சாதனை படைப்பீர்.
திரை வையகத்தில் வெற்றி வேந்தராக வலம் வருவீர்..
இறை அருளோடு...
திறமையின் மேற் பார்வையில்
வரும்
காலத்தில் திரை உலகம் எனும் ராஜ்ஜியத்தில் முடி சூடா மன்னனாக கோலோட்சுவீர்.. .
கொடி கட்டி பறப்பீர்.
இது திண்ணம்...🙏🏻
டிஆர் சத்யநாராயணன், சென்னை
பரவசம்... தனக்கான தரிசனத்தைக் கண்டடைபவர் பெரும் பேறு பெற்றவர்... உங்கள் தரிசனத்தில் மூழ்கினேன்.
கவிஞர். வெண்ணிலா
ரசனைக்காரர் நீங்கள் என்பது இதில் நன்றாகத் தெரிகிறது. இயல்பான, நம்மிடம் நேரில் பேசுவது போன்ற மொழி நடை சிறப்பு. வாழ்த்துகள்.
கவிஞர். பாடலாசிரியர், பார்வதி
Awesome Experience Kumar. Couldn't believe it. You are Great Man 👌👏🙌👍😍💝💐
காமராஜ், எஃப்ஒஎச்
எப்படி ஒரு ரசிகனின் விருப்பம், ஏக்கம், ஆசை, லட்சியம் நிறைவேறியது என்று உன் அனுபவங்களை படிப்பவர்களுக்கும் முன் உதாரணமாக இருக்கும் என நம்புகிறேன்.
சுஜாதா, மோக்ஷா யோகா, சென்னை
அருமையாக எழுதுகிறீர்கள் நண்பரே. ஒவ்வொரு பத்தியிலும் ரசனை தோய்ந்த கவிதை. ஆத்மார்த்தமாக இருந்தது.
ஹௌ டு நேம் இட், நத்திங் பட் விண்டு - இரண்டும் இசை சொர்க்கம் எனலாம். ராகதேவன் என்று சும்மாவா சொன்னார்கள்?
உங்கள் எழுத்துப் பதிவு கவிதை என்றால் குரல் பதிவு இனிமையான நினைவு கூரல். பகிர்ந்தமைக்கு நன்றி.
முரளி கிருஷ்ணா, பெங்களூரு
அருமை குமார் சார். இசைஞானி சொன்னது போல...உங்கள் நிழல் எப்போதும் நடக்க அன்பின் வாழ்த்துகள் ❤️.
இலகுவான மொழியில் மயிலிறகு தொனியில் இதமான ஆலாபனையாக இருக்கிறது உங்கள் சொல்முறை...❤❤❤
# தம்பிச்சோழன், நடிகர், நடிப்பு ஆசான், 'நடிப்பு' இதழ் ஆசிரியர்
Kalatthin KATTAAYAM! Irayin KARUNAI!
என். லக்ஷ்மி நரசிம்மன், பாகரைன்
இசைஞானியின் புத்தகத்தில், குமார் அவர்கள் எழுத்தியிருந்த ( தனியே நடக்க விருப்பம்., நிழல் படுத்துகிறதே...) வாசகத்தைப் போலவே வாசித்தவர்கள் மனதை 'ஒரு ராஜா - குமாரன் சம்பவம் ' ' கட்டுரை தொடர்ந்து வந்து ' படுத்த ' ப்போகிறது.
மகா, திருப்பூர்
வெள்ளியை உருக்கி ஓட விட்டாற்போல என்ன ஒரு நடை !!? என் .குமாரிடம் விஷயம் இருக்கு .-ரங்கநாதன்.
Nice presentation with music. இது அபிராமி அபிராமி வகை ஆதர்சம் . அந்த உணர்வை முழுமையாக சொல்லிவிட்டதாக நான் நினைக்கவில்லை . நன்றாக இருந்தது .💐
ரங்கநாதன், சென்னை
நம் அப்பனை மிஞ்ச ஆளே இல்லை💕
சிந்து, திருச்சி
காலமே போதிமரம் - 1 என்னும் ஒரு ஆர்ட்டிகிள் என்.குமார் அவர்கள் எழுதியதை படித்தேன். அவருடைய சிறுவயது சம்பவத்தை மனதில் கொண்டு எழுதி இருக்கிறார். அவர் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே இளையராஜா அவர்களை தன்னுடைய மனதில் குருவாக ஏற்றுக்கொண்டு அவரை எப்படியாவது எப்போதாவது சந்தித்து விடலாம் என்று நினைத்து அதை செய்தும் காட்டியிருக்கிறார். அவருக்கு எந்த அளவுக்கு குருபக்தி இருந்திருந்தால் அவரிடமே நேரடியாக சென்று, அவருடன் பழகிய, பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கும். உண்மையிலேயே இது அவரிடம் உள்ள மிகுந்த தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. கடவுள் அவருக்கு வரங்களை வாரி வழங்கியிருக்கிறார். இந்த முதல் அத்தியாயத்தில் ராஜகுமாரன் என எழுதியிருந்தார். உண்மையிலேயே அவர் ஒரு ராஜகுமாரன் தான். அவர் எழுத்து நடை எல்லாமே அவருடைய எண்ணங்களை பிரதிபலித்து நமக்கும் வாசிக்கும் திறனைக் கூட்டுகிறது. குமார் சார் அவர்களுக்கு மிக்க நன்றி.
- மாட்டிக்கொண்டான். ஆம், மாட்டிக்கொண்டான்.
- குளித்து முடித்து விட்டார். அவனும்!
- நாட்கள் புது புது உடை பூண்டன.
- செய்தது தவமாக இருந்தால் கிடைப்பது வரமாக தானே இருக்கும்.
என்னைக்குமே எனக்கு நீங்க வியந்து பார்க்கும் "ஒரு பிரமிப்பு தான்" குமார்.
இவன்ஸ்ரீ, சென்னை
Splendidly written. My best wishes. Ping me when you continue this.#
இரா. முருகன், எழுத்தாளர்
Super Kumar... இத்தனை பக்தியா? கடைசி வரி மிகவும் பிடித்தது... #
சுபத்ரா, சென்னை
Neenga nichayam oru Naal migapperiyaa aalaa varuveenga... ilayarajava paakka wait panna payyan madhiri ungala paakkavum oru koottam nichayam uruvagapogudhu... am waiting for that day 😊
மகேஷ் ஜானகிராமன், டைரக்டர்
ஆரம்பமே பேரின்பம், அருமை
அஜயன் பாலா, எழுத்தாளர், இயக்குநர்
காலத்தின் வல்லமையை கண் முன் நிறுத்திய மிக அழகான பதிவு.
ரசனைக்குறியதாய் அநேக இடங்கள்.
கணேஷ், தமிழ்ச் சொற்பொழிவாளர், கலை ஆராய்ச்சியாளர்
Very nice to read your article and true words sir. very right not everyone can make impact in others life and it's so nice to hear that Raja sir has been such a great inspiration for you..🤝👍
சபாபதி, சென்னை
அருமை..... சொல்ல வார்த்தைகளே இல்லாத பதிவு. 💐
செந்தில், இசையமைப்பாளர், மும்பை
அ(இ)சை போட்ட தருணங்கள் அருமை. படிக்கும் போது கண் முன்னே நடப்பது போலவே உள்ளது. வாழ்த்துக்கள்.👌👌👌
பாசு - வித்யா, மும்பை
Super👏🏻👏🏻
Congrats👍🏻👍🏻
டாக்டர் ஜி.என். கோபாலா கிருஷ்ணா, கோவை

Leave a comment
Upload