
ஏப்ரல் 9 தேதி,கேரளாவிலும் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.
பத்தாண்டுகளாக கேரளாவில் பினாராய் விஜயன் தொடர்வது அரசியல் ஆச்சரியம்.
ஈ.கே.நாயனாருக்கு பிறகு அதிக காலம் முதல்வராக இருக்கும் இரண்டாவது மார்க்சிஸ்ட் தலைவர் இவர்
அவரது ஆட்சிக்கு களங்கும் கற்பிக்கும் வகையில் சபரிமலையில் தங்கம் களவு போனது போன்ற சம்பவங்கள் பினாராய் விஜயனுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளா வாக்காளர்கள் இப்போதைய ஆட்சியின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
சபரிமலை என்பது பெரும்பாலான இந்துக்களுக்கு முக்கியமான புண்ணிய ஸ்தலம்.
எதிர்க்கட்சிகளும் இந்த விஷயத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
தேசிய அரசியலில் 'இண்டியா' கூட்டணியில் ஓர் அணியில் இருந்தாலும் கேரளாவில் காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிரெதிர் துருவங்களாக உன்னை தோற்கடித்து காட்டுகிறேன் என்று உறுமீக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் கூட்டணி கேரளாவில் எதிரணி. இதில் வேடிக்கை கம்யூனிஸ்ட்டை பாஜகவின் பி டீம் என்று வர்ணிக்கிறார் ராகுல் காந்தி.
கேரள முதல்வர் காங்கிரஸ் கட்சி பாஜகவின் பி டீம் என்கிறார். கேரளாவில் பாஜக பாதிப்பு அந்த அளவுக்கு இருக்கிறது.
காங்கிரஸ் கம்யூனிஸ்ட் சண்டை காரணமாக அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பிஜேபி மெல்ல அங்கு துளிர்க்க ஆரம்பித்துவிட்டது.
அதனால் தான் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் இறங்கிய நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சரும் ஆனார்.
அதனைத் தொடர்ந்து டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. கிட்டத்தட்ட 14.71% பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதித்தது.
அதுவும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக வசம் போனது எதிர்பாராத திருப்புமுனை.
இந்த தேர்தலில் 27 மில்லியன் வாக்காளர்கள் 140 சட்டமன்ற தொகுதிகளில் களத்தில் உள்ள 890 வேட்பாளர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று இப்போது திட்டமிட ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த முறை பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று அந்த கட்சி உறுதியாக நம்புகிறது.
பாரத் தர்மா ஜனசேனா போன்ற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணிக் கட்சிகள் 42 வேட்பாளர்கள் பாஜக வேட்பாளர்கள் 98 பேர் என்று களத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு சவாலாக இருக்கிறார்கள்.
கேரளாவை பொறுத்தவரை 47 சதவீதம் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள். இவர்கள் வாக்கு வங்கியை தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் நம்பி இருக்கிறது. அ
இந்துக்கள் ஓட்டு சிந்தாமல் சிதறாமல் தாமரைக்கு வர வேண்டும் என்று மோடி ,அமித்ஷா கூட்டணி திட்டம் போட்டு பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம.
காங்கிரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதை சிரித்தபடியே கவனிக்கும் அமித் ஷா மோடி கூட்டணி இந்த முறை தாமரை மலரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

Leave a comment
Upload