தமிழகத்திற்கு யார் அடுத்த முதல்வர் என்ற கருத்து கணிப்புகள் வர தொடங்கி விட்டது.

ஒரு நாள் எடப்பாடி பழநிசாமி முதல்வர் என்றும் ...

அடுத்த நாள்... மு.க.ஸ்டாலின் முதல்வர் என்றும் இன்ஸ்டெண்ட் கருத்து கணிப்புகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

எனக்கு கருத்து கணிப்புகள் மீது நம்பிக்கை எப்போதும் இருந்ததில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து.


ஒரு பக்கம் வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது ஜோசப் விஜய் , மு.க.ஸ்டாலின் பார்க்க பகலில் சிறார்களை பெற்றோர்கள் தலைவர்களை காட்ட அழைத்து வருகின்றனர்.
திமுக , அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது.
சீமான்,ஜோசப் விஜய் இருவரும் வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் , பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பிலும் டெல்லி தலைமை ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது.
தேர்தல் ரிசல்டுக்குள் எங்கள் தலைமை யார் வேட்பாளர்கள் என்று அறிவிக்குமா என்று இரண்டு கட்சி தொண்டர்கள் சென்னையில் கூலாக பேசிகொண்டனர்.

திருவிக தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி வேட்பாளரராக அறிவிக்கப்பட்டு விட்டார்.

திருமாவளவன் டெல்லி அரசியலிருந்து தமிழக அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்து விட்டார். சட்டமன்ற ரிசல்ட் தொங்கு சட்டசபை அமையுமா என்று திமுக மேலிடம் இவரிடம் விசாரித்ததாக அறிவாலய வட்டார தகவல் வெளியாகி உள்ளது.

திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் ஒரு தொகுதிக்கு தேர்தல் செலவு கிட்டதட்ட ஒவ்வொருவரும் தலா ரூ20 கோடி வரை முதலீடு செய்ய வேண்டும் என்று பேசி வருகின்றனர். விட்டமின் ப விலைவாசி ஏற்றத்தால் வாக்காளர்களுக்கு அதிகமாக தர வேண்டும் என்று இரு கட்சியினரும் ஆலோசனை செய்து வருகின்றனர்.

தேர்தல் ரிசல்ட் தற்போதைக்கு மிக கடினமாக இருக்கும் என்பதால் திமுக மற்றும் அதிமுக பரப்புரையில் இரு கட்சிகளையும் திட்டி பேசி வருகின்றனர்.

ஜோசப் விஜய் பற்றி திமுக மற்றும் அதிமுகவினர் பேசுவதை தவிர்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே தான் போட்டி என்ற பிம்பத்தினை இரு கட்சியினரும் உருவாக்கி வருகின்றனர்.

தமிழக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சந்தீப் ராய் ரதோரை நியமிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.

பிரதமர் மீது திமுக தலைவரின் பாசம்

தேர்தல் களம் வரும் வாரத்தில் சூடுபிடித்து அனல் பறக்கும் என்பதே தற்போதைய நிலவரம்.

Leave a comment
Upload