தொடர்கள்
கொடுரம்
போர் வேண்டாம்- கண்ணாழ்வார்

ட்ரம்பிற்கு எதிராக ஈரான் நாட்டின் மீது போர் வேண்டாம் என்று அமெரிக்க மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கி விட்டனர்.

நேட்டோ நாடுகளும் டிரம்ப் அழைத்தும் அமெரிக்காவிற்கு சப்போர்ட் செய்து ஈரான் மீது போர் புரிய வரவில்லை..

அமெரிக்க வீரர்கள் ஈரானின் ஏவுகணை வீச்சிற்கு பலியாகி அந்த செய்திகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் ஜாம்பவன் போர் கப்பல்கள் கூட ஈரானின் ஏவுகணை தாக்குதல்களில் பெருத்த சேதம் அடைந்துவிட்டது என்ற தகவல்.

இஸ்ரேல் வான் தடுப்பு அஸ்திரங்கள் எல்லாம் செயல் இழந்து ஈரான் ஏவும் சூப்பர் சானிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டு இஸ்ரேல் நகரங்கள் வெடித்து சிதறி கொண்டிருக்கிறது.

ஈரானின் முக்கிய நகரங்கள் மீது இஸ்ரேலும் ஏவுகணை தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிறது.

ஈரான் நாட்டில் அணுகுண்டு தயாரிக்கிறார்கள் என்ற சந்தேகத்தால் அதன் தலைவர் மீது ஏவுகணை வீசி கொன்றும் அந்த நாட்டின் எண்ணெய் வளங்கள் மீதும் இஸ்ரேல் துணையுடன் அமெரிக்கா போர் ஆரம்பித்து 30 நாட்களுக்கு மேலாகிறது.

20260302174120806.jpg

ஈரானிடம் அணுகுண்டு இல்லை என அமெரிக்க சொல்லிவிட்டது.

ஈரானின் முக்கிய எண்ணெய் எடுத்து செல்லும் ஹர்மூஸ் ஜலசந்தி அமெரிக்கா போருக்கு முன்பு திறந்து இருந்தது.

போரினால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது.

ட்ரம்ப் போட்ட தப்பு கணக்கினால் ஈரான் போரினால் அமெரிக்காவிற்கு பல ட்ரில்லியன் டாலர் செலவு ஆனது.

ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கவினால் தற்போது வரை திறக்க முடியவில்லை.

ஈரான் சளைக்காமல் இஸ்ரேல் நகரிலும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஏவுகணை வீசி அமெரிக்காவிற்கு பீதியை கிளப்பியதால் போருக்கு லீவு என்று சொல்லி அமெரிக்க கப்பல்கள் பின்வாங்கியது.

20260302180049130.jpeg

ஈரானின் கட்டுபாட்டில் ஹர்மூஸ் ஜலசந்தியை விட்டு அமெரிக்கா வெளியேறும் பணியினை துவங்கி விட்டது.

இத்தனை நாள் கட்டி காப்பாற்றி வந்த உலகின் பெரிய வல்லரசு இமேஜ் அமெரிக்காவிற்கு தற்போது சிதைந்து விட்டது.

கடந்த 50 ஆண்டு கால போர் வரலாற்றில் ஈரான் மீதான போரில் அமெரிக்கா மிகப்பெரிய பின்னடைவினை சந்தித்துள்ளது.

அமெரிக்காவின் ஆயுதங்களை விட ஈரான் ஆயுதங்கள் அதிகளவில் ஸ்டாக் வைத்து தாக்கி வருகிறது.

வெறும் ரூ 40 ஆயிரம் மதிப்புள்ள ட்ரோணை ஈரான் ஏவி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள வான் பாதுக்காப்பு அமைப்புகள் , போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் எல்லாம் பெருத்த சேதம் விளைவித்து விட்டது.

20260302180654587.jpeg

அமெரிக்காவில் தற்போது ட்ரம்ப் ஆட்சியில் தொடர வேண்டுமா என்று கேள்வியை கேட்டு அங்கு போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை உருவாகி விட்டது.

வெள்ளை மாளிகை அருகே போராட்டம் நடந்த போது துப்பாக்கி சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா பொருளாதாரம் சிதையும் தருவாயில் இருப்பதோடு , இனி வரும் காலங்களில் அமெரிக்கர்கள் உலகம் முழுவதும் சுதந்திரமாக சென்று வர முடியாத நிலை ட்ரம்ப்பால் ஏற்பட்டதாக கவலை தெரிவிக்கின்றனர்.

சீனா , ரஷ்யா , இந்தியா போன்ற நாடுகள் எப்படியாவது ஈரானுடன் பேசி 3 வாரத்திற்க்குள் போரினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது ட்ரம்ப் பேசி வருகிறார்.

ஈரான் போர்நிறுத்ததிற்கு வரவில்லை என்றால் கற்காலத்திற்கு செல்லும் நிலை ஏற்படும் என்று ட்ரம்ப் எச்சரிக்கையை சீனா கண்டணம் தெரிவித்து , டிரம்ப் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.

ஈரான் போரினால் அமெரிக்காவில் ஒரு கிலோ தக்காளி ரூ600 க்கும் வெங்காயம் ரூ800 விலையேற்றம் கண்டு உணவு பொருட்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க மக்கள் எதிராக ட்ரம்ப் செயல்படுவதால் அவர்களின் கோபத்தையும் ட்ரம்பால் தாங்க முடியாது.

ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீட்பது அவசியம் இல்லை என்று அதிபர் டிரம்ப் தனது வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகளிடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

20260302175938125.jpeg

அமெரிக்கா, ஈஸ்டர் பெருவிழாவிற்கு முன்பு ஈரான் போர் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று போப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ட்ரம்ப் இமேஜ் சரிந்து வருவதை அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கைகள் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.

இவ்வளவு நாள் உலக போலீஸ்காரன் மற்றும் வல்லரசு என்றஅமெரிக்காவின் இமேஜ் உலக நாடுகளிடம் சரிந்து விட்டது.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு