
திமுக ,அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தில் சுற்றி சுழல ஆரம்பித்துவிட்டது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் …இருசக்கர வாகன திட்டம் மூலம் வேலைக்கு செல்லும் மகளிர் இரு சக்கர வாகனம் வாங்க ரூபாய் 25,000 மானியம் , முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும், மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை ரத்து செய்யப்படும், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

இல்லத்தரசிகளின் பணி சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ப்ரிட்ஜ் விலை இல்லாமல் வழங்கப்படும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள வேளாண்மை பயிர் கடன் தள்ளுபடி.
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.ஒரு கிலோ பாமாயில் ஒரு கிலோ பருப்பு மாதத்தோறும் ரேசன் கடையில் வழங்கப்படும் என்று எடப்பாடி அறிவித்தார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் … மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும்.
விவசாயிகளுக்கு நவீன பம்செட்
மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆண்டு வருமான வரம்பு 5 லட்சம் ரூபாயாகவும், காப்பீட்டு தொகை 10 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
அரசு அமைப்புகளில் ஏற்படும் 1.50 லட்சம் காலிப்பணியிடங்கள் கால தாமதமின்றி நிரப்பப்படும்.

ரூ8,000 மதிப்பிலான கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி, ஃப்ரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாக வாங்க இல்லத்தரசி என்கிற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

பாமக தனது தேர்தல் அறிக்கையில் ரு10 க்கு மதியம் சோறு வழங்கப்படும் அதில் சாம்பார். ரசம் . கூட்டு பொறியல் இருக்கும் என்று அன்புமணி ரமாதாஸ் அறிவித்தார்.

ஜோசப் விஜய் தனது வாக்குறுதியாக ப்ளஸ் டூ முதல் பி எச்டி வரை படிக்க ரு20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்பட்டும்.தொழில் துவங்க ரு 25 லட்சம் பிணையில்லா கடன் வழங்கப்படும் என்று கியாரண்டி என்று பேசினார்.

உலகத்துக்கே சோறு போட்ட தமிழ்நாடு, இன்று இலவசங்களால் நாசமாகிப் போயிருக்கிறது. மக்களைச் சோம்பேறிகளாக்கி, கையேந்தும் நிலைக்குத் தள்ளும் இலவசத் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, உற்பத்திப் பெருக்கத்தையும், வேலை வாய்ப்பையும் உருவாக்க வேண்டும் " என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

Leave a comment
Upload