தொடர்கள்
கவர் ஸ்டோரி
" திருச்சபை பௌர்ணமியும் ஏசுவின் உயிர்ப்பு விழாவும் " - ஸ்வேதா அப்புதாஸ்.

கிறிஸ்தவர்களின் மிக முக்கிய விழா ஏசுவின் உயிர்ப்பு திருவிழா.

விபூதி திருநாள் அன்று துவங்கி நாற்பது நாள் நோன்பு இருந்து அனுசரிக்க படும் ஈஸ்டர் திருநாள்.
20260303012144287.jpeg

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சைவ உணவை உண்டு அசைவ உணவை முழுமையாக தவிர்த்து தினமும் ஒரு வேளை உணவை தவிர்த்து நோன்பு இருக்கிறார்கள்.
ஏசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து பதினான்கு ஆலயங்கள் விசிட், பாத யாத்திரை, சிலுவை ஏந்தி கேரளா குருசு மலையில் இரவு ஏறி சிலுவை பாதை செய்து வருவது ஒரு நேர்த்தி கடன் என்று கூறுகிறார்கள்.
ஏசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூறப்படும் தவ காலம் அல்லது தபசு காலம் ஒரு அருளின் காலம் என்றும் மனம் மாறும் காலம் என்று அனுசரிக்க பட்டுவருகிறது.
ஏசுவின் சிலுவை பாடுகளை நினைவுகூரும் வகையில் பரிகார பவனி நடைபெற்றது.
20260303012954849.jpeg

ஊட்டியில் பரிகார பவனி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் துவங்கி குருசடி திருத்தலத்தை அடைந்து ஆயர் அமல்ராஜ் தலைமையில் சிலுவை பாதை மற்றும் திருப்பலி நடைபெற்றது.
20260303013602841.jpeg
ஆயர் அமல்ராஜ் கூறும்போது, " உலகத்தில் போர் நிறுத்தப்பட்டு அமைதி நிலவவேண்டும்" என்று பிராத்தனை செய்தார்.

ஈஸ்டர் திருவிழாவிற்கு முந்தின வியாழக்கிழமை புனித எண்ணெய்கள் புனித படுத்தும் கிரிஸ்மா திருப்பலி மிக முக்கியமான ஒன்று.
ஒரு குழந்தைக்கு ஞானஸ்தானம் வழங்கும்போதுகிரிஸ்மா எண்ணெய் பூசப்படுகிறது.
உறுதி பூசுதல் நேரத்தில் இதே எண்ணெய் பூசப்பட்டு புனித படுத்த படுகிறது.
பின்னர் ஒருவர் இறக்கும் தருவாயில் இறுதியாக இந்த எண்ணையை பூசி அமைதி படுத்த படுவார்
ஈஸ்டர் திருவிழாவுக்கு முந்தின ஞாயிற்று கிழமை தான் குருத்தோலை ஞாயிறு சிறப்பிக்கப்படுகிறது.

20260303015437683.jpeg
ஜெருசலேம் நகரில் ஏசுவை கோவேறு கழுதைமேல் ஏற்றி வரவேற்ற நிகழ்வை நினைவு கூறும் ஞாயிறு தான் குருத்தோலை ஞாயிறு.



இந்த குருத்தோலைகள் தான் அடுத்த வருடம் விபூதி புதனுக்கு எரித்து சாம்பலை நெற்றியில் பூசி தவ கால நோன்பு துவக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 25 ஆம் நாள் ஏசுவின் பிறப்பு கிறிஸ்துமஸ் திருவிழாவாக வருடந்தோரும் கொண்டாடப்படுகிறது.
அதே சமயம் ஏசுவின் உயிர்ப்பு பெருநாள் ஈஸ்டர் திருவிழா தேதி மாறிவருகிறது இது எப்படி என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
ஏசு சிலுவை சுமந்து சென்று பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டு இறந்து மூன்று நாள் கழித்து உயிர் பெற்ற ஞாயிற்று கிழமை தான் ஈஸ்டர் சண்டே கொண்டாடப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிற்று கிழமை ஒரே தேதியில் வருவதில்லை.
ஈஸ்டர் திருவிழா சிறப்பிப்பது முழு நிலா பௌர்ணமியை பார்த்து தான்.
20260303014714622.jpeg
திருச்சபை பௌர்ணமி வசந்த சமப் பகலிரவு நாள் என்பது மார்ச் 20 அல்லது 21 அன்று நிகழும், இரவும் பகலும் சமமான அளவு 12 மணிநேரம் இருக்கும் வசந்த காலத்தின் துவக்க நாளாகும்.
இந்த நிகழ்வில் சூரியன் பூமித்திய ரேகையின் மீது நேராக இருக்கும்.
இந்த நிகழ்வில் வட அரைக்கோளத்தில் வசந்த காலத்தையும், தென் அரைக்கோளத்தில் இலையுதிர் காலத்தையும் குறிக்கும்.
ஈஸ்டர் ஏசுவின் உயிர்ப்புப் பெருவிழா திருச்சபை பௌர்ணமி அல்லது பாஸ்கல் பௌர்ணமி என்று கூறப்படுகிறது.
மார்ச் மாதம் 21 ஆம் தேதிக்கு பின் ஏப்ரல் 18க்குள் வரும் பௌர்ணமி.
இந்த பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஞாயிற்று கிழமை ஈஸ்டர் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த திருச்சபை பௌர்ணமி ஏப்ரல் 1 ஆம் தேதி முழுஇளம்சிவப்பு நிலவு தோன்றியது அதை தொடர்ந்து இந்த வாரம் ஏப்ரல் 5 ஆம் தேதி ஏசுவின் உயிர்ப்பு பெருவிழா ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசு இறப்புக்கு முன் முழு நிலவு பௌர்ணமி ஏற்பட்டுள்ளது.
அதற்கு பின் மூன்று நாள் கழித்து அவர் உயிர்பெற்றார்.
ஈஸ்டர் ஏசுவின் உயிர்ப்பு பெருவிழாவை பற்றி அருட்தந்தை டினோ பிராங்க் கூறும் போது,

20260303014519540.jpeg
" புனித வெள்ளியன்று ஏசுவின் வாழ்வு முடிந்து விட்டது என்றால் நம்மை உலகமே ஏமாளிகள், முட்டாள்கள், உலகம் தெரியாதவர்கள் என்று உலகமே எள்ளி நகையாடியிருக்கும். புனித வெள்ளியை தாண்டி ஒரு ஞாயிறை கொண்டுவந்தார் அது தான் உயிர்ப்பின் ஞாயிறு அந்த உயிர்ப்பின் காரணமாக கிறிஸ்தவம் உருவாகி நாம் அனைவரும் ஏசுவின் அன்பு பிள்ளைகளாக இருக்கிறோம்.


உயிர்ப்பு விழா இரண்டு காரியத்தை கூறுகிறது நாம் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய வாழ்க்கைக்கு மாறவேண்டும்.
கடந்த 40 நாட்களாக நோன்பு இறைச்சி உண்ணாமல் இருந்தது பல ஒருத்தல் முறைகளை
கடைபிடித்து வந்ததை போல புதிய வாழ்க்கையை பின்பற்ற வேண்டும்.
மரிய மக்தலாவை போல என் ஆண்டவர் உயிர்த்துவிட்டார் என்று நம்பி ஆண்டவரின் முதல் நற்செய்தி பணிப்பெண்ணாக உயர்ந்தது போல நாமும் பின்பற்றி ஏசுவின் உயிர்ப்பை ஏற்று தன் புதிய வாழ்வை அவர் எப்படி துவக்கினார் என்பதை உணர்ந்து நாமும் அவரை போல மனம் மாறி உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடுவோம் ".
ஏசுவின் பாடுகள் இறப்பு மற்றும் உயிர்ப்பு இயற்கையோடு ஒன்றித்து இருப்பது ஆச்சிரியமான ஒன்று.
வசந்த காலமும் வானத்தில் ஜொலித்து கொண்டிருக்கும் முழு நிலா
ஏசுவின் உயிர்ப்பை கொண்டாடிக்கொண்டிருப்பதை பார்க்கமுடிகிறது.
அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்.