தொடர்கள்
வலையங்கம்
கதாநாயகன் இல்லை.... வில்லன்

20260303144310362.jpg

திராவிட கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில் மக்ளுக்கு இலவசம் என்று வாரி வழங்கி ஓட்டு வாங்குவதற்கான அரசியலைத்தான் பார்க்கிறதே தவிர தமிழகத்தில் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு பற்றி அந்த அறிக்கைகளில் பெரிதாக எதுவும் இல்லை.

குறிப்பாக தடுப்பு அணைகள் கட்டுவது, மழைக்காலத்தில் வெள்ளம் வந்து நீரை சேமிக்க முடியாமல் கடல் நீரில் விரயம் ஆவது போன்றவற்றை தடுக்க ஆறுகளை இணைப்பது, மழைநீர் சேகரிப்பு, பள்ளிக் கட்டடங்களில் நவீன வசதி, குடிநீர் தேவை பூர்த்தி செய்வது குறிப்பாக டாஸ்மாக் மூடுவது போன்ற எந்த நல திட்டங்களிலும் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. திமுக இல்லத்தரசிக்கு 8,000 கூப்பன் என்று அறிவித்தால், அதிமுக சிறப்பு உதவி திட்டம் 10,000 என்று போட்டி போட்டு அறிவிக்கிறது. இது தவிர இலவச பிரிட்ஜ் திட்டம் என்ற ஒன்றை அதிமுக அறிவித்திருக்கிறது. விஜயும் தன் பங்குக்கு அன்னபூரணி திட்டம் அண்ணன் சீர்திட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்று அடித்து விட்டு இருக்கிறார்.

ஏற்கனவே தமிழகம் 10 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. மக்கள் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு காண திட்டங்களை பற்றி யோசிக்காத அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை கதாநாயகன் கதாநாயகி என்று கொண்டாடுகிறது. உண்மையில் இந்த தேர்தல் அறிக்கைகள் மக்கள் நல திட்டங்களை முடக்கி இலவசங்களை அறிவித்து தமிழக வளர்ச்சிக்கு வில்லனாகத்தான் இந்த தேர்தல் அறிக்கைகள் செயல்பாடு இருக்கும். ஆனால் இந்த இலவசம் என்ற வியாதி இந்தியா முழுவதும் பரவி விட்டது என்பது இன்னொரு சோகம்.