
முதல் வாரம் ஆறு மேட்சுகள் முடிந்து ஏழாம் மேட்ச் இன்று சீறும் பஞ்சாப் அணியுடன் முதல் மேட்ச்சில் தோற்றுப்போன சென்னை விளையாடுகிறது.
சென்னை மீண்டும் கர்ஜிக்குமா?

சஞ்சு சாம்சன் தான் வந்துட்டானேன்னு தோணி ரெண்டு வாரம் சதைப்பிடிப்புன்னு லீவுக்குப் போயிட்டாரு.
சென்ற தொடரிலேயே எழுதியது தான், சென்னை டீம் தொடர்ந்து கர்ஜிக்கணும்னா சரியான வாரிசு திட்டம் அமைக்கப்பட வேண்டும். கிட்டத்தட்ட டீமில் இருக்கும் பெருசுகள் 18 வருஷமா, இல்லை இல்லை 19 வருஷமா இருந்தா, தலைமை பயிர்ச்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங்க் உட்பட.
தோணி தான் அந்த அணி. அவரு இல்லைனா சப்பாணிங்கற நிலைக்கு வந்தாச்சு. போன சீசன் அணிகள் டேபிள்ள கடோசி ரேங்கில் இருந்தது. அவருக்கும் 42 வயசு ஆறது. அவரனுப்புற ஹெலிகாப்டர் மேலேயே எழும்ப மாட்டேன் என்கிறது.
சின்ன தலைன்னு ரைய்னாவை தயார் செய்தும் அதுவும் நடக்கவில்லை. தோணியே தலைமையில் தொடர்ந்து நின்றுவிட்டதாலோ..
ஜடேஜாவும் எடுபடவில்லை. ஒரு லீடருக்கு அழகு அடுத்த வாரிசு தக்க சமயத்தில் உருவாக்குவது. அதற்கென அவர்களுக்கு அந்த தொனியில் பணியும் தந்து பயிற்சியும் தந்திருக்க வேண்டும். இரண்டு சீசன் முன்பு பிறந்த மண்ணின் மைந்தன் என அஸ்வினை டீமுக்குள் சேர்த்தும் அவருக்கு தலைமையை கொடுத்திருக்கலாம். என்றும் தோணி இருக்க முடியாதல்லவா? காலம் ஓடிக்கொண்டிருக்கிறதே? சென்னைக்கென ஒரு கெத் இருந்தது. அது இப்போது தரை தட்டி விட்டது. மேலெழும்ப அவசர கதியில் பல அறுவை சிகிச்சைகள் செய்வது நல்லது.
வான மார்க்கமாய் ரன் எடுப்பது தான் என்றும் சரி என்பது சரியல்ல. அது எடுத்த 100 இல்லைனா சீரோ மாறியாகி விடும். அந்த மார்கத்தைற்கு சற்றே இணையான தர மார்க்கமாக பவுண்டரி அடித்து ஸ்கோர்போர்ட்டை நகர்த்தலாமே.
விசில் சத்தம் முன்பு போல விண்ணைப் பிளக்க இந்த தமிழனுக்கு ஆசை தான். நடக்குமா?
முதல் மேட்ச்சில் தோற்றாலும் இரண்டாம் மேட்ச்சில் வெற்றி பெற்றது ஹைதராபாத்.
இரண்டு மேட்ச்சிலும் வீழ்ந்தது கொல்கட்டா. இதுவும் சரியான முறையில் தங்களின் வீரர்களை கையாளவில்லை. வெற்றி வாங்கித்தந்த கேப்டனையே, ஷ்ரேயாஸ் அய்யரை தள்ளி விட்டது. வெங்கடேஷ் அய்யரும் இல்லை. ரஸ்ஸலும் இல்லை. அந்த அணியில் வீரர்களிடையான பிணைப்பு தெரியவில்லை.
போகப் போக நிலை மாறலாம்.
சமீபத்தில் நடந்து முடிந்த T20 உலகக் கோப்பை 2026யில் இந்திய அணியில் இடமே பிடிக்காதவர்கள் தான் இந்த ஐபிஎல்லில் அணிகளின் கேப்டங்களாயிருக்கிறார்கள்.
பஞ்சாபுக்கு ஷ்ரேயாஸ் அய்யர்
சென்னைக்கு ருதுராஜ் கேய்க்வாட்
ராஜஸ்தானுக்கு ரியான் பராக்
குஜராத்துக்கு ஷுப்மான் கில்
பெங்களூருக்கு ரஜத் பட்டிதார்
கொல்கட்டாவுக்கு அஜிங்க்ய ரஹானே
ஹைதராபாதுக்கு ஆஸ்திரேலியா டீமிலேயே இடம் பெறாத பேட் கமின்ஸ்
லக்னௌவுக்கு ரிஷப் பந்த்
டில்லியின் அக்சர் படேலும், மும்பையின் ஹார்திக் பண்ட்யாவும் தான் ஐபிஎல் அணிகளின் கேப்டங்களாகவும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் மும்பை அணியிலிருந்து ஹார்திக், சூரியகுமார் யாதவ், பும்ரா, திலக் வர்மா ஆகியோர் இந்த உலகக் கோப்பையில் ஆடியிருக்கிறர்கள்.
இரண்டாவது வாரம் ஒருவரை ஒருவர் ஒரு தரமாவது ஆடியிருப்பார்கள். நிலமை சூடு பிடிக்கத்தொடங்கும்.
அடுத்த வாரம் தொடரும்….

Leave a comment
Upload