
கம்யூனிசம்.
காரல் மார்க்ஸ் உயிரோடு எழுப்பப்பட்டு கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டார். அங்கிருக்கும் உற்பத்தி சாலைகள், மருத்துவமனைகள், நகரங்கள், கிராமங்கள் அனைத்தையும் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டார்.
இறுதியில் அவர் தொலைக்காட்சியில் பேச அனுமதிக்கப்பட்டார். ஆனால் கம்யூனிச தலைவர்கள் தயங்கினார்கள். எதையாவது அனுமதியில்லாமல் சொல்லி விட்டால் ?? கார்ல் மார்க்ஸ் வாக்குறுதி கொடுத்தார். ஒரே ஒரு வாக்கியம் தான் பேசுவேன் பயப்படாதீர்கள்.
இந்த கட்டுப்பாடுடன் பொலீட் பீரோ அவரை பேச அனுமதித்தனர்.
காரல் மார்க்ஸ் ஒரே ஒரு வாக்கியம் தான் பேசினார்.
“உலக தொழிலாளர்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்”
பா.ஜ.கா தலைமை.

பாஜக வில் கட்சியில் முக்கிய பொறுப்பில் சேர நேர்முகத் தேர்வு நடந்தது. கட்சியில் சேர வந்தார் தமிழகத்திலிருந்து ஒருவர்.
பெயர் மதியஒளி.
கட்சி உயர் மட்டம் கேள்வி கேட்டது.
“ஜி உங்களுக்கு சிகரெட் பழக்கம் இருக்கா ஜீ “
“அப்பப்ப சிகரெட் குடிப்பேன்”
“உங்களுக்கு தெரியுமா நம்ம தலைவருக்கு சிகரெட் குடிக்கறது பிடிக்காது. மத்தவங்க குடிக்கறதும் பிடிக்காது?”
“சரிங்க. தலைவர் சொன்னா சிகரெட் குடிக்கறதை விட்டுர்ரேன்”
“குடிப்பீங்களா ? “
“ஆமாங்க. எப்பவாச்சும் குடிப்பேங்க”
“ஐயையோ எங்க கட்சி தலைவருக்கு அதெல்லாம் பிடிக்காதுங்க. “
“சரி அவருக்கு பிடிக்கலைன்னா அதையும் விட்டுரலாம்.
“ஏங்க பொண்ணுங்க விஷயம் ?”
“அதுவும் அப்பப்ப….”
“அட கஷ்டகாலமே அதுவும் எங்க தலைவருக்கு பிடிக்காதுங்க. இது மாதிரி சட்டவிரோதமா இருந்தா ஆவாது அவருக்கு”
“சரிங்க. அதையும் விட்டுரலாம். பிரச்சினையில்ல”
“நீங்க லஞ்சம் வாங்கற பழக்கம் இருக்கா ?”
“நானா வாங்க மாட்டேன். குடுத்தா வாங்கிக்கலாமே ??”
“அட மூச். அது சுத்தமா அவருக்கு பிடிக்காது. வாங்கவே கூடாது”
“ஓ அப்படீங்களா. சரி அதையும் விட்டுரலாம். அவ்ளோதானுங்களா ?? இண்டர்வுயூ ?”
“இல்லீங்க கடைசி கேள்வி இருக்கு. கட்சிக்காக உயிரையே தியாகம் பண்ணனும் தேவைப்பட்டா. செய்வீங்களா ? “
“நிச்சயமா ! மேல இருக்கற ஒரு எழவும் பண்ணாம எதுக்குய்யா இந்த உசுரு. ”
நேர்முகத் தேர்வு

புதிதாக கல்லூரியில் பட்டம் பெற்ற இளைஞன் அந்த பெரிய கம்பெனியில் வேலைக்கு இண்டர்வியூவுக்கு வந்தான்.
அறிமுகப் படலங்கள் முடிந்ததும் மேனேஜர் கேட்டார்.
“என்ன சம்பளம் எதிர்ப்பார்க்கிறாய் ?”
“சார் மாசத்துக்கு ஒரு எண்பதாயிரம் ரூபா !!”
“ஹூம் இப்படி செஞ்சா என்ன ?? எழுவத்தஞ்சாயிரம் சம்பளம். அஞ்சு வாரம் விடுமுறை, 14 நாள் சம்பளத்தோட லீவு, இன்சூரன்ஸ், மெடிக்கல், ஓய்வூதியம், கம்பெனி கார் ஒரு பி.எம்.டபுள்யூ, அப்புறம் இரண்டு மாசம் போனஸ்”
இளைஞனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.
“சார் நிசமாவா ?? ஜோக் பண்றீங்க சார் !!”
மேனேஜர் சொன்னார்.
“ஆமா. முதல்ல ஆரம்பிச்சது நீதான். “
வலைக்கள்ளன்.

Leave a comment
Upload