தொடர்கள்
கவிதை
அன்புக் குரல்...! - சி. கோவேந்த ராஜா.

20201125104351404.jpeg

அதிகாரக் குரல்...
அனைவருக்கும் ..கேட்காது...!
அனைவருக்கும்... பிடிக்காது...!

ஆணவக் குரல்...
யாருக்கும்... கேட்காது...!
யாருக்கும்...பிடிக்காது...!

பரிகாசக் குரல்...
பலருக்கும் ....கேட்காது...!
பலருக்கும் ....பிடிக்காது...!

எகத்தாளக் குரல்...
எவருக்கும் ..கேட்காது...!
எவருக்கும் ..பிடிக்காது...!

கெஞ்சும் குரல்...
சில நேரங்களில்...
சிலருக்குக் கேட்கும்...!
சிலருக்குப் பிடிக்கும்...!

பிஞ்சுக் குரல்....
மழலையின்... பிஞ்சுக் குரல்..
மனதிற்குள்... இனிக்கும்...
மகிழ்வினைக் கொடுக்கும்...!

அன்புக் குரல்...
அனைவருக்கும்... பிடிக்கும்..!
அகிலத்திற்கே ...கேட்கும்...!
ஆனந்தம் பயக்கும்...!

இனியக் குரல்....
இங்கிருப்பவர்களுக்கு... கேட்கும்...!
ஈரேழு உலகிலும் ஒலிக்கும்...!
உன்னத அற்புதங்களை நிகழ்த்தும்...!

அன்புக் குரல் -
ஆசைக் கூறல்...
இனியக் குரல் -
இன்முகக் கூறல்...

நலம் பயக்கும்...!
நன்மை விளைவிக்கும்...!