தொடர்கள்
பொது
கொடநாடு மர்மம் விரைவில் விலகும்... - பொன்தோஸ் பேட்டி

20210817192718428.jpeg

முன்னால் முதல்வர் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டை வாங்கி, அங்கு வந்து தங்கிய ஒவ்வொரு நிமிடத்தையும் உன்னிப்பாக கவனித்து வந்தவர் கொடநாடு ஊராட்சி தலைவர் பொன்தோஸ். இவர், அந்த எஸ்டேட் ஊழியர்களின் அடிமை தனத்தை அகற்ற, அவர்களுக்காக போராடியவர்.

இவர் ஒரு தோடர் இன பழங்குடி வகுப்பை சேர்ந்தவர். கொடநாடு சொகுசு பங்களாவின் மிக அருகில் தான், இவரின் பெடுக்கால் மந்து உள்ளது. அதனால் அந்த எஸ்டேட்டுக்கு யார் வந்து போகிறார்கள் என்பதையும் ஒரு அளவுக்கு யூகிக்க முடியும்.

அதே போல... கொடநாடு அருகில் பான்காடு மந்தும் உள்ளது.
இந்த கொடநாடு எஸ்டேட்டினுள் உள்ள காமராஜ் நகர் மற்றும் அண்ணா நகர்வாசிகள், ஜெயலலிதா - சசிகலா அந்த எஸ்டேட்டை வாங்கி செட்டில் ஆனா பின், பயங்கர இன்னல்களுக்கு ஆளானார்கள். அவர்களின் சென்று வந்த பாதைகள் மூடப்பட்டு, ஏகப்பட்ட இன்னல்களை அந்த மக்களுக்கு கொடுக்க... அவர்களது உரிமைக்காக போராடிய உள்ளாட்சி தலைவர் தான் இந்த பொன்தோஸ்...

20210817192810177.jpeg

இவரின் எதிர்ப்பையும், போராட்டத்தையும் சகித்து கொள்ளாத ஜெயாவும், சசியும் இவரை ஒடுக்கும் பல வழிகளை மேற்கொண்டனர். இவர் திமுக-வை சேர்ந்தவர் என்பதால் ஓவர் டார்ச்சர் கொடுக்க முடியவில்லை. இந்த ‘கொடநாடு’ என்ற உண்மை மர்ம கதை வெளி உலகிற்கு தெரிந்ததே, இந்த ஊராட்சி தலைவர் பொன்தோஸ் மூலமாகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது...

நாம் விகடகவிக்காக பொன்தோஸுடன் தொடர்பு கொண்டு பேசினோம்....

20210817192847601.jpeg

“இந்த கொடநாடு எஸ்டேட்... பிரமாண்ட ஒரு மர்ம தீவு என்று சொன்னால், மிகையாகாது... அவ்வளவு ரகசியம் அதனுள்... இன்னும் பல உண்மைகள் உண்டு, அவை யாருக்கும் தெரியாது. ஜெயலலிதா இந்த எஸ்டேட் மேல் கண்வைத்து, அதை வலு கட்டாயமாக பீட்டர் ஏர்ல் எட்வர்ட் கிரேக் ஜோன்ஸ் என்ற வெள்ளையரிடமிருந்து பிடுங்கி கொண்ட சொத்து தான் அது.

20210817215014325.jpeg

1994 ஆம் வருடம், ஜெயலலிதா இந்த எஸ்டேட்டை வாங்கி, பின் பல ஆக்ரமிப்பு வேலைகள் செய்ய பட்டன. மறைமுகமாக பெரிய பங்களா கட்டும் பணி துவங்கியது. அதற்கு அரசு இயந்திரம் முழுமையாக களத்தில் இறங்கி வேலை செய்ததை வேடிக்கை தான் பார்க்க முடிந்தது. 2006 ஆம் ஆண்டு, நான் கொடநாடு ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்க பட்டேன். அப்பொழுதே அந்த எஸ்டேட் தொழிலாளிகள், படும் அடிமை வேதனை குமுறல்களை அறிந்தேன். 2007 ஆம் ஆண்டு கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவின் பெயரில் உள்ளே சென்ற போது, தடுத்து நிறுத்த பட்டேன். அப்போதே நான், அந்த எஸ்டேட்டினுள் போராடி கொண்டிருக்கும் அப்பாவி மக்களுக்காக போராட துவங்கி விட்டேன். காமராஜ் நகர், அண்ணா நகர்வாசிகளின் வழி மூடப்பட்டது. இதை எதிர்த்து கேட்ட என்னை போலீஸ் தடுத்தது.

யாரையும் உள்ளே விடாமல், அனைத்து வேலைகளையும் செவ்வனே செய்து முடித்தார்கள். பின் எல்லாம் மர்மமான முறையில் நடந்து வந்தது. முதல்வராக ஜெயலலிதா வரும் போது ஒரே ஆடம்பரம் தான். சொல்லவே வேண்டாம்... கெடுபுடிகளுக்கு குறைவே இருக்காது.

2011 ஆம் ஆண்டு, கொடநாடு எஸ்டேட்டினுள் இருந்த கர்சன் எஸ்டேட் அபகரிக்க பட்டு, மூன்று கிலோமீட்டருக்கு வனத்துறை மரங்கள் வெட்டப்பட்டு, தார் சாலை போடப்பட்டது. பின் அந்த எஸ்டேட்டின் பெயர் ‘க்ரீன் டீ எஸ்டேட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அனைத்து பணிகளுக்கும் அரசு துறை அலுவலர்கள் பயன்படுத்தப்பட்டது தான் வேதனையான ஒன்று.

2021081719292954.jpeg

ஜெயலலிதா கொடநாடு வருகிறார் என்றாலே எங்கள் பகுதி மக்களுக்கு தலைவலி தான். ஜெயலலிதா மறைவுக்கு பின், முழு அமைதி தான், ஆனால் மர்மம் தொடர்ந்தது... இந்நிலையில் தான் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி, நள்ளிரவில் ஒரு மர்ம கும்பல் உள்ளே நுழைந்து ஓம் பகதூர் என்ற நேபாளி காவலாளியை கொன்று, முக்கிய ஆவணங்களை அள்ளி கொண்டு போய்விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த திடீர் கொலை, கொள்ளை நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதிகாலையே நீலகிரி கலெக்டர், எஸ்.பி. ஸ்பாட்டில் ஆஜர்!..
எனக்கே காலை 8.30 மணிக்கு தான் விஷயம் தெரியும். அதுவும் ஊட்டியிலிருந்து, பத்திரிகை நண்பர்கள் போனில் கூப்பிட்டு கேட்ட பின் தான்...

20210817193129765.jpeg

அதற்கு பின் தான், லோக்கல் இன்ஸ்பெக்டர் வந்து சேர்ந்தது... எப்படியெல்லாம் நாடகங்கள் அரங்கேறின என்பதை பார்க்க முடிந்தது. எல்லாமே மர்மம்... ஏன் அந்தக் கொலை நடந்தது... எதற்கு நடந்தது என்ற கேள்விகள் உலா வர... கொடநாடு கொலை வழக்கை, முந்தைய ஆட்சி விரைவாக முடிப்பதற்கேற்ப வேலைகள் நடந்து வந்த நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக வழக்கு ஸ்லொவ் மோஷனில் நகர ஆரம்பித்தது....

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தற்போது வழக்கு முழு வேகத்தில் ஸ்பீட் படுத்தியுள்ளது சிறப்பான ஒன்று...

இந்த வழக்கில் வாளையார் மனோஜ், சயான் என மேலும் முப்பது பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அதே சமயம் கொடநாடு எஸ்டேட் மேனஜர் நடராஜனை ஏன் இதுவரை விசாரிக்கவில்லை என்று தெரியவில்லை?!...

20210817193036684.jpeg

நடந்த மர்மமான கொலை பற்றிய புகாரை கூட, ராதாகிருஷ்ணன் என்ற பீல்ட் ஆபிசர் தான் கொடுத்திருக்கிறார். அதிலும் ஏதோ மர்மம் உள்ளது...
கிருஷ்ண பகதூர் என்ற மற்றொரு காவலாளியை அடித்து கட்டி போட்டனர் கொலைகாரர்கள். அவருக்கு சரியான சிகிச்சை கூட எஸ்டேட் மேனஜர் நடராஜன் கொடுக்கவில்லை மற்றும் எந்த உதவியும் செய்யவில்லை. நேபாளிகளின் உதவியுடன் தான் அவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் கொல்லப்பட்டார். இந்தக் கொலை நடத்த மிகவும் உறுதுணையாக செயல்பட்டவர் சஜீவன் என்று பரவலாக பேசப்படுகிறது. இவர் முன்னால் முதல்வர் எடப்பாடியரின் அபிமானியாக திகழ்ந்தவர். நீலகிரிக்கு விசிட் செய்யும் அமைச்சர்கள், இவரை சந்திக்காமல் செல்லமாட்டார்கள். அதிகாரிகள் இவரின் பேச்சை தட்ட மாட்டார்கள். கேரளாவிலிருந்து நீலகிரி - கூடலூரில் ஒரு சாதாரண கார்பென்டராக செட்டிலானவர் தான் இந்த சஜீவன். தற்போது பெரிய மர வியாபாரி. கூடலூர் வனப் பகுதிகளில் ஏராளமான காஸ்டலி மரங்கள் மிஸ்ஸிங். அனைத்தும் இவரது கைவண்ணமாகதான் இருக்கும் என்கிறார்கள்.

இந்த சஜீவன், ஒரு சாதாரண கார்பென்டராக தான் கொடநாடு பங்களாவுக்குள் நுழைந்து, பல சீக்ரெட் மர வேலைகளை செய்து சசிகலாவின் விசுவாசியாக மாறி, பிறகு ஜெயலலிதாவின் அபிமானியாக மாறி, கொடநாட்டின் செல்ல பிள்ளையாகி.... எடப்பாடியிடம் நெருக்கமாகிவிட்டார். அவரின் ஊட்டி விசிட்டின் போது, சஜிவன் அவரருகில் இருந்து நகரவில்லை. அதை நீங்கள் பார்க்கவில்லையா?என்று ஆச்சிரியமாக நம்மிடம் கேட்கிறார் பொன்தோஸ்.

மேலும் அவர் கூறும் போது... இந்தக் கொலைக்கும், கொள்ளைக்கும் சஜீவனுக்கு தொடர்பு இருக்கலாம் என்கிறார்கள்... ஏன் அவரை இன்னும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரவில்லை. இன்னும் பல முக்கிய தலைகள் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பார்கள்...

கொடநாடு சொத்து முழுவதையும் அரசுடைமையாக்கி, வருமான வரி துறை ‘ரிசீவர்’ போட்டு பிரீஸ் செய்யும் போதுதான், எஸ்டேட்டில் உள்ள தொழிலாளிகளும் வெளியே வந்து பல உண்மைகளை கூற முடியும். நம் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால், கொடநாட்டின் ஏராளமான மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும். விரைவில் ஒரு நல்ல தீர்ப்பு வந்து கொடநாடு மர்மம் விலகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று முடித்தார்.