தொடர்கள்
சினிமா
சினிமா... சினிமா... சினிமா... - லைட் பாய்

தீபாவளிக்கு மாநாடு

20210817205303260.jpeg

நவம்பர் 4 ஆம் தேதி அன்று ‘அண்ணாத்த’ படம் ரிலீஸ் உறுதி. இப்போ அதே நாளில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா நடிக்கும் ‘மாநாடு’ படமும் ரிலீஸ் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் படம் என்பதால் ‘அண்ணாத்த’ படத்துக்கு திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கை அனுமதி கிடைக்கும். அப்ப நமக்கும் கிடைக்கும், சந்தர்ப்பத்தை சரியா பயன்படுத்துவோம் என்கிறார் மாநாடு தயாரிப்பாளர். தயாரிப்பாளரின் தொலைநோக்குப் பார்வை சரிதானே.

முருங்கைக்காய் சிப்ஸ்

20210817205243878.jpeg

சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி நடிக்கும் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. காமெடி படம் இது. தயாரிப்பாளர் நல்லா செலவு செய்திருக்கிறார். யோகி பாபு பிஸியாக இருந்தாலும், பாக்யராஜ் சாருக்காக இந்தப் படத்தில் நடிக்கிறார். இன்னும் எத்தனை படத்தில் சாந்தனு நடிக்க கூப்பிட்டாலும் நடிப்பேன் என்றார். யோகிபாபு என்று அந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய பலர், பல தகவல்களை சொன்னார்கள். இந்தக் கூட்டத்தில் பேசிய மிர்ச்சி சிவா நான் நல்லா டான்ஸ் ஆடுவேன் என்று சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தார் என்பது கூடுதல் தகவல்.

அரண்மனை 3 உதயநிதி உரிமை

20210817213548781.jpeg

2014இல் சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை’ படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வசூலை அள்ளியது. அதைத் தொடர்ந்து ‘அரண்மனை 2’ வெளியானது. இப்போது மூன்றாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாஷி, அகர்வால், விவேக், சம்பத், யோகி பாபு என்று பிரமாண்ட நட்சத்திர கூட்டம் நடித்திருக்கிறது. தணிக்கை சான்று கிடைத்தது. இப்போது படத்தின் அனைத்து உரிமைகளையும், உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கிவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில், உதயநிதி திமுக. ஆனால், சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்றாகிவிட்டது. ஆனால், இதை வேறு மாதிரியாகவும் சொல்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால், சினிமாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள். இது எப்போதும் வழக்கம்தான், இது ஆரம்பம் என்கிறார்கள். நெசமா சொல்லுங்க திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரே.

ஐஸ்வர்யா ராஜேஷ்

20210817213134664.jpeg

‘ஆட்டிஸம்’ பாதித்த பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒரு படம் தமிழில் தயாராகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிஸம் பாதித்த பெண்ணாக நடிக்கிறார். அவரது பின்னணி பற்றி அறிய விசாரணை அதிகாரியாக அர்ஜுன் நடிக்கிறார். இது கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை என்கிறார் இந்த படத்தை எழுதி இயக்கும் இயக்குனர் தினேஷ் லட்சுமணன்.

ஆமா சண்டை தான்

20210817212955248.jpeg

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் தயாராகும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சில நாட்கள் முன் நடந்தது. அந்த விழாவில் எஸ்.ஏ. சந்திரசேகர் சொன்ன முக்கிய தகவல்... எனக்கும், விஜய்க்கும் பிரச்சனை இருப்பது நிஜம் தான். எந்த வீட்டில் தான் அப்பா - மகன் சண்டை போடுவது இல்லை. நானும் விஜய்யும் இன்று சண்டை போட்டுக் கொள்வோம், நாளை சேர்ந்து கொள்வோம் என்று உண்மையை எல்லாம் ஓபனாக சொன்னார் எஸ்.ஏ.சி.