தொடர்கள்
வலையங்கம்
தேவை கடும் நடவடிக்கை

தேவை கடும் நடவடிக்கை

20220330052439694.jpg

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தலைமையாசிரியர் ஒருவர் தனது இடமாறுதலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் .அந்த மனுவில் இட மாறுதலுக்கு 10 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுகிறது என்று குற்றம் சுமத்தி இருந்தார்.இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தார். அவர் பதில் மனு தாக்கல் செய்தபோது அரசு ஊழியர்கள் மீது ஆண்டுக்கு 15 ஆயிரம் புகார்கள் வருவதாகவும் அவற்றை துறைத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ஊழலுக்கு முடிவு கட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்புப் படை அமைக்க வேண்டும் கல்வித்துறை மற்றும் பிற அரசு துறைகளில் நிலவும் ஊழல் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட சிறப்புப் படை அமைப்பது உள்ளிட்ட வசதிகள் பெற தேவையான திட்ட முன்வரைவுகளை அரசுக்கும் டிஜிபிக்கும் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி அதிகாரிகள் சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் புகார்கள் வருகிறது அவற்றை துணைத் தலைவர் களுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்திருக்கிறார். வந்த புகார்களை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பும் தபால்காரர் வேலையைத்தான் லஞ்ச ஒழிப்புத்துறை செய்யுமா.மேல் நடவடிக்கை ஏதும் எடுக்காதா.சமீபத்தில் கூட போக்குவரத்து துறை அதிகாரியிடம் சோதனை செய்தபோது 38 லட்சம் ரூபாய் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியது.அதனைத் தொடர்ந்து அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழக நிதி அமைச்சர் வரி வருவாயில் 65% அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சம்பளத்துக்கு செலவாகிறது என்று குறிப்பிட்டார்.அப்படி இருந்தும் அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவது ஏன்?இப்படி லஞ்சம் வாங்குபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை என்பது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே.குற்றவியல் நடவடிக்கை மூலம் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு தண்டனை வாங்கித் தருவதுதான் இந்த பிரச்சனை முடிவுக்கு வர சரியான வழி.லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை என்பதுகூட கண்துடைப்பு நடவடிக்கை தான் தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் லஞ்சம் ஒழியும்