தொடர்கள்
அனுபவம்
மாதத்தில் 28 நாட்கள் மட்டும் ! - பால்கி

20230217222142798.jpeg

புனேவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்க்கு விருந்தினர் விடுதி இருக்கிறது. அவளுக்கு 10-12 பெரிய அறைகள் கொண்ட சொந்த மூதாதையர் வீடு உள்ளது. ஒவ்வொரு அறையிலும் 3 படுக்கைகள் உள்ளன. அதைத்தான் அவள் விருந்தினர் விடுதியாக மாற்றியிருந்தாள். அங்கு தங்கியிருந்த அனைவராலும் விரும்பப்படும் சுவையான உணவையும் பரிமாறி வருகிறாள்.

வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் மாணவர்கள் அவளின் விருந்தினர் விடுதியில் தங்கி வருகின்றனர். அனைவருக்கும் காலை உணவும் இரவு உணவும், தேவைப்படுபவர்களுக்கு நிரம்பிய மதிய உணவுகளும் அங்கு கிடைக்கும்.

ஆனால் அந்தப் பெண்மணியிடம் ஒரு விசித்திரமான நடைமுறை விதி இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் முதல் 28 நாட்கள் மட்டுமே அங்கு உணவு சமைக்கப்படும். மீதமுள்ள 2-3 நாட்களுக்கு அனைவரும் வெளியே சாப்பிட வேண்டும் என்பதுதான் அந்த விதிமுறை. மேலும் அங்குள்ள சமையலறையில் அந்த 2-3 நாட்களுக்கு சமைக்க அனுமதியும் இல்லை. அதாவது, சமையலறையும் 28 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். மீதமுள்ள நாட்கள் விடுமுறை. பெருக்கி மெழுகி கோலம் போடப்பட்டுவிடும்.

நான் அவர்களிடம் கேட்டேன், இது ஏன்? என்ன ஒரு விசித்திரமான விதி! உங்கள் சமையலறை ஏன் 28 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும்?

அதற்கு அந்த பெண்மணி, நாங்கள் 28 நாட்களுக்கான உணவுக்கு மட்டுமே பணம் வசூலிக்கிறோம் என்றார். எனவே சமையலறை 28 நாட்களுக்கு மட்டுமே இயங்கும்.

நான் சொன்னேன், நீங்கள் ஏன் இந்த விசித்திரமான விதியை மாற்றக்கூடாது?

இதற்கு அவள் கூறிய காரணம் என்னை சிந்திக்க வைத்தது. ஏன் உங்களையும் தான்.

அவள் சொன்னாள், இல்லை, விதிகள் விதிகள்தான்! அதில் மாற்றம் எதுவும் நடக்காது.

மீண்டும் ஒரு நாள் அந்த 28 நாட்களின் விசித்திரமான விதியைப்பற்றி கேட்டு நான் அவர்களை எரிச்சலூட்டினேன்.

அன்று அவள் அதற்கான காரணமும் சொன்னாள், "உனக்கு தெரியாது தம்பி, ஆரம்பத்துல இதெல்லாம் விதி இல்லை. நான் அவங்களுக்கு அன்பாக சமைத்து ஊட்டினேன். ஆனால் அவர்களின் குறைகள் நிற்கவே இல்லை. சில சமயம் இந்தக் குறைபாடு, சில சமயம் அந்தக் குறை, எப்பொழுதும் அதிருப்தி, எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருந்தார்கள்....

பார்த்தேன், அதனால், விரக்தியில், 28 நாட்கள் உணவு விதியை உருவாக்கினேன். 28 நாட்கள் இங்கே சாப்பிட்டுவிட்டு, மீதி 2-3 நாட்கள் வெளியே சாப்பிடுங்கள். அப்போதாவது, அந்த 3 நாட்களில் பாட்டியோட ஞாபகம் வந்தா சரிதான்..! மாவு மற்றும் பருப்பின் மதிப்பு தெரியும். வெளியில் எவ்வளவு விலையுயர்ந்த மற்றும் தரக்குறைவான உணவு கிடைக்கிறது தெரியுமா?..

இந்த 3 நாட்களுக்குள் எனது விலையை அவர்கள் அறிவார்கள். எனவே இப்போது மீதமுள்ள 28 நாட்களும் அவர்கள் நூல் போல நேராக இருக்கிறார்கள். அதிக ஆறுதல் சுகம், பழக்கம் ஒரு நபரை அதிருப்தியாளராகவும் சோம்பேறியாகவும் ஆக்கிவிடுகிறது.

தற்போதைக்கு நம் நாட்டில் வாழும் சிலரின் மனோநிலையும் அப்படித்தான் உள்ளன, அவர்கள் நாட்டில் உள்ள எல்லாவற்றிலும் சில அல்லது மற்ற குறைபாடுகளை மட்டுமே எப்போதும் கண்டுகொள்கின்றனர்.

மேலும், இப்படிப்பட்டவர்களின் கூற்றுப்படி, நாட்டில் சாதகமான எதுவுமே நடக்காது, ஒருபோதும் நடக்காது என்பதுதான்.

அப்படிப்பட்டவர்களை என்ன செய்யலாம் என்று அந்தப் பெண்மணி கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வது??

வம்பு !!