தொடர்கள்
பொது
ஒரே ஒரு ஸ்டேட்டுல ஒரே ஒரு ஸ்டேஷன் - பாட வைக்கும் மிசோரம். - மாலா ஶ்ரீ

20230218012122349.jpeg

11 மாவட்டங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு ரயில் நிலையம்!

உலகிலேயே இந்தியாவில் மட்டுமே மிகப்பெரிய ரயில் வழித்தடங்கள் உள்ளது. நம் நாட்டில் கிட்டத்தட்ட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இதன் வழியே நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட பிரமாண்ட இந்திய ரயில்வே துறையில், ஒரு மாநிலத்தில் ஒரே ஒரு ரயில் நிலையம்தான் உள்ளது என்பதை அறிந்தால், அதிர்ச்சியாக இருக்கிறாதா ?? அட மிசோரம் மாநிலத்தின் பைராபி நகரில்தான் அந்த ஒற்றை ரயில் நிலையம் இயங்கி வருகிறது என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

மிசோரம் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் ரயிலில் பயணம் செய்ய விரும்பினால், பல கிமீ தூரமுள்ள பைராபி ரயில்நிலையத்துக்கு வந்து, பிற மாநில ஊர்களுக்கு ரயில் ஏறிச் சென்று வரவேண்டும். இத்தகைய சிறப்புமிக்க பைராபி ரயில்நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான இருக்கை, குடிநீர் மற்றும் கழிவறை உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை என்பது இன்னும் கொடுமை.

தற்போது மிசோரம் மாநிலத்தில் மற்றொரு ரயில்நிலையம் அமைப்பதற்கும், பைராபி ரயில் நிலையத்தை நாட்டின் பிற மாநிலங்களுடன் இணைப்பதற்கான செயல்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக இந்திய ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மொத்தம் 21,089 சதுர கிமீ பரப்பளவு கொண்ட மிசோரம் மாநிலத்தில், அந்த ஒற்றை ரயில் நிலையம்கூட அதன் தலைநகரான ஐஜ்வாலில் இல்லை எனக் குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் இந்த ஸ்டேஷன் தெரிந்திருந்தால் ஒரு நல்ல திரைக்கதை வைத்து பைராபியை உபயோகப்படுத்தியிருப்பார்.

ஹூம் பைராபிக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.