தொடர்கள்
கொடுரம்
ஊட்டியையே உறைய வைத்த கொடூர கொலை - ஸ்வேதா அப்புதாஸ்.

20230328153502811.jpg

கடந்த திங்கள்கிழமை மாலை ஊட்டி கூ டலூர் சாலை பகுதியில் உள்ள பைன் சோலை அருகில் அங்கர்போர்ட் அடர்ந்த காட்டு பகுதியில் உள்ள புதரினுள் ஒரு பள்ளி மாணவியின் உடல் கிடக்கிறது என்ற தகவல் போலீசுக்கு செல்ல மிக பெரிய அதிர்ச்சி நீலகிரி முழுவதும் உலுக்கி உறைய வைத்தது .

ஊட்டி பகல்கோடு தோடர் இன மக்கள் வாழும் மந்தில் வசிக்கும் நார்தேஷ் குட்டன் என்பவரின் மகள் மானேஷ் இந்து நகரில் உள்ள கேந்திரா வித்தியாலய பள்ளியில் பையிலும் ஒன்பது வயது மாணவி மானேஷ் . பள்ளி விட்டு வீட்டிற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருக்க ஒரு சான்றோ காரில் வந்தான் ரஜனீஷ் குட்டன் . மானேசை காரில் ஏறு மந்தில் விடுகிறேன் என்று வலுக்கட்டாயமாக ஏற்றி காரில் கூட்டி சென்று அங்கர்போர்ட் காட்டு பகுதியில் காரை விட்டு இறக்கி பாலியல் பலாத்காரம் செய்து காரின் வீல் ஸ்பானரில் தலையில் அடித்து ரிப்பனை கழுத்தை சுற்றி இறுக்கி கொன்றுள்ளான் அந்த கொடூர மிருகம் .

20230328153536683.jpg

மானேஷ் இருட்டியும் வீட்டிற்கு வரவில்லை என்று தேடியுள்ளனர் .

அவரின் தந்தை குண்டல்பேட் சென்றுள்ளார் பின் மந்தை சேர்ந்தவர்கள் தேடியபோது அங்கர்போர்ட் பகுதியில் ஒரு புதரில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக அங்கு விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் கூற அங்கு சென்று பார்த்த போது மானேஷ் இறந்து கிடப்பதை உறுதி செய்தனர் .

ஊட்டியை உலுக்கிய இந்த கொலையால் உறைந்து போய்யுள்ளனர் உள்ளூர்வாசிகள் .

கொலைகாரன் ராஜீனேஸ் குட்டன் காரில் பதற்றத்துடன் அங்கேயே சுற்றியுள்ளான் அவனை வீடியோ எடுத்த இளையஞர்கள் இங்கு என்ன செய்கிறாய் என்று கேட்க மழுப்பி தோடர் பாஷையில் பேசி விட்டு எஸ்கேப் ஆகியுள்ளான் .

போலீஸ் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றது .

தகவல் அறிந்த பெற்றோர் பதறி துடித்து போய்விட்டனர் .

ஏன் இப்படிப்பட்ட கொடூர கொலையை செய்தான் என்று விசாரித்த போது அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது .

நார்தேஷ் குட்டன் ஒரு வசதியான தோடர் விவசாயி .

அது மட்டுமல்லாமல் இவர் ஒரு தி மு க வின் விசுவாசி .

கடந்த வருடம் முதல்வரின் ஊட்டி விசிட்டின் போது இந்த பகல்கொடு மத்துக்கு விஜயம் செய்து இவரின் குடும்பத்தையும் சந்தித்துள்ளார் .

ஊட்டி மைசூர் சாலையில் உள்ள ஷூட்டிங் மந்து பைக்காரா மற்றும் ஊசி மலை பகுதியில் Eco tourism development என்ற ஒரு இயற்கை சூழல் முன்னேற்றத்தை சுற்றுலாக்களிடம் விளக்கி வருகின்றனர் தோடர் இன மக்கள் அதன் தலைவர் தான் இவர் .

இயற்கையை பாதுகாப்பது இவர்களின் முக்கிய பணி. வனத்துறையுடன் இணைந்து பணி செய்வது .

இந்த இடத்தில் தான் ரஜனீஷ் குட்டன் வேலைசெய்து வரும் நிலையில் கஞ்சா மது குடித்து விட்டு தொல்லை கொடுக்க நார்தேஷ் குட்டன் வேலையில் இருந்து அனுப்பியுள்ளார் .

வாக்குவாதம் ஏற்பட்டு பழி தீர்க்கும் நாளை எதிர் நோக்கி காத்திருந்துள்ளான் .

ஏற்கனவே திருமணமான இவனின் மனைவி ஏழு மாத கர்ப்பணி .அதனால் நார்தேஷ் மீண்டும் இவனுக்கு வேலை கொடுத்துள்ளார் .

கார்டன் மந்தில் வசித்து வந்த இவன் அடிக்கடி அங்கர்போர்ட் பகுதியில் தான் குடி போதையில் சுற்றி திரிவது வழக்கமாம் .

பழி தீர்க்கும் எண்ணத்தை வளர்த்த இவன் நார்தேஷ் குட்டனை கொலை செய்ய திட்டம் தீட்டி அது அப்பாவி மகள் மேல் திரும்பி கொடூரமாக கொலை செய்து வீசிவிட்டு சென்று பின் அடுத்த நாள் அவனே போலீசில் சரணடைந்துள்ளான் .

20230328153609394.jpg

கொலை நடந்த பின் அதே இடத்தில் ஒரு வித பதட்டத்தில் சுற்றியவனை தடுத்து நிறுத்திய தோடர் இளையஞர்கள் " என்ன வீசி எறிந்தாய் என்று கேட்க மழுப்பல் பதட்ட பதிலை கூறிவிட்டு எஸ்கேப்பாகியுள்ளான் .

பின்னர் சிறுமியின் உடல் கண்டுபிடிக்க ஆடி போய்விட்டது ஊட்டி .

அழகான தோடர் இன சிறுமியை கொடூரமாக கொலை செய்தது அதே தோடர் இன இளைஞன் என்பது அதிர்ச்சியான ஒன்று .

மானேஷ்யின் உடல் பிரேத பரிசோதனை செய்த் போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது .

தோடர் இன மக்கள் அவர்களின் இனத்திற்கு ஏற்பட்ட மிக பெரிய தலை குனிவு என்று கூறுகிறார்கள் .

" தங்கள் இனத்தை சேர்ந்தவனே இப்படிப்பட்ட கொடூரத்தை செய்தது கொடூரம் அதிலும் ஒருவன் மட்டும் இந்த காரியத்தை செய்யவில்லை இன்னும் மூன்று கூட்டாளிகள் உள்ளனர் .அதை மறைக்க தோடர் இன பெரிய மனிதர்கள் முயற்ச்சி எடுக்க தோடர் இன பெண்கள் ஒன்று கூடி இந்த கொலையை செய்து மறைந்து இருக்கும் மூன்று பேரை போலீஸ் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி யை நேரில் சந்தித்து மனு கொடுக்க இருக்கிறார்கள் .

நீலகிரி எஸ் .பி .பிரபாகரன் இந்த வழக்கை அவ்வளவு ஈசியாக விடுவதாக இல்லை என்ற கூறப்படுகிறது

20230328153630540.jpg

அடுத்த நாள் தன் அழகிய மகளின் உடலை தோடர் இன முறைப்படி புதிய கட்டிலில் கிடத்தி எரியூட்டி இடிந்து முடங்கி பிரமை பிடித்தது போல உள்ளனர் பெற்றோர் .

சட்டம் தன் கடமையை செய்தால் தான் மானேஷின் ஆன்மா ஆறுதல் அடையும் .

சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடங்களில் இப்படி பட்ட கயவர்களை காவல் துறை கண்டு கொண்டு சிறையில் அடைக்க வேண்டும்.