தொடர்கள்
சோகம்
மண்ணில் மூடின ஆறு பெண்கள் சோகத்தில் ஊட்டி . - ஸ்வேதா அப்புதாஸ் .

நீலகிரி மலையை காப்பாற்றவேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் குரல் கொடுத்து கொண்டிருக்க .

20240108203605882.jpg

சென்னை ,கோவை , கேரளா , ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் மிக பெரிய பண முதலாளிகள் ஏகப்பட்ட கட்டிடங்களை கட்டி விற்றுவருவது ஒரு பக்கம் .காட்டேஜுகளை கட்டி சுற்றுலா பயணிகளுக்கு வாடகை விடுவது இங்கு சர்வசாதாரணமாகிவிட்டது .

20240108204512202.jpg

மலைகளை குடைந்து தேயிலை எஸ்டேட்டுகளை அழித்து அதனுள் மிக பெரிய புதிய பங்களாக்கள் உருவாகி வருகின்றது .

20240108213138242.jpg

கடந்த 7 ஆம் தேதி புதன் கிழமை ஊட்டி வாயிலில் உள்ள லவ்டேல் சாலையில் அமைந்துள்ள காந்திநகர் பகுதியில்

20240108213228439.jpg

ஒரு டீ எஸ்டேட்டினுள் மிக பெரிய பங்களா கட்டுமானம் கடந்த ஆறு மாதகாலமாக கட்டப்பட்டு வருகிறது .

வழக்கமான பணிகளில் ஏழை தொழிலாளிகள் 13 பேர் ஈடுபட்டு வர 7 ஆம் தேதி பகல் 11.30 மணி அளவில் தொழிலாளிகள் அங்குள்ள மண் திட்டில் அமர்ந்து தேனீர் அருந்தி கொண்டிருக்க மேல் பகுதியில் ஐம்பது வருட பாழடைந்த பொது கழிப்பிடம் திடீர் என்று இடிந்து சரிந்து விழுந்தது . அமர்ந்திருந்த பத்து பேரும் மண் மற்றும் கல் குவியலில் சிக்கி மூடப்பட்டனர் .

20240108210503873.jpg

உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மண் கல் குவியலை கலைக்க பின் தகவல் பறக்க தீயணைப்பு மற்றும் காவல் துறை மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு அனைவரையும் மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்ல அதில் ஆறு பெண்கள் முத்துலட்சுமி , சங்கீதா , பாக்கியம் , உமா , சசிகலா , மற்றும் ராதா ஏற்கனவே இறந்துவிட்டனர் என்று மருத்துவர்கள் கூற ஊட்டி சோகத்தில் மூழ்கியது .

மகேஷ் , சாந்தி ,ஜெயந்தி ,தாமஸ் ஆகிய நால்வரும் தப்பி பிழைத்து மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் .

சென்னையில் வசிக்கும் ஊட்டி வாசியான ஒரு முக்கிய பிரமுகரின் பங்களாவின் கட்டுமான வேலை தான் நடைபெற்று வந்துள்ளது .

20240108210557790.jpg

கேரளாவை சேர்ந்த ஜேக்கப் பிரிட் ஜோ இந்த கட்டிடத்தின் உரிமையாளர் என்று கூறப்படுகிறது இவர் ஒரு முக்கிய புள்ளியின் பினாமி உரிமையாளராம் .

மேற்பார்வையாளர்கள் ஜாகிர் அகமது மற்றும் ஆனந்த்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது என்கிறார்கள் காவல் துறையினர் .

20240108210643588.jpg

விபத்து நடந்தவுடன் கேரளாவுக்கு தப்பி சென்றவர்களை கெத்தை வன பகுதியில் வளைத்து பிடித்தனராம் நீலகிரி போலீஸ் .

மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் இந்த விபத்துக்கு காரணமானவர்களை எங்கள் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று போராட குரல் கொடுத்த ஒரு சிலரை போலீஸ் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுபோய் வைத்து கூட்டத்தை கலைத்தது .

போலீஸ் மோகன் என்பவரை கேள்வி கேட்டார் என்று காவல் நிலையத்தில் அமரவைக்க பின் போராட்டத்தை தொடர்ந்து அவரை வெளியே விட்டனர் .

அவர் நம்மிடம் , " ஆறு உயிர்பலி வாங்கின கட்டிட உரிமையாளர் மற்றும் கான்ட்ராக்ட்டர் சூப்பர்வைசரை கைது செய்யாமல் கேள்வி கேட்ட என்னை கொண்டு போய் உள்ளே வைப்பது தான் போலீஸ் நடவடிக்கையா ? என்று கேட்கிறார் .

இந்த விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடல்களை வாங்கமாட்டோம் என்று கூறி சென்றார்கள் .

முரளி என்பவர் நம்மிடம் கூறும் போது ,

20240108210741418.jpg

" இந்த கட்டிடம் கட்டிக்கொண்டிருக்க சில மாதங்களுக்கு முன் பெருமழை பெய்தபோது மேலே உள்ள பொது கழிப்பிடத்தின் கீழ் மண் சரிவு ஏற்பட்டு அங்கு இருந்த நாய் கூண்டு மண்ணில் அடித்து சென்று அல்சேஷசன் நாய்கள் இறந்து போயின .

இந்த கட்டிட உரிமையாளர் பாதுகாப்பான பக்க சுவர் கட்டவேண்டும் என்று நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் இந்த பகுதி மக்கள் புகார் கொடுத்தோம் தாசில்தார் மற்றும் வி ஏ ஒ வந்து பார்த்து விட்டு சென்றதோடு சரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இன்று அதே இடத்தில் மண்ணும் அந்த கழிப்பறையின் ஒரு பகுதி சரிந்து அப்பாவி உயிர்களை வாங்கிவிட்டது . அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி உயிர்பலி ஏற்பட்டிருக்குமா இனியும் நடவடிக்கை எடுப்பார்களா .அந்த கட்டிட சூப்பர்வைசர் ஜாகிர் அகமதுவிடம் பலமுறை சொல்லியும் கேட்கவில்லை . அந்த ஆறு உயிர் பலிக்கு யார் பதில் சொல்வது " என்று கண்கலங்கினார் .

இறந்த ஷகிலா என்பவரின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார் தற்போது எட்டு வயது மகனை தவிக்க விட்டு சென்று விட்டார் என்று கதறுகிறார்கள் .

ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின் உடல் கூர் ஆய்வு முடிந்து 8 ஆம் தேதி பகல் 11 மணிக்கு ஆறு உடல்களும் அவர்களின் காந்திநகர் பகுதிக்கு எடுத்து செல்ல பட்டு பள்ளி மாணவர்கள் ஊர் மக்களின் அஞ்சலிக்கு பின் மதியம் தலையாட்டு மந்து இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது .

கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதா என்ற விசாரணையை ஊட்டி நகராட்சி அதிரடியாக துவங்கியுள்ளது . பல மாதங்களாக புகார் கொடுத்தும் காதில் வாங்கிக்கொள்ளாத நகராட்சி அவசரமாக இந்த கட்டிடத்தை சீல் செய்தது வேடிக்கையான ஒன்று என்கிறார்கள் .

நீலகிரி முழுவதும் ஏகப்பட்ட கட்டிடங்கள் பெருகி வர இந்த உரிமையாளர்கள் எப்படி முன் அனுமதியை அரசு துறைகளிடம் பெற்றனர் என்பதும் கேள்விக்குறிதான் .

இந்த மலை மாவட்டத்தை காப்பாற்ற மாஸ்டர் பிளான் என்ற ஒரு சட்டம் இருந்தது அது இப்பொழுது எங்கேபோனது என்று தெரியவில்லை .

மீண்டும் இப்படிப்பட்ட சோகம் தொடராமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?!.

இந்த சோக நிகழ்வை தொடர்ந்து விதி மீறி கட்டப்படும் கட்டிடங்கள் சீல் வைக்கப்படும் என்று கூறியுள்ளார் மாவட்ட ஆட்சியர் அருணா .

20240108211632213.jpg

அதே சமயம் இந்த கட்டிடம் சில காலம் கழித்து கூலாக திறப்பு விழாவை சந்திக்கும் காரணம் இந்த இடம் ஒரு முக்கிய நபரின் சொத்து என்பது குறிப்பிடத்தக்கது .