தொடர்கள்
விளையாட்டு
ஹாங்காங் மக்களை ஏமாற்றிய மெஸ்ஸி - ராம்

20240109221035867.jpegசென்ற வாரத்தில் ஒரு நாள்

கால்பந்து கடவுள் என்று சமீபத்தில் கொண்டாடப்படும் மெஸ்ஸி ஹாங்காங்கிற்கு வந்து இண்டர் மிலான் குழுவின் போட்டியில் விளையாடுவார் என்று ஏகத்திற்கும் பில்டப் கொடுத்து சுமார் 40,000 பேர்கள் அந்த மெஸ்ஸியை நேரில் விளையாடி பார்த்து விட வேண்டும் என்று குழுமியிருந்தார்கள்.

சொன்னபடியே மெஸ்ஸி வந்தார். ஆனால்.....

பெஞ்சில் உட்கார்ந்திருந்தார். சரி அவ்ளோ பெரிய ஆட்டக்காரர் முழு மேட்சும் விளையாட மாட்டார் என்று பாதி வரை அமைதியாக உட்கார்ந்திருந்த பார்வையாளர்கள் ஹாஃப் டைமுக்கு மேல் பொறுமை இழந்தனர். மெஸ்ஸி மெஸ்ஸி மெஸ்ஸி என்ற கூச்சல் ஸ்டேடியத்தில் அதிர்ந்தது.

காலில் ஏதோ அடியாம். அதனால் கடைசி வரை சப்ஸ்டிடியூட்டாக பெஞ்சிலேயே அமர்ந்து போய் விட்டார் மெஸ்ஸி. விளையாடவேயில்லை.

ஒரு டிக்கெட் 40,000 ரூபாய் வரை கொடுத்து வந்தவர்களுக்கு படு பயங்கர ஏமாற்றம். ஒரு கட்டத்தில் மெஸ்ஸி மெஸ்ஸி என்று கத்திக் கொண்டிருந்தவர்கள், ரீஃபண்ட், ரீஃபண்ட் என்று கத்த துவங்கியிருந்தார்கள்.

கடைசியில் கூட்டத்திற்கு நன்றி தெரிவித்து பேச வந்தவர் டேவிட் பெக்ஹாம். அப்போது கூட கூட்டம் சமாதானமாகவில்லை.

செம, ஏக, படு பயங்கர கடுப்பில் கத்திக் கொண்டே கலைந்து போனார்கள்>

இன்னும் மெஸ்ஸியின் பெயரை சொல்லி டிக்கெட் விற்று விட்டு கடைசி வரை அவர் விளையாடாமலே கிளம்பிப் போனது இன்னமும் ஹாங்காங்கில் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது.