தொடர்கள்
தேர்தல் ஸ்பெஷல்
நீலகிரி தொகுதி யார் பக்கம் ஒரு அலசல் . - ஸ்வேதா அப்புதாஸ் .

நீலகிரி நாடளுமன்ற தொகுதி இந்தியாவின் மிக முக்கிய தொகுதியாக பார்க்கப்படுகிறது .

20240317235308289.jpg

ஒரு உலக பிரசித்திபெற்ற சுற்றுலா தலம் என்பதால் நீலகிரி எம் பி ஒரு முக்கிய வி ஐ பி யாக பார்க்கப்படுகிறார் .

20240317235337594.jpg

நீலகிரி எம்பிக்கு அமைச்சர் பதவி கூட கொடுக்கப்படுவது மலைகளின் அரசியால் தான் என்று சொன்னால் மிகையாகாது .

நீலகிரி தொகுதி ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது ஊட்டி ,குன்னூர் , கூடலூர் மலையில் வீற்றிருக்கும் சட்டமன்ற தொகுதிகள் .

மேட்டுப்பாளையம் , அவிநாசி மற்றும் பவானிசாகர் கீழ் பிரதேசத்தை உள்ளடக்கிய சட்டமன்ற தொகுதிகள் .

2009 க்கு முன் தொண்டாமுத்தூர் நீலகிரி தொகுதியில் இருந்தது பொள்ளாச்சி தொகுதிக்கு மாற்றப்பட்டு பவானிசாகர் இணைக்க பட்டது .

நீலகிரி தொகுதி யில் 16 நாடாளுமன்ற தேர்தல்களில் 1957 ஆம் வருடம் சி .நஞ்சப்பா தான் முதல் எம் பி இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் .

இந்த தொகுதியில் ஒரே பெண் எம் பி பணியாற்றியுள்ளார் அவர் தான் அக்கம்மா தேவி இந்திய தேசிய கட்சியை சேர்ந்தவர் .1962 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் .

1967 ஆம் வருட தேர்தலில் சுதந்திர கட்சியை சேர்ந்த எம் .கே .நஞ்ச கவுடர் .

1971 தேர்தலில் தி மு காவை சேர்ந்த ஜே .மாதா கவுடர் .

1977 தேர்தலில் அ இ அ தி மு காவை சேர்ந்த பி .எஸ் .ராமலிங்கம் .

இந்த தொகுதியில் 1980 முதல் 1991 வரை தொடர்ந்த எம் பி .ஆர் .பிரபு

1996 நீலகிரி எம் பி யாக தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ் .ஆர் .பாலசுப்ரமணியம் வெற்றி பெற்றார் .

1998 பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றார் மாஸ்டர் மாத்தன் .

பின் 2004 ஆம் வருடம் மீண்டும் ஆர் .பிரபு வெற்றி பெற்றார் .

2009 ஆம் ஆண்டு தேர்தலில் ஆ .ராசா தி மு க வெற்றி பெற்றார்.

அதன் பின் 2014 யில் அ இ அ தி மு வேட்பாளர் சி .கோபாலகிருஷ்ணன் எம் பி .ஆனார் .

2019 யில் மீண்டும் ஆ .ரசா வெற்றி பெற்றார் .

தற்போது அடுத்த 2024 ஆம் வருட நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் எதிர்வரும் ஒன்றரை மாதங்களாக நடைபெறுகிறது .

2024031723561322.jpg

நம் நாட்டின் மிக பெரிய மக்களவை தேர்தலை உலகமே உன்னிப்பாக கவனித்து வரும் சூழலில் தமிழகத்தில் 19 ஆம் தேதி தேர்தல் முடிந்துள்ளது .

பி ஜே பி வேட்பாளர் மத்திய அமைச்சர் எல் .முருகன் முதல் முறையாக நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார் .

20240317235737348.jpg

தி மு க வேட்பாளர் ஆ .ராசாவை வீழ்த்தவே எல் .முருகனை களத்தில் இறக்கியது பாஜக தலைமை .

கடந்த ஆறு மாதமாகவே முருகன் மலையேறி விசிட் தொடர்ந்தது .

எல் .முருகன் நீலகிரி படுக சமுதாய மக்களின் மத்தியில் அவர்களின் பல்சை டச் செய்து வலம் வந்தார் . கிராம கிராமமாக இவரின் விசிட் தொடர இவர் தான் பாஜக வேட்பாளர் என்று பேசப்பட்டு உறுதிசெய்யப்பட்டது .

அதே போல எல் .முருகன் நீலகிரி தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார் .

காங்கிரஸ் தி மு க வை கடுமையாக விமரிசித்து ஓட்டு வேட்டையில் இறங்கினார்

பிரதமர் மோடி எல் .முருகன்னுக்கு வாக்கு சேகரிக்க ஊட்டி நகரில் ரோடு ஷோ நடத்த முடிவு செய்து .சேரிங்க்ராஸ் முதல் கமர்ஷியல் சாலை , மார்க்கெட் சாலை , லோயர்பசார் பஸ் நிலையம் வரை நடைபெறுவதாக இருந்தது .

காவல் துறை இந்த பகுதியில் கடை வீடுகள் என்று மக்கள் அடையாள குறிப்புகள் எடுத்தனர் .

பின்னர் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் விசிட் செய்து ஊட்டி சாலைகள் பிரதமரின் ரோட் ஷோ நடத்த பாதுகாப்பு இல்லாதது என்று அனுமதி மறுக்க மேட்டுப்பாளையத்தில் பிரதமர் ரோட் ஷோ மற்றும் கோவை நீலகிரி வேட்பாளர்கள் எல் .முருகன் மற்றும் அண்ணாமலையை அறிமுகம் செய்து வாக்கு சேகரித்து பொது கூட்டத்தில் பேசினார் மோடி .

சூறாவளி பிரச்சாரம் செய்து நீலகிரி படுக சமுதாயம் மேட்டுப்பாளையம் பவானி அவிநாசி , கூடலூர் தன் பக்கம் என்று வெற்றி நிச்சயம் என்று ஜூன் நான்காம் தேதியை உற்று பார்த்து கொண்டிருக்கிறார் முருகன் .

17 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் முடித்து முன்னாள் எம் பி மாஸ்டர் மாதன் இல்லத்தில் எல் .முருகன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தவரை சந்தித்தோம் , " தேர்தல் கட்டுப்பாடு இருப்பதால் 6 மணிக்கு மேல் பேச கூடாது" என்று கூறி மறுத்தார் .

அ இ அ தி மு க வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வன் இந்த தொகுதிக்கு புதியவர் .

20240317235855859.jpg

அ இ அ தி மு காவிற்கு கணிசமான வாக்குகள் பதிவாகியிருக்கும் .

பவானி , அவிநாசி , கூடலூர் எங்க வாக்கு வங்கி அது மட்டுமல்லாமல் நீலகிரி மக்கள் எங்கள் பக்கம் முன்னால் முதல்வர் எடப்பாடியரின் ஊட்டி விசிட் வெற்றி இந்த முறை எங்களுக்கு தான் என்கின்றனர் இரட்டை இலையை உயர்த்தி காட்டி .

நீலகிரி எம் பி மற்றும் தி மு க வேட்பாளர் ஆ .ராசா தொகுதி மக்களின் அன்பை அதிகமாகவே பெற்றவர் .

தொகுதி மக்களின் அனைத்து சோகமான நேரத்தில் நேரடியாக ஓடோடி வந்து உதவிகளை செய்து வருபவர் இவரை கை விடமுடியாது என்கின்றனர் .

20240318000658904.jpg

ராசாவை உரிமையுடன் அவரின் அலுவலகத்தில் நேரடியாக சந்திக்கலாம் பிரச்சனை குறித்து பேசலாம் என்கின்றனர் .

அண்மையில் நீலகிரியில் நடந்த சோகமான சம்பவங்களை நேரில் வந்து பார்த்து இன்ஸ்டன்ட் உதவி செய்தவர் ராசா .

தொகுதியில் எந்த பிரச்சனை நேரிட்டாலும் அதை சுமுகமாக முடித்து வைத்து வருகிறார் ராசா என்ற குரல்கள் கேட்டவண்ணம் இருக்கிறது .

நாம் ராசாவை அவரின் முகாம் அலுவலக இல்லத்தில் சந்தித்தோம் .படு பிசி பிரச்சாரத்தை முடித்து விட்டு டயர்டாக தனிமையில் டி வி பார்த்து கொண்டிருந்தார் .

நமக்கு டீ கொடுத்து கூலாக பேசினார் வெற்றி நிச்சயம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறி அமைதியாக சற்று அமர்ந்துள்ளேன் என்று கூறினார் .நாமும் வாழ்த்துக்கள் கூறி சந்திப்போம் ஜூன் நான்காம் தேதி என்று விடைபெற்றோம் .

இ வி எம் அனைத்து வாக்குகளையும் தன்னகத்தே அடைத்து கொண்டு அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது .

ஜூன் 4 ஆம் தேதி நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர் யார் என்று தெரிந்து விடும் அதுவரைகாத்திருப்போம் .

அது வரை நீலகிரி கோடை விழாவில் மூழ்கும் .