தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா- லைட் பாய்

நான் அவன் இல்லை.

20240319180611100.jpg

இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கும் உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

20240319180736868.jpg

விஷால் நடித்த ரத்தினம் படத்தில் இயக்குனர் ஹரிக்கு உதவி இயக்குனராக வேலை பார்த்தேன் என் அப்பாவும் இயக்குனர் ஹரியும் நண்பர்கள் என்பதால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

20240319180859832.jpg

நானும் ஐஸ்வர்யாவும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார் புது மாப்பிள்ளை.

பாக்ஸிங் பயிற்சி

20240319181238615.jpeg

விஜயின் கோட் படத்தில் நடித்து வரும் மீனாட்சி சவுத்ரிக்கு ஆக்ஷன் காட்சி இருக்கிறது. இதற்காக தாய்லாந்து சென்று பாக்ஸிங் பயிற்சி பெற்றார் மீனாட்சி சவுத்ரி.

சுட சுட

திகில் படம்

இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட பல படங்களின் நடித்துள்ள யாஷிகா ஆனந்த் தற்போது படிக்காத பக்கங்கள் என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.

இனிமேல் அனிருத் இல்லை

தனுஷ் படங்கள் என்றால் இசை அனிருத் என்று தான் இருந்தது. இப்போது தனது படங்களுக்கு ஜிவி பிரகாஷுக்கு சிபாரிசு செய்கிறார் தனுஷ்.

ஜவான் 2

இயக்குனர் அட்லி விஜய் நடிப்பதற்காக ஒரு கதை தயார் செய்து வைத்திருந்தார். ஆனால், விஜய் சினிமாவுக்கு முழுக்கு என்று சொல்லிவிட்டார். இப்போது அந்த கதையை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனாவிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டார். ஜவான் இரண்டாம் பாகமும் ரெடியாகிறதாம்.

புஷ்பா 2

புஷ்பா 2 படத்தின் ஓ டி டி உரிமையை Netflix நிறுவனம் 275 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.