தொடர்கள்
தொடர்கள்
குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 21- ரேணு மீரா

20240005110849259.jpg

குறள் -608

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்றாற்கு

அடிமை புகுத்தி விடும்.

சோம்பல், தன் குடியை உயர்த்த நினைப்பவனிடம் தங்கியிருக்கும் ஆனால் அச்சோம்பல் அவனைப் பகைவருக்கு அடிமையாக்கி விடும்.

திருவள்ளுவரின் இந்த குறளுக்கு ஏற்ப சோம்பல் இல்லாத வாழ்வை நம் குழந்தைகள் வாழ வேண்டும் என்று எண்ணும் பெற்றோர், தங்கள் குழந்தைகள் அவர்களின் இலக்கை நோக்கி பயணிப்பதில் எந்த அளவிற்கு ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதை உணர்ந்து செயல்பட துணை நிற்க வேண்டும். குழந்தைகளுக்கு இலக்கை பற்றிய ஒரு தெளிவான சிந்தனையை அவ்வப்போது மனதில் பதியும் பாதி சொல்லுவது அவசியம், இந்த இடத்தில் அவர்களுக்கு திணிப்பது போன்ற உணர்வை அறிவுறுத்தல் மூலம் கொடுக்காமல் கதைகளாகவும் நான் முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டது போல எழுத்து வடிவில் அதாவது ஆக்டிவிட்டி ஆகவும் சொல்லிக் கொடுத்தல் அவசியம்.

சமீபத்தில் என்னை சந்தித்த ஒரு பெற்றோர் அவர் குழந்தையை பற்றி என்னிடம் கூறி அவனது சோம்பேறித்தனத்தால் அவனால் பல விஷயங்களை செய்வதில்லை அவன் பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் அவனுடைய சிறுவயதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான் ஆனால் இப்போது விளையாடுவதிலும், “அவன் வழக்கமாக செல்லும் கோச்சிங் கிளாஸ்களிலும் அதிகம் ஆர்வம் செலுத்துவது இல்லை என்றும், ஆரம்பத்தில் உலக அளவில் புகழ்பெற்ற Table Tennis Player ஆக வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டான் ஆனால் இப்போது அதை பற்றி சிறிதும் அவனுக்கு யோசனை இல்லை” என்று வருத்தத்துடன் கூறினார்.

முதலில் உங்கள் குழந்தைகளுக்கு விருப்பம் என்றால் என்ன என்பதை புரிய வைக்க வேண்டும்.

“விருப்பங்கள் இலக்குகள் அல்ல”

பெரும்பாலான மக்களிடம் அவர்களுடைய வாழ்க்கையின் முக்கியமான குறிக்கோள் எது என்று கேட்டால் அவர்கள் பெரும்பாலும் நாங்கள் வெற்றியடையவும் மகிழ்ச்சியான நல்வாழ்த்துக்கள் வாழவும் விரும்புகிறோம் என்று தெளிவற்ற பதில்களை தருவார்கள் அவை வெறும் விருப்பங்களே இலக்குகள் அல்ல.

இலக்குகளை SMART என்று எளிமையாக புரிய வைக்க முடியும்.

S-Specific. திட்டவட்டமானது.

—--------------------------------------

“ நான் விளையாட்டு வீரனாக விரும்புகிறேன்.” இது வெறும் விருப்பம் ஆகும் அதுவே “நான் Table Tennis விளையாட்டில் முதல் மாணவனாக வருவேன்”. என்று ஆணித்தனமாக அடித்து சொல்லும் போது இலக்காகிறது.

M-Measurable. அளவிடுதல்.

—-------------------------------------

“ என் வயதிற்கும் என் சக்திக்கும் ஏற்ற வண்ணம் இந்த விளையாட்டை முறைப்படி பயிற்சி செய்து வெற்றி கொள்வேன்” என்பதே நாம் செய்யும் அந்த இலக்கை நோக்கின பயணத்தில் இலக்கை அளவிடுதல் ஆகும்.

A-Achievable. சாதிப்பது.

நான் இந்த விஷயத்தை சாதித்து விடுவேன் என்பதை தூங்கும்போதும் விழிக்கும் போதும் நம்முடைய ஒவ்வொரு அன்றாட செயலின் போதும் சாதித்து விடுவேன் என்ற ஒரு தன்னம்பிக்கையும் அதே நேரத்தில் அதைப்பற்றி என ஒரு நேர்மறையான சிந்தனையை நாள் முழுவதுமே தனக்குள் சொல்லி தன்னைத் தானே உற்சாகப்படுத்துதல் மிகவும் அவசியம்.

R-Realistic. எதார்த்தமானது

—-------------------------------------

நம்முடைய இலக்கை நோக்கி பயணிப்பது என்பது ஒரு எதார்த்தமான விஷயமாக இருப்பது அவசியம். பத்து நாளில் நான் சிறந்த வீரனாய் விடுகிறேன் ஒரு பயிற்சிக்கு முறைப்படி செல்லாமல் என்னால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற முடியும் இவை அனைத்தும் எதார்த்தமற்ற செயல், இதை அறவே தவிர்த்தல் அவசியம்.

T-Time. கால எல்லைக்குட்பட்டது.

—---------------------------------------------

“நான் மூன்று ஆண்டுகளில் மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் முதல் மாணவனாக வருவேன்” என்று ஆணித்தரமாக அடித்து சொல்லுவதே கால எல்லைக்குட்பட்டு நம்முடைய இலக்கை நிர்ணயிப்பதாகும்.

இந்த இலக்கை பற்றிய மேலும் சுவாரசியமான அறிவுரைகளை தொடர்ந்து பேசுவோம்………….???