13-ஆம் நூற்றாண்டை சார்ந்த சோழர் - மூன்றாம் இராசராசன் ஆட்சி ஆண்டு - (பொ. ஆ. 1216-1246) கல்வெட்டுகள் புலியூர்க் கோட்டத்து திருநீர்மலை, மாங்காடு போன்ற ஊர்களை பற்றி குறிப்பிடுகின்றன.
திருநீர்மலை நீர்வண்ணர் கோயிலில் மூன்றாம் இராசராசனின் 5 கல்வெட்டுகள் உள்ளன. புலியூர் கோட்டம் (பழைய சென்னை) பற்றி தகவல்கள் தருகின்றன.
1. 533/1912:
மாவட்டம்: காஞ்சிபுரம்
வட்டம்: தாம்பரம்
திருநீர்மலை:
த. நா. அ. தொல்லியல் துறை (கல்வெட்டு) காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள் V தொடர் எண் : 737 / 2017:
ஆட்சி ஆண்டு: 6
வரலாற்று ஆண்டு: பொ. ஆ. 1222
மொழி: தமிழ்
இ. க. ஆ. By: 533/1912
எழுத்து: கிரந்தங் கலந்த தமிழ்
அரசன்: சோழர் - மூன்றாம் இராசராசன்
இடம்: நீர்வண்ணர் கோயில் கிழக்குச் சுவர்.
குறிப்புரை :
புலியூர்க் கோட்டத்து மாங்காடு நாட்டு மலையம்பாக்கம் சார்ந்த கையரையன் திருவகத்திசுரமுடையான் என்பவனிடமிருந்து ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துச் சுரத்தூர் நாட்டு திருநீர்மலை எம்பெருமாள் கோயிலில் காணியுடைய நம்பிமாரில் பாரத்வாஜ கோத்திரத்தைச் சார்ந்த அருளான பட்டன் திருவேட்டை அழகியான் என்பவன் 1 1/2 பழங்காசுகள் பெற்றுக்கொண்டு ஒரு திருவிளக்கெரிக்க சம்மதித்துள்ளச் செய்தி.
2.
த.நா.அ.தொல்லியல் துறை (கல்வெட்டு) காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள் V: தொடர் எண் 738/ 2017
மாவட்டம்: காஞ்சிபுரம்
வட்டம்: தாம்பரம்:
திருநீர்மலை:
மொழி: தமிழ்
எழுத்து: கிரந்த கலந்த தமிழ்
அரசன்: சோழர் - மூன்றாம் இராசராசன்
ஆட்சி ஆண்டு: 16
வரலாற்று ஆண்டு : பொ. ஆ. 1232
இடம்: திருநீர்மலை நீர்வண்ணர்க் கோயில் தெற்குச் சுவர்.
இ.க.ஆ.அறிக்கை: 544/1912
குறிப்புரை:
: பெருங்கனல் வட்டம்பாக்கம் ஊர்த் தலைவன் அருளாளப் பெருமாள் சியன் என்பானிடமிருந்து திருநீர்மலை எம்பெருமாளுக்கு ஒரு சந்தி விளக்கு எரிப்பதற்காக இக்கோயிலைச் சேர்ந்த பாரத்வாஜ கோத்திரத்தைச் சார்ந்த மலைக்கினிய நின்றான் என்பவன் ஒன்றே முக்கால் மாடை பொன் பெற்றுக்கொண்டு விளக்கெரிக்க சம்மதித்துள்ளான்.
3.
த.தா.அ தொல்லியல் துறை (கல்வெட்டு) காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள் V: தொடர் எண் தொடர் எண் : 739/2017:
மாலட்டம்: காஞ்சிபுரம்
வட்டம்: தாம்பரம்
திருநீர்மலை:
அரசன்: சோழர் - மூன்றாம் இராசராசன்
ஆட்சி ஆண்டு : 16
வரலாற்று ஆண்டு: பொ. ஆ. 1232
இ.க.ஆ. அறிக்கை 534/1912
மொழி: தமிழ்
எழுத்து: தமிழ்
இடம்: நீர்வண்ணர் கோயில் கிழக்குச் சுவர்.
குறிப்புரை :
மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் கண்டகோபாலன் என்பவன் திருநீர்மலை எம்பெருமானுக்கு 'திருவாழிபரப்பினான் சந்தி'யின்போது அமுதுபடி, சாத்துபடி, திருநந்தாவிளக்கு ஆகியவற்றிற்காகப் பத்து வேலி நிலம் தானமாக அளித்துள்ளான்.
4.. த.நா.ஆ தொல்லியல் துறை : (கல்வெட்டு) காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள் V தொடர் எண் 740/ 2017.
அரசு: சோழர் - மூன்றாம் இராசராசன்
ஆட்சி ஆண்டு: 19:
வரலாற்று ஆண்டு: பொ. ஆ. 1235
வட்டம்: தாம்பரம்
திருநீர்மலை:
எழுத்து: கிரந்தங் களந்த தமிழ்
இடம்: நீர்வண்ணர் கோயில் - நரசிம்மர் சன்னதி தெற்குச் சுவர்.
குறிப்புரை : இக்கோயில் சிங்கபெருமாள் சன்னதியில் ஒரு சந்தி விளக்கு எரிக்க கோவிந்த பட்டன் என்பவன் 'கண்டகோபாலன் மாடை' ஒன்று தானமாக வழங்கியுள்ளான். இக்கோயிலில் காணியுடைய கிருஷ்ணபட்ட சோமயாசி என்பவனின் மகன்கள் பாரத்வாஜி பட்டன், சிங்கப்பெருமாள் ஆகியோர் ஒரு மாடைப் பொன் பெற்றுக்கொண்டு விளக்கெரிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
5.
த.நா.ஆ தொல்லியல் துறை (கல்வெட்டு) காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள் V தொடர் எண் 741/ 2017.
மாவட்டம்: காஞ்சிபுரம்
வட்டம்: தாம்பரம்
திருநீர்மலை:
அரசு: சோழர்: மூன்றாம் இராசராசன்
ஆட்சி ஆண்டு: 23
வரலாற்று ஆண்டு : பொ. ஆ. 1239
இ.க.ஆ. அறிக்கை : 561/1912
மொழி: தமிழ்
எழுத்து: கிரந்தங் கலந்த தமிழ்
இடம்: நரசிம்மர் சன்னதி தெற்குச் சுவர்.
குறிப்புரை :
பெருங்கனல் வட்டம்பாக்கம் ஊரைச் சார்ந்த பட்டாலகன் என்பவன் திருநீர்மலை நாயனார் சிங்கபெருமாளுக்கு ஒரு சந்தி விளக்கு வைத்துள்ளான்.
நன்றி : த. நா. அ. தொல்லியல் துறை (கல்வெட்டு ஆதாரங்கள்)
தொடர்கள்
தொடர்கள்
Leave a comment
Upload