தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

இந்தி எதிர்ப்பு

20240507204258874.jpeg

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா என்ற படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் டிரைலரை பார்த்தால் இந்தி திணிப்பை எதிர்ப்பது போல் இருக்கிறது.

மிஸ் யூ

20240507200920873.jpeg

சித்தார்த் ,ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் படத்திற்கு மிஸ் யூ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது காதல் கதையாம். ஆஷிகா ஆனந்த் தெலுங்கில் கன்னடத்தில் பிரபலம் இப்போது தமிழுக்கு வருகிறார்

மேகா ஆகாஷ்

2024050720460055.jpeg

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடி மேகா ஆகாஷ். விஜய் ஆண்டனி போன்ற திறமையான நடிகருடன் சேர்ந்து நடித்தது நல்ல அனுபவம் என்கிறார் அவர். மேகா ஆகாஷ் ஏற்கனவே சபாநாயகன் வடக்குப்பட்டி ராமசாமி படங்களில் நடித்திருக்கிறார்

காஜல் அகர்வால்

20240507203900169.jpeg

இந்தி திரை உலகுக்கும் தென்னிந்திய திரை உலகுக்கும் நிறைய பாகுபாடு உள்ளது. இந்தியில் ஷர்மிளா தாகூர் ஹேமமாலி போன்றோர் திருமணத்துக்குப் பிறகு பிஸியாக நடித்து வந்தனர். தற்போது கூட இந்தியில் திருமணமான தீபிகா படுகோனே ஆலியா பட் போன்ற நடிகைகளுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தென்னிந்திய திரை உலகில் திருமணமான நடிகைகளை ஓரம் கட்டுகிறார்கள் என்று வருத்தப்படுகிறார் காஜல் அகர்வால்

தமன்னா

20240507204035608.jpeg

சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 3 படப்பிடிப்பு விரைவில் நடக்க இருக்கிறது. காமெடி படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க விரும்புகிறார் தமன்னா எனவே எனக்கு இந்த படத்தில் நாயகி வேஷம் தர வேண்டும் இயக்குனர் சுந்தர் சிக்கு அழுத்தம் தருகிறார் தமன்னா

அபர்ணா பாலமுரளி

20240507202211161.jpg

சூரரைப் போற்று மற்றும் எட்டு தோட்டாக்கள் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அபர்ணா முரளி. தற்போது தனுஷுடன் ராயன்படத்தில் நடிக்கிறார் .மேலும் சில பட வாய்ப்புகள் தற்சமயம் வருகிறது ஆனால் அவரது எடையை குறைக்க சொல்லி ஆலோசனை சொல்கிறார்கள் இயக்குனர்கள். என் எடை குறைந்தால் என் அழகே காணாமல் போய்விடும் என்று அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்அபர்ணா முரளி

கூலி

20240507203101178.jpg

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தில் சத்யராஜ் தற்சமயம் இணைந்திருக்கிறார் ஆனால் வில்லனாக அல்ல ரஜினிக்கு நண்பராக. 38 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் சத்யராஜ்.

சோபிதா துலி பாலா

20240507202727162.jpg

சோபிதா துலி பாலா தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கிறார். தற்சமயம் நாக சைதன்யாவும் இவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவுகின்றன. தற்சமயம் ஐரோப்பாவில் இருவரும் சுற்றுலா சென்றிருக்கும் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. அதன் மூலம் இவர்கள் காதலிப்பது உறுதியாகிவிட்டது போல் தெரிகிறது. நாக சைதன்யா ஏற்கனவே சமந்தாவுடன் திருமணம் ஆகி தற்சமயம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.