நீலகிரியின் புதிய கலெக்டர் லட்சுமி பவ்வியா தன்னீரு கடந்த மாதம் பொறுப்பேற்று தென் மேற்கு பருவ மழையுடன் போராடி கொண்டிருந்தார்.
தற்போது மழை சற்று விலகியுள்ளது .
பல புது மாற்றங்களை கொண்டுவர முன்னெடுக்கிறார் .
ஊட்டி நகரின் முக்கிய சாலையான கமர்ஷியல் சாலையில் வாகனங்கள் பார்க் செய்திருப்பதால் ஏகப்பட்ட இடைஞ்சல் பாதசாரிகளுக்கு ஏற்பட்டிருந்தது .
கலெக்டரின் பார்வை இந்த சாலையின் மேல் பார்க்க ஆக்ஷனில் இறங்கினார் .
சேரிங்கிராஸ் முதல் கேசினோ ஜங்ஷன் வரை நானுறு மீட்டர் நடை பாதை அமைக்க பட்டு வர்ணம் தீட்டப்பட்டு ஒரு கலர்புல் நடைபாதை இரவோடு இரவாக ரெடியானது .
வியாழக்கிழமை மாலை கலெக்டர் புதிய எஸ் பி நிஷா மற்றும் அதிகாரிகள் புதிய வண்ண நடை பாதையில் நடந்து வந்தனர் .
கலர்புல் நடைபாதையின் இரு புறமும் பூச்சட்டிகள் வைத்து அழகுபடுத்தினர் .
பத்திரிகையாளர்களிடம் கலெக்டர் கூறினார்,
" சேரிங் கிராஸ் முதல் கேசினோ ஜங்ஷன் வரை நடைபாதை இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள் இதை சரிசெய்யவேண்டும் என்று .நாங்கள் ஆய்வு செய்து ட்ராபிக் போலீசின் உதவியுடன் ஒரே இரவில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது .
வெகு நாளாக இங்கு கேட்பாரற்ற வாகனங்கள் பார்க் செய்திருந்தனர் நம்ம போலீஸ் இரவோடு இந்த பகுதியை க்ளியர் செய்து கொடுத்தனர் .
மேக்கன்ஸ் ஆர்க்கிடெக்ட் கல்லூரி மாணவிகள் வர்ணம் தீட்டி அழகு படுத்தி கொடுத்துள்ளனர் .
நானுறு மீட்டருக்கு தான் இந்த நடைபாதை அமைக்க பட்டுள்ளது .
உள்ளூர் வாசிகள் இனி இங்கு ஈசியாக நடந்து செல்லலாம் .
இங்கு பார்க் செய்த வாகனங்கள் இனி மேலே வை பி ஏ அருகில் சாலையில் நிற்க அனுமதிக்க பட்டுள்ளது .
இது ஒரு ட்ரையல் இதே போல மற்ற இடங்களிலும் அமைக்கப்படும் " என்று கூறினார் .
மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் நம்மிடம் பேசினார் ,
" மலை பிரதேசங்களில் நடை பாதைகள் தான் அவசியம் நடந்து செல்வது தான் நல்லது .
சில ஆக்கபூர்வமான மாற்றங்கள் கலர் புல்லாக செய்யவேண்டியுள்ளது.
இந்த புதிய நடைபாதையை மாவட்ட நிர்வாகம் அமைத்தது மிக சிறந்த ஒன்று ஊட்டிக்கு தேவையான ஒன்று பெரிய நகரங்களில் வாகன நெரிசல்களில் நடந்து செல்வது போல ஊட்டியில் செல்வது சரியில்லை இது நல்ல ஐடியா ". என்று கூறினார் .
ஏற்கனவே இந்த பகுதியில் அழகான நடைபாதை இருந்தது அதில் நாமெல்லாம் நடந்து சூப்பர் மார்க்கெட் , குறிஞ்சி கஃபே , செல்லராம்ஸ் கடைகளை ரசித்த காலங்கள் உண்டு .
கிறிஸ்துமஸ் காலத்தில் சாண்டாக்ளாஸ் பவனி வர அதே நடை பாதையில் பனி குளிரில் நின்று அழகிய பூங்காவில் நடக்கும் கிறிஸ்துமஸ் கரோல் பாடல்களை ரசித்த காலங்கள் நம் நினைவில் .
மீண்டும் கலெக்டர் அந்த மாலை வேளைகளை கொண்டுவந்தால் நல்லது .
நன்றாக இருந்த நடைபாதையை மெனக்கெட்டு இடித்து பார்க்கிங் கொண்டு வந்தது போலீஸ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தான் .
ஏற்கனவே இன்னசன்ட் திவ்யா கலெக்டராக இருந்த பொழுது இந்த சாலையில் பார்க்கிங்கை அப்புறப்படுத்தி நடை பாதை அமைத்து உள்ளுர்வாசிகளும் சுற்றுலாக்களும் ஹாயாக நடந்து செல்ல நடவடிக்கை எடுத்தார் .
அதே போல பஸ் நிலையத்தின் அருகில் உள்ள பாறை முனீஸ்வரன் கோயில் அருகே செல்லும் படிக்கட்டில் மிக மோசமான நிலைமை இருந்தது குடிமகன்கள் மது குடித்து அனைத்து அசுத்தமும் நடக்க அந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டு தன்னார்வலர்களால் கலெக்டரும் இணைந்து வர்ணம் தீட்டி அழகு படுத்தினார் .
அவர் மாற்றலாகி சென்றபின் நகராட்சி கண்டுகொள்ளாமல் விட்டுவிட இன்று மீண்டும் பழைய நிலைமை .
ரயில் நிலைய அருகில் வரிசையாக தேவையற்ற பெட்டி கடைகள் அங்கு அசுத்தத்திற்கு பஞ்சமில்லை .
கலெக்டர் லட்சுமி பவ்வியாவின் பார்வை இந்த பக்கம் திரும்பினால் நல்லது என்கிறார்கள் உள்ளூர்வாசிகள் .
Leave a comment
Upload