திரிஷா
சந்திப் ரெட்டிவங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் பான் இந்தியா படத்தில் வில்லியாக நடிக்கிறார் திரிஷா.
வேட்டையன்
வேட்டையன் படம் அக்டோபர் 10-ஆம் தேதி ரிலீஸ். செப்டம்பர் 20-ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இசை வெளியீட்டு விழா.
ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு கொஞ்சம் பைனான்ஸ் பிரச்சனை அது விரைவில் தீரும் படம் திரைக்கு வரும் என்கிறார் இயக்குனர் மிஷ்கின்.
ராஷ்மிகா தனது தங்கை
9 வயது ஆகிற ஷிமா தங்கை மீது பாசமாம். ராஷ்மிகா பிறந்து 19 ஆண்டுகளுக்கு பிறகு தங்கை பிறந்ததால் இந்த பாசம் என்று சொல்லி தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் ராஷ்மிகா.
பூஜா ஹெக்டே
முன்னணி நாயகி பூஜா ஹெக்டே சமீபத்தில் மும்பையில் 45 கோடி ரூபாய்க்கு ஒரு புது வீடு வாங்கி இருக்கிறார். காட்டுப்பகுதியில் ட்ரெக்கிங் சென்றிருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் பூஜா ஹெக்டே.
கீர்த்தி சுரேஷ்
ஐஸ் கிரீம், பஜ்ஜி என்று வித்தியாசமான புதுவகை பஜ்ஜி பற்றிய வீடியோ பார்த்து ஷாக் ஆகிவிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். நானும் எத்தனையோ வகை பஜ்ஜிகளை சாப்பிட்டு இருக்கிறேன். ஐஸ்கிரீமில் பஜ்ஜியா என்று ஆச்சரியப்படுகிறேன். இருந்தாலும் எப்படி இருக்கும் என்று டேஸ்ட் பண்ண விரும்புகிறேன் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
அனுபமா பரமேஸ்வரன்
முத்த காட்சி, படுக்கை அறை காட்சி எதுவா இருந்தாலும் ஓகே. ஆனால் சம்பளம் அதற்கேற்றப்படி இருக்க வேண்டும் என்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
ஸ்ரீ லீலா
விஜயின் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இயக்குனர் வெங்கட் பிரபு தொடர்பு கொண்ட போது நான் கதாநாயகியாக தமிழில் நடிக்க விரும்புகிறேன் என்று சொல்லி மறுத்துவிட்டாராம் ஸ்ரீலீலா.
வேதிகா
நடிகை வேதிகாவுக்கு சைக்கோ, திரில்லர் படங்களில் நடிக்க ஆசையாம்.
விஜய்
கோட் படத்தில் நடிக்க விஜய்க்கு சம்பளம் 200 கோடி தரப்பட்டதாம். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அவர் தான் என்கிறார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.
மேகா ஆகாஷ்
ஏற்கனவே சொல்லியபடி காதலருடன் தான் திருமணம் என்கிறார் மேகா ஆகாஷ். செப்டம்பர் மாதம் திருமணம். ஆனால், திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்வேன் என்கிறார் நடிகை.
சூர்யா
120 கோடிக்கு தனியாக ஜெட் விமானம் வாங்கியதாக வந்த தகவலை மறுத்திருக்கிறார் நடிகர் சூர்யா.
Leave a comment
Upload