சமீபத்தில் காலமான பிரபல நடிகை சரோஜாதேவி இறந்த பிறகும் தான் யாருக்காவது பயன்பட வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் தனது கண்களை தானம் செய்து இருக்கிறார். இறந்த பிறகும் ஒளியாகவே இருக்க விரும்பிய அவரது கடைசி ஆசை நிறைவேறியது. அவர் இறந்தவுடன் அவர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது டாக்டர்கள் அவரது கண்களின் கார்னியாவை தானமாக பெற்றுக் கொண்டனர். தற்போது இரண்டு சிறு குழந்தைகளுக்கு அவை வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளன.
சரோஜா தேவியின் இந்த உயரிய நல்ல எண்ணத்தை மற்ற நடிகர் நடிகைகளும் பின்பற்றலாம். அவர்களும் கண்தானம் செய்து ரசிகர்களையும் கட்டவுட் போஸ்டர் என்று பணம் விரையம் செய்வதற்கு பதில் கண் தானம் செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடலாம். சரோஜாதேவி வழிகாட்டி இருக்கிறார் செய்கிறார்களா பார்ப்போம்.
Leave a comment
Upload