தொடர்கள்
பொது
அட இதக் கேட்டீங்களா? – பால்கி

இந்தியாவின் இரண்டாவது தொடர் பிரதமராக மோடி

2025062519333867.jpg

ஜவஹர்லால் நேருவிற்குப் பிறகு, அதிக நாட்கள் தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக இருக்கும் சிறப்பைப் பெறுகிறார்.

கடந்த ஜூலை 24, 2025 அன்று பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விட இந்தியாவின் இரண்டாவது தொடர் பிரதமராக மோடி ஆகி இருக்கிறார். அதாவது, ஜூலை 25 ஆம் தேதியன்று மோடி இந்தியாவின் பிரதமராக 4, 078 நாட்களாக இருந்து வருகிறார்.

மத்தியிலும் மாநிலத்திலும் தொடர்ந்து அதன் தலைவராக அதாவது குஜராத் மாநிலத்தின் முதல்வராக 2001 லிருந்து 2014 வரையிலும், அதன் பிறகு தொடர்ந்து மத்திய அரசின் பிரதமராக மூன்றாம் முறையாகவும் இருந்து வருவது அவர் ஒருவரே. ஹிந்தி பேசும் மாநிலங்களிலிருந்து வராதவர், காங்கிரஸ் கட்சியல்லாதவர் பெரும்பான்மையும் பெற்றவர், சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்தவர் என்ற சிறப்பையும் பெறுகிறார்.

நேரு 16 வருடங்கள் 286 நாட்களாக தொடர்ந்து பிரதமராக இருந்திருக்கிறார்.

*************************************************************************************

திருப்பதியில் முதல் முறையாக ஸ்ரீபாதந்தாங்கிகளாக பெண்கள்

********************************************************************

இந்திய கப்பற்படை நாள்

20250625193547254.jpg

இந்த வருஷ கப்பல் படை நாளை திருவனந்தபுரத்தில் அதாவது அரபிக் கடலில் வெச்சிக்கறதா நம்ம ராணுவம் முடிவு செய்திருக்காம்.

**********************

மேற்கு வங்காளத்திலிருந்து 6,688 கம்பெனிகள் வேறு இடத்திற்கு மாற்றம்.

20250625193721379.jpg

இவற்றில் 1308 மஹாராஷ்ட்டிராவுக்கும், 1297 டில்லிக்கும், 879 உத்திரப்பிரதேசத்திற்கும், 511, சட்டிஸ்கர்க்கும், வெறும் 423 குஜராத்துக்கும் குடி பெயர்ந்துள்ளனவாம்.

அதாவது, ஏப்ரல் 1, 2011 முதல் மார்ச் 31, 2025 வரையில் உள்ள நிலவரமாம் ராஜ்ஜிய சபாவில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

****************