
காம்யக வனத்தில் ஒரு நாள் பாஞ்சாலியை கண்டு காமவயப்பட்டான் துரியோதனனின் தங்கை துச்சலையின் கணவனும் மாவீரனும் ஆன ஜெயத்ரதன். தன் இச்சைக்கு மறுத்த பாஞ்சாலியை கவர முயன்று, பீமனால் தோற்கடிக்கப்பட்டான். பின் பாண்டவர்களை கொல்ல சிவனிடம் வரம் வேண்டினான்; கிடைத்த வரமோ ஒரு நாள் மட்டும் பாண்டவர்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல். அதனால் அகப்பட்டான் அபிமன்யு! பாண்டவர்களால் பத்ம வியூகத்தில் அபிமன்யுடன் நுழைய இயலவில்லை;
புத்திர சோகத்தில் ஆழ்ந்த அர்ஜுனன் அபிமன்யு வதத்துக்கு பழி தீர்க்க சபதம் செய்தான்.
14 ஆம் நாள் போரில் கௌரவ சேனை கொடுத்த பாதுகாப்பை மீறி அர்ஜுனன் ஜெயத்ரதனை வதம் செய்தான்.
14ஆம் நாள் இரவு போரில் கௌரவ அணிக்கு அதிக சேதம் விளைவித்த வீரன் கடோத்கஜன், கர்ணனால் இந்திரனிடமிருந்து பெற்ற சக்தி ஆயுதத்தால் மரணம் அடைந்தான்.
குறளும் பொருளும்
கூடாது என்று விலக்கப்பட்ட செயல்களை (கௌரவர் அணியினர் ) செய்தவருக்கு அது (அபிமன்யு வதம்) முடிந்தாலும் துன்பம் தரும்
(ஜெயத்ரதன் வதம்).
கடிந்த கடிந்து ஓரார் செய்தார்க்கு அவை தாம்
முடிந்தாலும் பீழை தரும் 658
முறைப்படி செய்யாத காரியம் பலர் உதவினாலும் குற்றப்பட்டுவிடும்.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப்படும் 468

Leave a comment
Upload