தொடர்கள்
வலையங்கம்
தெலுங்கானா வழிகாட்டுகிறது

20260016063013293.jpg

தெலுங்கானாவில் வயதான பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு 15 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இந்தத் தொகை அவர்களின் பெற்றோரின் வங்கி கணக்கு நேரடியாக செலுத்தப்படும் என்று தெலுங்கானா முதல்வர் அறிவித்திருக்கிறார். . இதற்கான சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவிக்கிறார் அவர். . இது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒரு சட்டம். .

இப்போது பெற்றோர்களை புறக்கணிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.. முதியோர் காப்பகங்கள் அதிகரிப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்றும் அந்த புள்ளி விவரத்தில் தெரிவித்து இருக்கிறார்கள். .

எனவே இந்த திட்டத்தை தமிழ்நாட்டிலும் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். பெற்றோர்களை புறக்கணிப்பதாக அடிக்கடி தமிழ்நாட்டிலும் பல சோக செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.. இப்போது தெலுங்கானா வழிகாட்டுகிறது. தமிழகமும் செயல்படுத்த வேண்டும்.