தொடர்கள்
வலையங்கம்
உளவுத்துறை கவனிக்க வேண்டாமா

20260127231711648.jpeg

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட்டது தொடர்பாக திருப்பூரில் ஆறு பேரை புது டெல்லி போலீசார்சமீபத்தில் கைது செய்தனர்.

சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்காக ஆதரவாக சிலர் தொடர்ந்து கருத்துக்கள் பதிவிட்டு வந்ததை புதுடெல்லி க்யூ போலீசார் கண்காணித்து வந்ததில் அந்த நபர்கள் யார் என்று ஆய்வு செய்ததில் அவர்கள் திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து புது டெல்லி க்யூபிரிவு போலீசார் திருப்பூரில் இரண்டு நாள் முகாமிட்டுஇந்த ஆறு பேரை கைது செய்து இருக்கிறார்கள்.இவர்கள் தொழிலாளர் என்ற போர்வையில் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து கொண்டு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வந்தது தெரிய வந்தது.

ஏற்கனவே வங்கதேசம் இந்தியாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் நேரத்தில் தமிழகத்துக்கு வரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களை உளவுத்துறை கண்காணிக்க வேண்டாமா? .அவர்கள் சமீபத்தில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் குழப்பம் விளைவிக்க ஏதாவது சதி திட்டங்களில் ஈடுபட்டார்கள் என்பதையும் உளவுத்துறை விசாரிக்க வேண்டும். அவர்களிடமிருந்து எட்டு கைபேசிகள் 16 சிம் கார்டுகளை டில்லி போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். ஆனால் இது பற்றி இதுவரை தமிழக போலீஸ் எந்த விளக்கமும் தரவில்லை. சிறுபான்மையினர் நலன் என்ற பெயரில் பயங்கரவாதத்துக்கு ஆதரவான அரசாக திராவிட மாடல் அரசு இருக்கக் கூடாது.