தொடர்கள்
நெகிழ்ச்சி
திறமைகள் ஏராளம், வாய்ப்புகள் தாராளம் - பால்கி

20260414122518574.jpg

2023 நவராத்திரி சமயத்தில் நமது விகடகவி நடத்திய கொலு போட்டியில் அற்புதமாக கொலு வைத்திருந்ததாக பரிசு பெற்ற அம்பத்தூரைச் சேர்ந்த ஆர். ஜெயந்தி கடந்த மார்ச் 19 ஆம் தேதி அன்று இறைவனடி சேர்ந்தார். இறுதி காலத்தில் உடல் நலமின்மையால் சிகிச்சைக்காக ஆஸ்பித்திரியில் அவ்வப்போது சென்று வரவேண்டியிருந்தது.மறைந்த தனது அண்ணியைப் பற்றி வேணுகோபலன் கூறுகிறார்.

"எல்லாருக்குள்ளும் நிறைய திறமைகள் உள்ளன. பலர் வெளி காட்டாமல் சென்று விடுகின்றனர் சிலர் மட்டுமே கடுமையாக உழைத்து வெளி கொணர்ந்து சாதனை செய்து பெயரும் புகழும் பெறுகின்றனர். அதில் ஜெயந்தி மன்னி முதலிடம்.

கோலம் போட்டு வர்ணம் தீட்டும் ஜாலம். கொலு வைக்கும் பிரும்மாண்டம். உல்லன் ஸ்வெட்டர் தயாரிக்கும் எழில். ஒயர் கூடை பின்னும் கலை. பல விஷயங்களை மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம். (Update and upgrade) கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு வீணாக்காமல் முன்னேற வேண்டும் என்பது அவரது குறிக்கோள்.

மற்றவர்களுக்கு கற்று தரும் ஆசிரியர்களும் வழிகாட்டிகளும் (inspiration and guide) உண்டு. அதற்கு ஈடுபாடு திறமை ஞாபக சக்தி அசாத்திய உழைப்பை செலவு செய்தார். தன் மகள் அபியை பாடகியாக இந்தி தெரிந்தவராக ஓவியராக நல்ல படிப்பாளியாக படைப்பாளியாக மாற்ற தன் வாழ்நாளை செலவு செய்தார்.

எல்லா நிகழ்ச்சிகளிலும் நேர்த்தியான உடை அணிந்து முதலில் வருபவர். கடைசி வரை இருந்து உதவி செய்பவர்.

மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று நல்ல எண்ணம் உண்டு

அதனால் தான் பூக்காரி காய்கறிக்காரி மளிகை கடைக்காரர் அயர்ன்காரர் பொம்மை விற்பவர் எல்லாம் அழுது கொண்டு இறுதியாக பார்க்க ஓடி வந்திருக்கிறார்கள்.

அவரை போன்ற இன்னொருவரை காண்பது அரிது.

மறைந்த ஜெயந்தியின் கணவர் ரங்கராஜன் நினைவலைகள் என்று தமிழகத்தின் எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் பாடகிகள் போன்ற ஆளுமைகளைச் சந்தித்த நிகழ்வுகளை எழுதி வருகிறார்.