தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260519224124452.jpg]

Heading : குருவயூரப்பனின் பரம பக்தன் பூந்தானம் - பால்கி

Comment : நல்ல தகவல், நாம சங்கீர்தனத்தின் மகிமை நாராயணனை அடையும் வழி,

Ujjivanam , Chennai

Heading : சி பி எஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் சர்ச்சை

Comment : ஆக்க பூர்வமாக சிந்தித்து நேர்மையாக படித்து எழுதும் மாணவர்கள் எதிர் காலத்தை வீணாக்கி அவர்களை மனஅழுத்தத்தில் தள்ளும் என்று வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் ஆரம்பத்திலேயே கூறினார்கள்

Ujjivanam , Chennai

Heading : "ஸ்டார் மேக்கர்" பாரதி ராஜாவின் திரை நாயகிகள் - மரியா சிவானந்தம்

Comment : எத்தனையோ உள்ளங்களுக்கு மலரும் நினைவுகள் வரிசையில் பாரதிராஜாவின் படைப்புகளை விகடகவி வெளியிட்டதில் மிக்க மகிழ்ச்சி

Ujjivanam , Chennai

Heading : பயோ கேஸ் - அவசரத் தேவை

Comment : நல்ல யோசனை, அதனை செயல் படுத்த வேண்டும்

Rama venkatesan , Trichy

Heading : இரயில் சொல்லும் பாடம்...!! - கோவை பாலா

Comment : பாலாவின் கவிதை மிக சிறப்பாக உள்ளது.

Subramanian , Chennai Posted Date : 15/06/2026 01:33:20 pm

Status : Pending for Approval

ArticleAction

ViewApprovedRemove

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : அதான் படிக்க ஆரம்பித்து ஒரே மூச்சில் படித்து விட்டு, எனக்கு புரிந்த கருத்தை போஸ்ட் செய்து விட்டுதான் மறு வேலை...

Sriram S , Chennai

Heading : குருவருள் சத்தியம், நிச்சயம், அபாரம் - பால்கி

Comment : ஞானகுரு அவர்கள் வாழ்க்கையே ஒரு வரத்தினால் ஆரம்பித்து இப்போது வரை நாமசங்கீர்த்தனம் செய்து வருவதை கேட்டு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது....🙏🙇🙏 அதற்கு அழகாக வர்ணனை கொடுத்த பால்கி க்கு ஒரு சபாஷ்👏

Sriram S , Chennai

Heading : திரினாமூல் காங்கிரசும் (TMC) சிவசேனா வழியா? – பால்கி

Comment : திசை மாறிய காங்கிரஸ் (TMC) ... மீண்டும் தாய்வீடு தேடி வருகிறது....

Sriram S , Chennai

Heading : பூந்தானத்தின் மோட்சம் பெற்ற இடமிருக்கும் அவரது இல்லம் : நேரடி விசிட் - பால்கி

Comment : படிக்க படிக்க பரவசம் 👌👌👌 பட்டத்திரி (நாராயணீயம் எழுதிய மகான்) அவர்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்.... பூந்தானம் பற்றி இந்த கட்டுரையில் தான் தெரிந்தது.... இவரது பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது....பூவுடலுடன் வைகுந்தம் 🙏 உங்களுக்கு இவர் கோயில் தரிசனம் கிடைத்த விதம் இன்னும் அதிசயம் 🙏🙇🙇🙇🙏

Sriram S , Chennai

Heading : நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர் : பிரக்ஞானந்தா - பால்கி

Comment : பிரக்ஞானந்தா பார்க்க சிறு பிள்ளை போல தோன்றினாலும், " பல தலை (மூளை) கொண்ட டிராகன்" என்று ஒரு பிரபல சதுரங்க வீரர் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது.... மொத்தத்தில் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவிற்கு வாங்கி கொடுத்த புகழை நல்ல விதத்தில் காப்பாற்றி வருகிறார்.... இவர் அக்காவும் சிறிதும் சளைக்காமல் கப் வாங்கி தள்ளுவதை பார்த்தால் "சதுரங்க குடும்பம்" என்ற பட்டம் அதிகம் பொருந்தும் 👏

Sriram S , Chennai

Heading : 4399 நாட் அவுட்....... தொடர்ந்து ஆடும் பிரதமர் - கிருஷ்

Comment : அவர் சாதனைகளை எல்லாம் நீங்களே பட்டியல் போட்டு சொல்லி விட்டீர்கள் 👏👌 25வருடங்களுக்கு மேலாக பொது வாழ்வில் ஈடுபட்டு ஒருநாள் கூட ஓய்வு எடுக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர் (ரோபோ போல) .... அவர் மேடையிலோ அல்லது பேட்டியிலோ அல்லது மீட்டிங்கிலோ ஒரு முறை கூட கொட்டாவி விட்டோ அல்லது தளர்ச்சியாகவோ பார்த்தது இல்லை... அவர் ஒரு அவதாரம் 🙏

Sriram S , Chennai

Heading : "ஸ்டார் மேக்கர்" பாரதி ராஜாவின் திரை நாயகிகள் - மரியா சிவானந்தம்

Comment : அவர் படைப்புகளில் "மயில் சப்பாணி பரட்டை நடிக்கும் 16வயதினிலே" தொடங்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "முதல் மரியாதை" வரை எத்தனையோ வெற்றி படங்களை தந்த மிக பெரிய சாதனையாளர்.... அவர் மறைவை நாம் ஏற்றுக்கொள்ள பல வருடங்கள் ஆகலாம்....😭

Sriram S , Chennai

Heading : பயோ கேஸ் - அவசரத் தேவை

Comment : இந்த பயோ கேஸ் திட்டம் ஏற்கனவே அறிமுகமான திட்டம்தான்.... நிறைய கம்பெனிகள் இதில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர்... கிராம புறங்களில் இந்த திடக்கழிவு அதிக அளவில் கிடைப்பதால் அங்கு இது பிரபலம்.... நகர்ப்புறத்தில் இதை செயல்படுத்த வேண்டிய அளவு திடக்கழிவு இல்லாத போது சமையல் கழிவுகள் கூட இத்துடன் சேர்த்து காஸ் தயாரிப்பு செய்ய நிறைய கம்பெனிகள் உள்ளன... இதற்கு பதிலாக சூரிய ஒளியில் இருந்து கரண்ட் தயாரிப்பு பிரபலமாகி வருவதால் நகர்ப்புறத்தில் இது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது... மற்றும் அரசாங்கம் மானியமும் வழங்கி வருகிறது....

Sriram S , Chennai

Heading : நெஞ்சோரம் சந்தித்தேன்! – என் குமார் (அடுத்த வாரம் முதல்)

Comment : மகிழ்ச்சி சார். வாழ்த்துகள். தாங்கள் நெஞ்சோரம் சந்தித்தவற்றை/ சந்தித்தவர்களை நாங்கள் எங்கள் நெஞ்சோரம் ஏந்திக்கொள்ளத் தயாராயிருக்கிறோம். நன்றி.

Raj Venkat, Chennai