தொடர்கள்
விகடகவியார்
வலையங்கம் : எத்தனால் நல்லதா

20260520065019662.jpeg

எத்தனால் கலந்த எரிபொருளை பயன்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தினார். இதன் மூலம் பெட்ரோல் தேவை குறையும் என்பது பிரதமரின் எதிர்பார்ப்பு.

இந்திய அரசாங்கம் 2014-ஆம் ஆண்டு பெட்ரோலுடன் 1.5 சதவீதம் எத்தனாலை கலக்க தொடங்கியது. 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு ஜூன் 2022-ல் எட்டப்பட்டது. 2023-ல் இது 20% ஆக உயர்ந்தது. 2025-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 20 கலப்பு இலக்கை வெற்றிகரமாக அடைந்து விட்டதாக மத்திய அரசு அறிவித்தது. முன்னதாக இதற்கான காலக்கெடு 2030-ஆம் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இன்று இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பி.எஸ். 6 (Bs6) தர நிலைகளுக்கு இணங்க கூடிய பெட்ரோல் வாகனங்கள் 20 அல்லது 20% எத்தனால் கொண்ட பெட்ரோலில் இயங்கும். அதைவிட அதிக எத்தனால் கொண்ட எரிபொருள் இந்த வாகனங்களுக்குப் பொருத்தமானவை அல்ல.

பெட்ரோலை விட எத்தனால் குறைந்த ஆற்றலையே கொண்டுள்ளது.

இதனால் தான் பைக் அல்லது காரின் மைலேஜ் குறைய கூடும் என்ற கருத்தும் பேசும் பொருளாக இருக்கிறது.

இதற்கு சில தொழில்நுட்ப வல்லுநர்கள் சொல்லும் தீர்வு வாகனத்தில் எஞ்சினில் சில தொழில்நுட்ப மாற்றங்களை செய்வதன் மூலம் கூடுதல் பாகங்களை நிறுவுவதன் மூலமும் இதை மேம்படுத்த முடியும் என்கிறார்கள்.

இந்த தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்திய அரசாங்கம் எத்தனால் எரிபொருள் வாகனங்களின் மைலேஜ் இரண்டு முதல் ஆறு சதவீதம் வரை தான் குறைகிறது என்று விளக்கம் சொல்கிறது.

எத்தனால் பயனாளிகள் வாகனத்தின் சராசரி மைலேஜ் 30 முதல் 50 சதவீதம் வரை குறைந்து விட்டதாக புகார் கூறுகிறார்கள்.

20% எத்தனால் கொண்ட 20 என்று அழைக்கப்படுவதைப் போல, 85 சதவீதம் கொண்ட பெட்ரோல் 85 என்று அழைக்கப்படுகிறது. 85 எரிபொருள் ஜூன் ஐந்தாம் தேதி 2026 அன்று நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வழக்கமான 20 பெட்ரோலை விட லிட்டருக்கு 20 ரூபாய் குறைவாக கிடைக்கிறது.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி 85 பற்றி குறிப்பிடும் போது "இது சில அம்சங்களில் சிறந்தது.

எரிபொருள் ஆற்றல், சேமிப்பு திறன் போன்றவற்றை மனதில் கொள்ளும் போது எஞ்சின் ஆற்றல் குறைவாக இருக்கும். ஆனால், விலையின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை இந்த ஆற்றல் அல்லது சக்தி இழப்பை ஈடு செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை " என்கிறார்

85 20 % மலிவானதாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. 85 எரிபொருளில் அதிகப்படியான எத்தனால் உள்ளது. இது பெட்ரோல் அல்லது20 எரிபொருளுக்காக வடிவமைக்கப்பட்ட எஞ்சின் களில் சிக்கல்களை ஏற்படுத்த கூடும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எத்தனால் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதாவது இது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது.

.இதனால், எத்தனால் கலந்த எரிபொருள் எஞ்சின் பாகங்கள், எரிபொருள் குழாய்கள், எரிபொருள் தொட்டிகள், பைப் லைன், டேங்க் சீல் போன்றவற்றை சேதப்படுத்தக் கூடும் அல்லது தேய்மானம் அடைய செய்ய வாய்ப்பு. இதன் காரணமாக இந்த வாகனங்களை பழுது பார்க்கவும் பராமரிக்கவும் கூடுதல் செலவாகும் என்கிறார்கள்.

தற்போதைய நிலையில் பெட்ரோலுடன் மட்டுமே எத்தனால் கலக்கப்படுகிறது. டீசலுடன் கலக்கப்படுவதில்லை மக்காசோளம் மற்றும் கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.

இந்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது போல் ஒருடன் கரும்பிலிருந்து 100 கிலோ சர்க்கரை, 70 லிட்டர் எத்தனால் தயாரிக்க முடியும் என்கிறார்கள். ஒரு லிட்டர் எத்தனால் தயாரிப்பதற்கு 4900 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். இதன் நடுவே எத்தனால் பயன்படுத்துவது வாகனக் காப்பீட்டு என்ற பேச்சும் எழுந்தது.மத்திய அரசு இது வெறும் வதந்தி என்று மறுத்து இருக்கிறது.