
செங்குத்தாக மேலெழும்பி வானில் பறந்து, பின்னர் பாதுகாப்பாகத் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த காருக்குள் உள்ளடங்கிய விசிறி அமைப்புகள் (Enclosed Ducted Fan System) இருக்கின்றன. இதனால் வழக்கமான பறக்கும் கார்களைப் போல் வெளியே தெரியும் 2 இறக்கைகளோ அல்லது பெரிய சுழலிகளோ இதில் இல்லை. இந்த வாகனத்தின் உள்பகுதியிலேயே மறைத்து வைக்கப்பட்டுள்ள 'மல்டி-ஸ்டேஜ் திரஸ்ட்-வெக்டரிங் டக்டட் பேன்' (Multi-stage Thrust-vectoring Ducted Fan) தொழில்நுட்பம் மூலம் இது மேல்நோக்கி எழும்பவும், திசையை மாற்றவும் செய்கிறது. இதனால் நகர்ப்புறங்களில் தாழ்வாகப் பறக்கும்போது பாதுகாப்பு அதிகமாக இருக்கும்.
இந்த புதுவகை கார் வானில் பறப்பது மட்டுமின்றி, தரையிறங்கியவுடன் சாதாரண காரைப் போல் சாலையிலும் ஓட்டிச் செல்லக்கூடிய வகையில் சக்கரங்களுடன் இருவழி பயன்பாடு (Road & Air Mobility) முறையில் உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது இதன் எடை மற்றும் இருக்கை வசதி, சோதனை மாதிரி (Prototype) வடிவில் ஒருவர் மட்டுமே பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் அதிகபட்ச புறப்படும் எடை (Takeoff weight) 280 கிலோவாகவும், சுமை தாங்கும் திறன் (Payload capacity) 120 கிலோவாகவும் உள்ளது.
இந்த புதுவகை குட்டி கார் வானில் மணிக்கு அதிகபட்சமாக 150 கி.மீ வேகத்திலும், சாலையில் மணிக்கு 80 கி.மீ வேகத்திலும் செல்லும் திறன் கொண்டது. இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 300 கி.மீ தூரம் வரை பயணிக்கும். சுமார் 3,000 மீட்டர் உயரம் வரை பறக்கும் என்று சீன ஆய்வு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது சோதனை நிலையில் உள்ள இந்த புதுவகை குட்டி காரை தயாரித்த நிறுவனத்தின் பெயர் மற்றும் மாடல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
தற்போது சோதனை ஓட்டங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்காலத்தில் 2-4 பேர், 6-8 பேர் மற்றும் 12-15 பேர் வரை பயணிக்கும் பெரிய ரக கார் மாடல்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. முழுமையான பாதுகாப்பு சான்றிதழ்கள் மற்றும் சட்ட அனுமதிகளுக்குப் பிறகே, இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் இந்த புதுவகை பறக்கும் குட்டி கார் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு வரும் என்று சீன நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Leave a comment
Upload