பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகரைச் சேர்ந்தவர் நாற்பத்தெட்டு வயது சீசர். கூலித்தொழிலாளியான இவர், தனது தெருவிலுள்ள 4 நாய்களுக்கு தனது கையில் காசு இருக்கும்போது உணவு வாங்கி வழங்குவார். இதனால் அந்த 4 தெரு நாய்களும் இவரையே எந்நேரமும் வாலை ஆட்டியபடியே சுற்றி வந்துள்ளன.
இந்நிலையில், கடந்த வாரத்தில் ஒரு நாள் சீசருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் பிரேசிலியாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே, தனது எஜமானர் காணாமல் அந்த 4 தெரு நாய்களும் அப்பகுதி சாலை முழுவதும் சுற்றி தேடி அலைந்துள்ளன.
இறுதியில், அங்குள்ள மருத்துவமனையில் தனது எஜமானர் சிகிச்சை பெறுவதை அறிந்து, அந்த 4 தெருநாய்களும் மருத்துவமனைக்கு ஓடி வந்தன. மருத்துவமனைக்குள் அந்த நாய்களை அனுமதிக்காததால், அவை நான்கும் மருத்துவமனை வாசலிலேயே எஜமானருக்காக 2 நாட்களாக காத்திருக்கத் தொடங்கின.

வாசலில் காத்திருக்கும் நாய்கள்...
இதுபற்றி அறிந்ததும் மருத்துவமனை நிர்வாகம் மனமிறங்கி, அந்த 4 நாய்களையும் எஜமானரை சந்திக்க அனுமதி அளித்தனர். இதையடுத்து அவை வேகமாக ஓடிச்சென்று படுக்கையில் கிடந்த எஜமானர் அருகே சோகமாக நின்று, நீண்ட நேரம் கண்ணீர் வடித்தன. இக்காட்சிகளை மருத்துவமனை ஊழியர்கள் செல்போனில் படம்பிடித்து, வலைதளப் பக்கங்களில் வெளியிட்டனர்.
தற்போது இந்த வீடியோ காட்சிகளில்... எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பாசமும் புரிதலும் கொண்ட தெருநாய்களின் ஏக்கமிகு முகத்தைக் கண்டு ஏராளமான வலைதளவாசிகள் கண் கலங்குகின்றனர்.

Leave a comment
Upload