ஆன்மீகம்
பிரபஞ்சமெங்கும் பெரியவா - 64 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20200330135944745.jpeg

சர்வஞன், ஸர்வவ்யாபி காஞ்சி மகா பெரியவா இன்று உலகம் முழுவதும் உள்ள அணைத்து நாட்டினருக்கும், மதத்தினருக்கும் சொந்தமாக இருக்கிறார். அவரை சென்று வணங்கியவருக்கு மட்டும் அவர் கடவுள் இல்லை. அவரைப் பற்றிக் கேள்விப்படாத, தெரிந்திருக்காத, பரிச்சயமில்லாதவருக்கும் கடவுள் தான். ஆம் துன்பத்தில் இருக்கும் யாரையும் அழைத்து ஆசிவழங்கி அரவணைத்துக்கொள்ளும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா.

அவரைப் பற்றி மிக அதிக சுவாரஸ்யமாய் ஒரு காணொளி .

ஸ்ரீ மகேஷ் விநாயகராம்...

பெரியவாளின் தீவிர பக்தர் இவர் மட்டுமல்ல... இவருடைய குடும்பமே. அதுவும் தலைமுறை தலைமுறையாக. இவருடைய அனுபவங்கள் ஒவ்வொன்றும் தெய்வீக மனம் கமழும். முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் இவருடைய பெரியப்பா எழுதி இவர் இசையமைத்த ஒரு பாடல் “பார்த்துகிட்டே இருக்க தோணுது”. ஸ்ரீ பெரியவாளின் முழு தினத்தையும் அப்பாடல் மூலம் மிக அருமையாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவார்.

குழந்தையாக இருந்தது முதல் தற்போது வரை ஸ்ரீ பெரியவாளின் அனுக்கிரஹம், தனக்கு எப்படி இருக்கிறது என்று இவர் விவரிக்கும் விதம் அருமையோ அருமை. உலகம் சுற்றும், போற்றும் மிகப் பெரிய நட்சத்திர வித்வானாக இருந்தாலும், ஸ்ரீ பெரியவாளை பற்றி பேசும்போது குதூகலமான மழலையாகவே மாறுகிறார். கண்டு களியுங்கள்!

" பார்த்துகிட்டே இருக்க தோணுது " பாடல்