வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20200401163653351.jpg

“சிநேகமுள்ள சிங்கம் ஜெயகாந்தன்...” - வேங்கடகிருஷ்ணன்

என்னை ஆக்கிரமித்துக் கொண்ட தமிழ் நாவல் ஆசிரியர்களில் ஜெயகாந்தன் முதலிடம்... என்னைப் புத்தகம் படிக்கத் தூண்டிய ஆசான்.. தமிழ் பிடிக்கும் எனக்கு ஆரம்பத்தில் அப்படி ஒன்றும் புத்தகப் பைத்தியமாக இல்லை... பின் யாரோ தந்தார்கள் அவரின் “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” புத்தகம்... அதிலிருந்து அவர் படைப்பில் இருந்து மீளவில்லை... என் பொக்கிஷம் அன்று சேரத் தொடங்கியது.. அவரின் நாவல்கள் சேர்ந்ததோடு என்னை மற்ற சக எழுத்தாளர்களையும் காண வைத்தார்.. இன்று என் பொக்கிஷத்தில் ஜெயகாந்தனோடு பாலகுமாரன், சுஜாதா, ஜெயமோகன், கண்ணதாசன், தி ஜானகிராமன், கி. ராஜ் நாராயணன், வண்ணதாசன்... என்று நீண்டு கொண்டே போகிறது...ஜே கே உங்களுக்கு நன்றி...

பாலகிருஷ்ணன், இந்தியா


“உயிர் உறவு...” - பொன் ஐஸ்வர்யா

இக்கட்டான சூழ்நிலையில் இயல்பான இனிய படைப்பு. மறைந்து இருந்தாலும் மனிதம் மரிக்கவில்லை. ஆறுதல் அளிக்கிறது. பொதுவாக, மனிதனின் பொருளாதார நிலையும், மனதின் விஸ்தீரணமும் எதிர்மறை விகிதாசாரத் தில் (inverse proportion) இருப்பதைப் பார்த்து இருக்கிறோம். கீரைக்காரியின் தாரள மனம் பகிர்ந்து அளிக்கும் பாங்கில் தெரிகிறது. சமுதாய அக்கறை அனைத்து தரப்பினருக்கும் ஆன நியதி. இந்த கதையை (நிகழ்வை) படிப்பவரது உள்ளத்தில் இயன்ற அளவு ஊருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்படுகிறது. சமுதாயப் பணி ஆற்றிய ஆசிரியர் ஐயமின்றி பாரட்டத்தக்கவர்.

சிவகாமசுந்தரி


“உயிர் உறவு...” - பொன் ஐஸ்வர்யா

அன்றாட வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்வை பார்க்காத பலருக்கும் இதுதான் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் மனித நேயம் என்று வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...

பாலகிருஷ்ணன், இந்தியா


கூடி வாழும் பறவைகள்.... - பா. அய்யாசாமி

அருமை... கதையை எடுத்துச் சென்ற விதம், பின் அதனில் கொண்டு வந்த எதிர்பாராத திருப்பம், அதற்கும் மேலாக அழகாக சொன்ன விதம்... பாராட்டுக்கள்...

பாலகிருஷ்ணன், இந்தியா


மகான் போளூர் ஶ்ரீ விட்டோபா ஸ்வாமிகள்... - ஆரூர். சுந்தரசேகர்.

ஆரூர் சுந்தரசேகர் அவர்கள் வாராவாரம் தெரியாத மகான்களை பற்றி மிக அற்புதமாக எழுதி எங்களை ஆன்மீக உலகிற்கு அழைத்துச் செல்கிறார். நாங்களும் மகான்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒரு அரிய வாய்ப்பை கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். விகடகவிக்கு நன்றி!!

மு.ஜெய்சங்கர், பெங்களூர்


அடேய் கொரோனா...! - தில்லைக்கரசி சம்பத்

நடிகர் கவுண்டமணி காமெடி டிராக் மூலம் கொரோனாவில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், ஒவ்வொருவரின் நிறைவேறாத ஆசைகளை தில்லைக்கரசியின் கைவண்ணத்தில் படித்து மகிழ்ந்தோம்.

சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை


மகான் போளூர் ஶ்ரீ விட்டோபா ஸ்வாமிகள்... - ஆரூர். சுந்தரசேகர்.

போளூரில் உள்ள ஶ்ரீ விட்டோபா சுவாமிகளின் ஆசிரமத்துக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். எனினும் அவரது வரலாற்றை விளக்க யாரும் முன்வரவில்லை. அக்குறையை அகற்றி, அவரது வரலாறை ஆரூர் சுந்தரசேகர் சுவையாக விளக்கியது மிக அருமை!

பாகீரதி பாஸ்கரன், தஞ்சை


"தெங்குமரஹடா... இளம் டாக்டரின் மரணம்..." - ஸ்வேதா அப்புதாஸ்.

தெங்குமரஹடாவில் உண்ணி பூச்சி கடித்து இளம் டாக்டர் ஜெயமோகன் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தங்களின் உடல்நலத்துக்காக உழைத்து, விஷப் பூச்சிக்கடியால் பலியான டாக்டரின் சடலத்தை ஊருக்குள் கொண்டுவர மக்களின் எதிர்ப்பு மிகவும் கண்டனத்துக்கு உரியது. டாக்டரின் குடும்பத்துக்கு உதவ தமிழக அரசு முன்வர வேண்டும்.

ராதிகா பாபு, சின்மயா நகர்


கரோனா யுத்தம்..! ஹாங்காங்கின் வெற்றிக் கதை...! - டிராகன்.

ஹாங்காங்கின் கொரோனா அனுபவத்தை வைத்து, ஊரடங்கின்போது இந்திய மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்ட கொரோனாவை விரட்ட ஐடியா கூறிய டிராகன் பாராட்டுக்கு உரியவர்.

கோகுல்ராஜ், நெசப்பாக்கம்


ஆஸ்திரேலியாவில் கன்னித் தீவு..? - நிலா

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் அனைத்து நாடுகளிலும் உயிர்ப்பலிகளோடு, அந்தந்த நாடுகளின், விர்ஜின் உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் நிதி நிலைமை, தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை மோசமாக்கி விட்டதே! இந்நிலை மாற அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

திருநாவுக்கரசு, அறந்தாங்கி


அர்னாப் கோஸ்வாமி தாக்கப்பட்டாரா?! - ஆர்.ராஜேஷ்கன்னா

சாதுக்கள் உள்பட 3 பேர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் தயங்குவது ஏன்? அதற்காக கேள்வி எழுப்பிய அர்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

ராமச்சந்திரன், கோட்டயம், கேரளா


குடும்பத்தைக் காக்கும் காப்பீடு...! - ராம்

பிரதமர் மோடியின் காப்பீடு குறித்த அலசல் மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது. இவற்றை ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவோம்.

ராஜேஸ்வரி, குன்றத்தூர்


என்ன ஆனார் வடகொரியா கிம் ஜாங் – உன்?! – ஆர். ராஜேஷ் கன்னா.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வெளியே இருந்தபோது, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை மிரள வைத்தார். தற்போது காணாம போனாரா அல்லது இறந்தாரா என்ற பதைப்பிலும் அந்நாட்டு அணுஆயுதங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளதோ என அமெரிக்காவின் பி.பீயை கிம் ஜாங் உன் எகிற வைத்துவிட்டாரே! செம அலசல்.

கார்த்திகேயன், வடபழனி


நிவாரண நிதியும், உடைக்கப்பட்ட உண்டியலும்! - ஆர்.ராஜேஷ் கன்னா.

தாங்கள் சிறுக சிறுக சேர்த்த தொகைகளை ஹேமஜெயஶ்ரீ போன்ற மாணவ-மாணவிகள், கொரோனா நோய் தடுப்புக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தருவது பாராட்டுக்கு உரியது. அவர்களின் உதவிக்கு எடப்பாடி பழனிச்சாமியின் வார்த்தைகள் உற்சாகம் தரும் ஊட்டச்சத்து டானிக்!

சேது ராஜேந்திரன், மயிலாடுதுறை


“உயிர் உறவு...” - பொன் ஐஸ்வர்யா

பொன் ஐஸ்வர்யாவின் உயிர் உறவு, தற்போதைய தலைமுறையினரின் ஒட்டுறவு இல்லாத தனித்த செயல்பாடுகளை, ஏழை மக்களின் மனிதநேயத்தை தோலுரித்து காட்டும் அற்புதமான சிறுகதை. பாராட்டுக்கள்.

ஜெயஶ்ரீ, சுகுணா, கோவை


கூடி வாழும் பறவைகள்.... - பா. அய்யாசாமி

கதை துவக்கத்தில் பையன் விரும்பிய மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்து வைக்க தந்தை தயங்குகிறாரோ என நினைத்தேன். அதில் டர்னிங் பாயிண்டா வேறொரு கோணத்தில் முடித்து அய்யாசாமி அசத்திவிட்டார். அவர், விகடகவிக்கு கிடைத்த அற்புத கதை களஞ்சியம்!

உமா சுந்தர், சைதாப்பேட்டை


"சிநேகமுள்ள சிங்கம் ஜெயகாந்தன்..." - வேங்கடகிருஷ்ணன்

உண்மையிலேயே சினேகமுள்ள சிங்கம்தான் ஜெயகாந்தன். கடைசியாக, மியூசிக் அகாடமியில் அவரது 80-வது பிறந்த நாளில் முதன்முறையாக சந்தித்து பேசினேன். அவரது கம்பீர குரலில் சினேகமுள்ள நண்பனை போல் பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாது.

ராதா மைந்தன், வளசரவாக்கம்


சிரிக்கதை - “குப்புசாமியும் கூழ்வடாமும்...” - வேங்கடகிருஷ்ணன்

கடந்த சில வாரமா கொரோனா அடைமொழியில் சின்னதா தெரிஞ்ச குப்புசாமி மாமா, சென்ற வாரம் அடைமொழி போய், பக்கத்தாத்து பரிமளா மாமி கவனிப்புல குண்டாயிட்டாரே! பேஷ், பேஷ்... ரொம்ப நன்னாருக்கு!

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை


நெய் தடவின சுக்கா ரொட்டியைத் தேடி... – சத்யா GP

நெய் தடவிய சுக்கா ரொட்டி, மண்பானையில் புளிக்காத தயிரை மவுண்ட் ரோட்டில் 10 ஆண்டுக்கு முன் ஒரு வட இந்திய ரெஸ்டாரண்டில் ரசித்து உண்டேன். அதன்பின் உங்களை போல் சுவையான சுக்கா ரொட்டியை தேடுகிறேன். எங்கியாவது கிடைச்சா ரெண்டு பார்சல் சொல்லுப்பா!

ரகோத்தமன், பழவந்தாங்கல்


வீட்டு வாடகை வசூலிக்க பாலியல் வன்கொடுமை! - மாலாஸ்ரீ

வீட்டு வாடகை வசூலிக்க பாலியல் வன்கொடுமை... அதுவும் எங்கே? அமெரிக்காவில்! அவனவன் ஒருவேளை உணவுக்கே அல்லல்படும் போது, இருக்கப்பட்டவன் அடுத்த வீட்டு பெண்களை கூட்டிக் கொடுக்க பாக்குறான். ஊருக்கே நாட்டாமை என கருதும் அதிபர் டிரம்ப் இதை தடுப்பாரா அல்லது இட்ஸ் ஆல் ஃபேட் என்பாரா?

கீர்த்தனா, கமலவள்ளி, ஈரோடு


வாவ் வாட்ஸப்!

சென்ற வாட்ஸ் அப் படங்கள் அனைத்தும் செம சூப்பர். அதிலும், தலைகீழா நின்னாலும் இவர் வேலை செய்ய போறதில்லை படத்தின் காமிரா டிரிக் அசத்தல். முத்து பாணியில் ஞாண் உம்மை கட்டி அணைச்சு உம்மா தரும்.

சாமிநாதன், பாஸ்கர், நெல்லை


தூய்மையான காளிங்கராயன் வாய்க்கால் நீர்... - மாலாஸ்ரீ

இத்தனை தெளிவாக ஓடும் காளிங்கராயன் வாய்க்கால் நீரையா இவ்வளவு காலமா சாயக் கழிவுநீரை ஊற்றி, அதிகாரிகள் துணையுடன் பட்டறை அதிபர்கள் நாசப்படுத்தினாங்க. நீர்நிலைகள் மாசுபடுவதை நிரந்தரமாக தடுக்க மத்திய அரசு இன்னும் ஊரடங்கை நீடிக்கலாம்.

புவனேஸ்வரி, மாதவரம்


கடமையே கண்ணாய்!...

கொரோனா நோய் தடுப்பு பணிகளில் இவரை போன்ற ஒருசிலர் கடமையில் கண்ணுமாக இருப்பதால் தான் ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடிகிறது. அவரது கடமை உணர்விக்கு ராயல் சல்யூட்!

லட்சுமி காந்தன், பம்மல்


வலைக்கள்ளன்!!

வலைகள்ளனின் ஹியரிங் எய்டு, விவாகரத்து ஜோக்குகள் படித்து, ஊரடங்குக்கு பயந்து வீட்டில் இருந்த மொத்த குடும்பமே வாய்விட்டு சிரித்தது. கட்சி தலைவர் ஜோக்குக்கு ஜஸ்ட் ஸ்மைல்தான்!

கௌஷிக், தீட்சிதா, மயிலை


அடேய் கொரோனா...! - தில்லைக்கரசி சம்பத்

'அடேய் கொரோனா...', நிகழ்கால..உண்மை தகவல்களைக் கொண்ட.. நம்பிக்கையூட்டும்... நிதர்சனப் புலம்பல்கள்..! 'கொரோனா வைரஸ் பரம்பரையை முழுசா அழிச்சு ஒழிச்சிடுவோம்...!' முயன்றிடுவோம்... வென்றிடுவோம்..!

சி. கோவேந்த ராஜா, கொட்டாரம்.


கூடி வாழும் பறவைகள்.... - பா. அய்யாசாமி

கூடி வாழும் பறவைகள்.. சிறுகதை சிறப்பு...! இல்லம் நிறைந்திருக்கும்...! உள்ளம் மகிழ்ந்திருக்கும்...! இதயம் நெகிழ்ந்திருக்கும்...! இன்னல் ஒழிந்திருக்கும்...! சிறப்பான வாழ்த்துக்கள்..!

சி. கோவேந்த ராஜா, கொட்டாரம்.


“உயிர் உறவு...” - பொன் ஐஸ்வர்யா

மனிதம் நிச்சயம் வென்றெடுக்கும்... "உயிர் உறவு...' கதை மிளிர்ந்தது... நம்பிக்கை.. துளிர்த்தது...! அடுக்கக வாழ்க்கை... கவனம் ஈர்த்த காகம்... சோகத்துடன்..ஜோடிப் புறாக்கள்... ஈர மனங்கள்... உதவும் மனப்பான்மை... ஒற்றுமையுண‌ர்வு.. ஓங்கி ஒலிக்கச் செய்த கதை.. முழுமை.. அருமை..! பாராட்டுக்கள்.

சி. கோவேந்த ராஜா, கொட்டாரம்.


டாப்பிற்கு எகிறும் எடப்பாடி இமேஜ்.. திண்டாடும் திமுக?! - மூத்த பத்திரிகையாளர் ஜாசன்

அட்டை படத்தில் கொரோனா தாக்கம் அறியாமல் ஸ்டாலின் மாஸ்க்கை கழற்றி பேசுவது போலவும், எடப்பாடி மாஸ்க்கினால் மூடியபடி செயல் தீவிரத்தில் இருப்பதே, முதல்வரின் இமேஜை உயரே எகிறவைத்துள்ளது. எல்லாத்துக்கும் கருத்து கந்தசாமியாக ஸ்டாலின் இருந்தால், அவருக்கு எதுவுமே வேலைக்கு ஆகாது. புலம்ப வேண்டியதுதான்.

அழகிரிசாமி, மேட்டூர்


வலையங்கம்...

நல்லதை நாடுவோம் வலையங்கம் பல விஷயங்களை தெள்ளத்தெளிவாக நச்சுனு பல தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொண்டால் சரி!

பஞ்சாபகேசன், மதுராந்தகம்


பிரபஞ்சமெங்கும் பெரியவா - 63 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

hara hara Sankara jai jai Sankara

ஜெயஸ்ரீ டிஎஸ்


வலையங்கம்...

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதேபோல், கொரோனா நோய்தடுப்புக்காக கேரள மாநில அரசிடம் கேட்டறிந்து, அதற்கேற்ப தமிழகம் உள்பட மற்ற மாநிலங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றிய வலையங்கம் சிம்ப்ளி சூப்பர்பா!

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்


ஆஸ்திரேலியாவில் கன்னித் தீவு..? - நிலா

so sad 😢!! if this is the case all sectors of the economy is going to see the downfall!!

ஜெயஸ்ரீ டிஎஸ்


வீட்டு வாடகை வசூலிக்க பாலியல் வன்கொடுமை! - மாலாஸ்ரீ

வல்லரசு இதைத் தடுக்கவில்லையெனில் வண்புணர்வுரசாக மாறும் அபாயம் இருக்கிறது.

சபீஷ், இந்தியா


கூடி வாழும் பறவைகள்.... - பா. அய்யாசாமி

டபுள் டிவிஸ்ட் கதையில் கடைசி இரண்டு பாராக்கள் தேவையில்லாதது என்பது என் கருத்து. அருமை.

சபீஷ், இந்தியா


மகேந்திர பல்லவர் - 58 - சுதாங்கன்

பிரமிப்பூட்டும் தொடர். இளையராஜா- மகேந்திரன் கெமிஸ்டிரி அல்டிமேட்.

சபீஷ், இந்தியா


என்ன ஆனார் வடகொரியா கிம் ஜாங் – உன்?! – ஆர். ராஜேஷ் கன்னா.

அருமையான அலசல். கிம் ஜான் உன் நல்லபடியாகவே வரட்டும். ஏனெனில் பொத்தான் எங்கிருக்கிறது என்று தெரிய வேண்டுமே!!

சபீஷ், இந்தியா


"தெங்குமரஹடா... இளம் டாக்டரின் மரணம்..." - ஸ்வேதா அப்புதாஸ்.

நீலகிரி மாவட்ட செய்திகள் பத்திரிகையில் படிக்கும் போது விகடகவியில் எப்படியும் சதீஷ் அடியாழத்திற்கு சென்று சேகரிப்பார் என்று கடந்து போவது வழக்கம். அப்படித்தான் இந்த தெங்க்கு மராட்டா செய்தியும் எதிர்பார்த்தேன். அதன் படியே இந்த இளம் மருத்துவரின் கொடூர மரணம் சதீஷ் எழுதிய விதம் முழு விபரங்களை சொன்னது. அவர் எந்த மக்களுக்காக தன் வாழ்நாளை தியாகம் செய்தாரோ அந்த மக்களே இப்படி அவரை ஊருக்குள் கொண்டு வரக் கூடாது என்று சொன்னது தான் அவரது மரணத்தை விட வலி தரக் கூடியது.

சபீஷ், இந்தியா


டாப்பிற்கு எகிறும் எடப்பாடி இமேஜ்.. திண்டாடும் திமுக?! - மூத்த பத்திரிகையாளர் ஜாசன்

ஸ்டாலினின் சக்தி என்ன, அவருடைய பலம் என்ன, என்பதை தெள்ளத் தெளிவாக தைரியமாக, தயக்கமின்றி எழுதப்பட்ட கட்டுரை. பிரமாதம்.

சபீஷ், இந்தியா


பூமி தினம்... (நாள்..ஏப்ரல் 22) - பாலா

பூமி தினம்... கவி வரிகளில் வ‌ரலாற்று உண்மைகளை எடுத்துரைத்து, வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய‌ கடமைகளைச் சுட்டிக் காட்டிய விதம்... அழகு.அருமை. பாராட்டுக்கள்.

சி. கோவேந்த ராஜா, கொட்டாரம்.


“உயிர் உறவு...” - பொன் ஐஸ்வர்யா

பதிவு அருமை.. அன்றாட தினசரி நிகழ்வியலை சற்றே கூர்ந்து நோக்கினால் அனைவர்க்கும் புரிந்துவிடும்... மனிதநேயம் மனிதனுக்குள் இன்னும் மிச்சம் இருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த பதிவு... கீரைக்கார அக்காவின் வெள்ளந்தி பேச்சு... இல்லாமையிலையும் உதவும் மனம்... பகிர்ந்து உண்ணல்... நிதானமாய் யோசிக்கையில் மனம் தெளிவு படுத்துகிறது நமக்கு எது தேவை தேவையில்லை என்று... மனிதன் இருக்கும் வரை மனிதம் இருக்கும்.. மனிதநேய சங்கிலியை தொடரச் செய்வோம்...

சபீஷ், இந்தியா