தொடர்கள்
ஆன்மீகம்
தெளிவு தரும் இந்து மதம் -  கந்த சஷ்டி கவசம்... - கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்.

20200617082332555.jpeg

இந்த வாரம் தமிழ்த் தொலைக்காட்சிகளில் சொல்வது போல கந்த சஷ்டி வாரம் போலும்.

தெளிவு தரும் இந்து மதத்தில் கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன் அவர்களும் கந்த சஷ்டி கவசத்தைப் பற்றியே தான் பேசியிருக்கிறார்.

இது போன்ற என்னைக் காக்க, என் உடலுறுப்புக்களை காக்க என்று அனைத்து மதங்களிலும் துதிகள் இருப்பதாகவே தோன்றுகிறது.சரி.. என்னுடைய உறுப்புக்களை காப்பாற்று என்று கடவுளிடம் வேண்டினால் மட்டும் போதுமா..?

இதில் உள்ள சூட்சமம் என்னவெனில் ஒரு உபாதை வரும் வரை நம் உடலுறுப்புக்களை பெரும் பொருட்டாகவே மதிப்பதில்லை நாம். ஒரு சின்ன சுண்டு விரலை அசைப்பது படு சாதாரணமாக இருக்கும், நமக்கு நினைவில்லாமல் கோமாவில் படுத்திருப்பவரைப் பார்த்தால் தான் புரியும், அது எவ்வளவு பெரிய விஷயம் என்று. அது போலவே தான் நாம் மிகச் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கும் நம் உடலுறுப்புகளின் உபயோகங்கள்.

மருத்துவமனை என்பது போதி மரம் இல்லை, அது ஒரு தண்டனைக் கூடம். அவசர சிகிச்சை பிரிவுகளின் வாசலில் காத்திருப்பவர்களின் வலி சொல்ல முடியாதது.

20200617082919244.jpeg

குறைந்த பட்சம் இந்த உடல் பற்றிய பிரஞை வருவதற்காகவாவது இந்த கவசம் சொல்ல வேண்டும்.

நம் உடலுறுப்புகளின் முக்கியத்துவத்தை அன்றாடம் நினைவூட்ட. தவறான பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ளவாவது கவசம் சொல்வது அவசியம்.

பெட்ரோல் காரில் டீசல் ஊற்றுவோமா? ஆனால் நம் உடலுக்கு ஒரு காருக்கு கொடுக்கும் குறைந்தபட்ச அக்கறை கூட கொடுப்பதில்லை. புகையாகட்டும், மதுவாகட்டும் அவயவங்களை மெல்லக் கொல்லும் விஷ(ய)ங்கள்.

கவசம் இனி இது பற்றிய புரிதல் தந்து காக்கட்டும்.

பக்திமான்.