தொடர்கள்
ஆன்மீகம்
பிரபஞ்சமெங்கும் பெரியவா - 75 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20200617205321568.jpeg


சர்வஞன், ஸர்வவ்யாபி காஞ்சி மகா பெரியவா இன்று உலகம் முழுவதும் உள்ள அணைத்து நாட்டினருக்கும், மதத்தினருக்கும் சொந்தமாக இருக்கிறார். அவரை சென்று வணங்கியவருக்கு மட்டும் அவர் கடவுள் இல்லை. அவரைப் பற்றிக் கேள்விப்படாத, தெரிந்திருக்காத, பரிச்சயமில்லாதவருக்கும் கடவுள் தான். ஆம். துன்பத்தில் இருக்கும் யாரையும் அழைத்து ஆசிவழங்கி அரவணைத்துக்கொள்ளும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா.

அவரைப் பற்றி மிக அதிக சுவாரஸ்யமாய் ஒரு காணொளி.

ஸ்ரீ பரணி மணி அவர்கள்...

சிறு வயதிலேயே ஸ்ரீ பெரியவாளின் தரிசனம் கிடைத்து, அவருடைய ஆசிர்வாதத்திலும், அனுகிரஹத்திலும் வளர்ந்து வாழ்க்கை நடத்துவது ஒரு சிலருக்கு கிடைத்த பெரும் பாக்கியம். அந்த ஒரு சிலரில் ஸ்ரீ பரணி மணி அவர்களுக்கு இடமுண்டு. பத்தாவது படிக்கும் போது இவருக்கு கிடைத்த ஆட்டோகிராப் பற்றி இவர் வேலைக்கு சென்ற பின் பெரியவா ஞாபகப்படுத்தியது நமக்கு மெய்சிலிர்க்க வைக்கும். இன்னும் சில அனுபவங்கள் இந்த காணொளியில்.