தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

2020930151540303.jpeg



முதல் சம்பளம்... – பா.அய்யாசாமி

குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு பதில், திறமையுள்ள ஒருவரை மேற்கொண்டு படிக்க வைப்பது சாலச்சிறந்தது என்பதை அய்யாசாமி அழகாக விளக்கிவிட்டார். சூப்பரா இருக்கு!

நல்லசிவம், பொன்பரப்பி


நல்லதோர் வீணை செய்தே - வேங்கடகிருஷ்ணன்

பெண்களை பற்றி அறிந்து கொள்வதற்கான மிக அருமையான கட்டுரை. அவர்களும் முகமூடிகளை கழற்றி வைத்து, தங்களது ஆதங்கத்தை தெரிவித்தால் மட்டுமே, அதற்கான தீர்வு காண முடியும் என்பது நிதர்சனம்.

ஶ்ரீதரன் கணேஷ், மேற்கு சைதாப்பேட்டை


கோயிலுக்குள் வந்த முதலை?! – ஆர் .ராஜேஷ் கன்னா.

கேரள கோயில்களுக்குள் யானைகள் வலம் வருவதை பார்த்திருக்கிறேன். ஆனால், அங்கு முதன்முறையாக ஒரு முதலை கோயிலுக்குள் வந்ததை படித்து ஆச்சரியமானேன். கடவுள்களின் தேசமல்லவா... அனைத்து ஜீவராசிகளும் வழிபடும் இடம்தானே! அந்த முதலையை திரும்பி போக சொன்னதும் அமைதியாக குளத்துக்குள் இறங்கியது செம பிரமிப்பு!

சவுந்தர்யா பாஸ்கர், பூந்தமல்லி


உலகம் சுற்றும் விகடகவி - இந்த வாரம்.

உலகம் சுற்றும் விகடகவியில் அனைத்து செய்திகளும் சூடான நெய் ரோஸ்டாக இருந்தது. எனினும், அந்த செய்திகள் இறப்பை அதிகளவு எதிரொலித்ததால் ருசிக்க முடியவில்லை.

ராஜேந்திரன், வளசரவாக்கம்


வாசி யோசி.. - 10 - வேங்கடகிருஷ்ணன்

ஒரு பொருளை வாங்கவோ, விற்கவோ செய்யும்போது பேரம் பேசுவது மிக சரியே. ஆனால், இது மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மேற்கு மாம்பலம் நடைபாதை வியாபாரிகளிடம் செல்லாது. ‘இதான் ரேட்டு... இஷ்டம்னா வாங்கு, இல்லேன்னா இடத்தை காலி பண்ணு’னு சொல்வாங்களே!

சிவகுமார் சுப்பிரமணியன், திருவாலங்காடு


வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை... - 10 - டாக்டர் எம்.ஏ. வேங்கடக்ருஷ்ணன்

வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை தொடரில், ஏலா பொய்கள் உரைப்பான் கண்ணன் என்பதை சமஸ்கிருதத்திலும் தமிழிலும் விளக்கமளித்தது மிக சிறப்பு. இன்னும் கேட்க வேண்டும் போலிருந்தது.

வைஷ்ணவி வாஞ்சிநாதன், தென்காசி


அடுத்த குறி தமிழ்நாடு அமித்ஷாவின் மாஸ்டர் பிளான்! - ஜாசன் (மூத்தப் பத்திரிகையாளர்)

ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் யாரையும் வளைத்து மிரட்டி வழிக்குக் கொண்டு வரலாம். இதற்கு பெரிதாக அலட்டிக் கொள்ளவே வேண்டாம்

தில்லிபாபு


உலகம் சுற்றும் விகடகவி - இந்த வாரம்.

உலகம் சுற்றும் விகடகவி அருமை. In one article, we find many interesting news. Nice writing.

அனு, ஹாங்காங்


பஞ்ச பூதங்களும், பிரபஞ்சமும்... - ஆரூர் சுந்தரசேகர்.

அருமையான பதிவு. பஞ்ச பூதங்களும் பிரபஞ்சமும் பற்றி மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் ஆரூர் சுந்தர சேகருகு நன்றி.

எஸ். சாய்லக்‌ஷ்மி


குருகுலம் முதல் ஆன் லைன் வரை - மாலா ரமேஷ்

குருகுலம் முதல் ஆன்லைன் கல்வி வரை மிக சிறப்பாக அலசியுள்ளார் மாலா ரமேஷ். வெல்டன்.

குருமூர்த்தி, ஐதராபாத்


லஞ்சம் உண்டு... லஞ்சம் உண்டு... ஓடு ராஜா! - கி.கல்யாணராமன்

முதன்முறையாக சார்பதிவாளர் அலுவலகத்தில் எவ்வாறெல்லாம் லஞ்சம் வாங்கப்படுகிறது, இதில் யார், யாருக்கு பங்கு செல்கிறது, விஜிலென்ஸ் ரெய்டு ஆகியவற்றை வைத்து, மிக சிறப்பான கதைக்களத்தை தேர்வு செய்திருக்கிறார் கல்யாணராமன். ச்சும்மா... நச்சசுனு இருக்கு!

பைந்தமிழ் ராஜசேகரன், விராலிமலை


பலகாரக் (கடை) கடல்... - சத்யா .ஜி

அடுத்த வாரம் உறவினர் வீட்டு விசேஷத்துக்கு போறோம். அப்போ பலகார கடல்ல மூழ்கி, எல்லா அயிட்டத்தையும் ஒரு கை பார்த்துடணும். எங்களோட உறவுக்கார நொறுக்குத்தீனி பொண்ணை கூட்டிட்டு போனா, நம்மளையும் சேர்த்து கவனிச்சுக்குவா!

ரேணுகா ஹரி, மாங்காடு


"நீட்"டாய் முடித்த ஒடிஷா மாணவர்கள் - சாதித்த ஜிந்தகி பவுண்டஷன்... - வேங்கடகிருஷ்ணன்.

ஒடிசாவின் ஜிந்தகி பவுண்டேஷனின் கல்வி பணி பாராட்டுக்கு உரியது. ஏழை மாணவர்களுக்கு உணவு, இடம் வழங்கி, நீட் தேர்வுக்கு தயார்படுத்தி தேர்வு பெறவைத்துள்ளனர். நம்ம சென்னையில லட்சக்கணக்கான பணத்தை பிடுங்கறாங்க. பசங்க தேர்றதில்லை!

செல்வராணி சேகர், ராமாபுரம்


அமெரிக்காவில் ஏழ்மை நிலையில் வாடும் 8 மில்லியன் மக்கள்! – ஆர் .ராஜேஷ் கன்னா.

அமெரிக்காவை பொறுத்தவரை தற்போது 'பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மெண்ட் வீக்'தானா?! அதுக்கு நம்ம தமிழக அரசே தேவலை. சோறு போட்டாங்க. ₹2 ஆயிரம் கொடுத்தாங்க. இலவச அரிசி கொடுக்கிறாங்க. இதுகூட டிரம்ப்பால முடியலையா? என்ன கொடுமை!

பரமேஸ்வரன், பொழிச்சலூர்


லண்டன் பெண்ணை மணக்கும் ஹரிஸ் சால்வே...- லட்சுமிபிரபா

பெரிய இடத்தில் இதெல்லாம் சகஜமப்பா... என்ன... இந்த வயசுல மதம் மாறி கல்யாணம் பண்ணிக்கிறதுதான் இடிக்குது. ஒருவேளை, இவருக்கு பொண்ணு கண்டிஷன் போட்டிருக்கும். ஊருக்கே ராஜாவானாலும் வரப்போற காதலி சொல்லை தட்டக்கூடாது இல்லையா?!

ராஜகுமாரி கிருஷ்ணன், சேலம்


மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

நீங்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்ட விதம், இறங்க தெரியாமல் தொபுக்கடீர் என கீழே விழுந்து அடிபட்டது போலவே எங்களுக்கும் நிகழ்ந்தது. உங்களையாவது சைக்கிளோடு சாலையோரத்தில் உட்கார வெச்சாங்க. ஆனால், எங்களை ஓரமா உட்கார வெச்சுட்டு, எங்க சைக்கிளை யாரோ 'தள்ளி'ட்டே போயிட்டாங்க. வீட்டுல அதுக்கு 'மொத்து' விழுந்தது தனிக்கதை.

பவித்ரா, ராகுல், ரோகித், வடபழனி


தாய் மொழியும் பன் மொழியும் - கே.ராஜலட்சுமி.

தாய்மொழியும் பன்மொழியும் கவிதையில், தமிழ் மொழியை கற்றலும் வளர்த்தலும் நம் கடமை. பிற மொழி கற்றலும் விலக்கலும் நம் உரிமை என ச்சும்மா 'நச்'சுனு இருக்கு! வெல்டன் ராஜலட்சுமி.

புவனா கிரிதரன், மாதவரம்


“புது அனுபவம்...” - வெ.சுப்பிரமணியன்

கதாநாயகனை ஜொள்ளு பார்ட்டியாக சுற்றவைத்து, ஆத்திகவாதியை நாத்திக கட்சிதலைவனாகவும், பின்னர் அவனையே ஆன்மீகவாதியாக சித்தரித்து, எங்கள் தலையையும் சேர்த்து சுற்ற வைத்துவிட்டீர் ஓய்! இது சரியா?

சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை


"நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவிகள்... " - ஸ்வேதா அப்புதாஸ்.

எங்க வெள்ளியங்காடு அரசு பள்ளியின் 2 ஏழை மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.அந்த மாணவிகளின் மருத்துவர் கனவு நனவாக கடவுளை பிரார்த்திப்போம். இந்த மாணவிகளுக்காக பிரதான கட்சிகள் முன்வருமா?

செண்பகவள்ளி ரகுபதி, அன்னூர், கோவை


திருமணக் கட்டணம்... - ஆர்னிகா நாசர்

திருமண கட்ணம் குறித்த தங்களது கதை, இதுபோன்ற நயவஞ்சக எண்ணம் கொண்ட பெண்களுக்கும் அவர்தம் உறவுகளுக்கும் ஒரு படிப்பினையாக அமையும். சமூக சீர்திருத்த கதைகள் மூலம் ஆர்னிகா நாசரின் பணி சிறப்புக்குரியது.

முகமது இக்பால், வாணியம்பாடி


காவியத்தாயின் இளைய மகன்... - மரியா சிவானந்தம்

இசைக்கவி ரமணன் பற்றிய கட்டுரை மிக மிக சிறப்பு. அவரது கண்ணதாசனின் பாடல்கள் பற்றிய விளக்கங்களை கேட்டு கொண்டே இருக்கலாம். இக்கட்டுரையை நயம்பட எழுதிய மரியா சிவனாந்தம் பாராட்டுக்கு உரியவர்.

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை


சிங்கப்பூரில் திருமலை ஏழுமலையான் தரிசன கொலு!! – ஆர்.ராஜேஷ் கன்னா

சிங்கப்பூரில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் வழிபாட்டு முறைகளை நவராத்திரி கொலுவாக வடிவமைத்த தம்பதிகள் மிகுந்த பாக்கியசாலிகள். அவர்கள் நீண்ட ஆயுள் மற்றும் தேக ஆரோக்கியத்துடன் நலமாக வாழ எம்பெருமான் துணைநிற்பார்.

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்


உலகை குலுக்கிய வழக்குகள்! - ஆர். ராஜேஷ் கன்னா

ஹெரால்டு ஷிப்மேன் உயிரை காக்கும் டாக்டரா அல்லது சீரியல் கில்லரா? இந்த மாதிரி ஆளுங்க மட்டும் ஈசியா தற்கொலை பண்ணி செத்துடுறாங்க. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்கிறது சரிதான்!

அருந்ததி செல்வராஜ், கேளம்பாக்கம்


நூலகமாக மாறிய சலூன் கடை... - மாலாஸ்ரீ

தூத்துக்குடியில் சலூன் கடை நடத்தும் இளைஞரின் முயற்சி பாராட்டுக்கு உரியது. நம்மாளுங்க வீக்னஸை வெச்சு, தனது நூலகத்தில் உள்ள புத்தகங்களை படிக்க வெச்சு, படிச்ச பகுதியை விளக்க சொல்றது பெரிய விஷயம். அதான், அவரை பிரதமர் மோடிகூட பாராட்டி இருக்கார்!

பொன்னம்பலம், திருவள்ளூர்


வலைக்கள்ளன்

வலைகள்ளனுக்கு ரொம்ப குசும்புதான். பாண்டிபஜாருக்கு காரில் செல்லும் ஆண்கள் ஜாக்கிரதைனு சொல்லிட்டு, ஏமாத்தற பொண்ணுங்ககிட்ட ஜொள்ளு விட சல்லிசான மணிபர்ஸ் வாங்கிட்டு போக சொல்றீங்க... அடுத்த தடவை இந்த மாதிரி ஆளுங்களை டின்னு கட்டிடுவாங்களே! அதென்ன... படத்துல சிக்கான பெண்ணை காட்டிட்டு, தூரத்துல குண்டா இருக்கிற பொம்பளைதான் தாரானு சொல்றீங்க... நயன்தாரா கோவிச்சுப்பாங்க!

அட்சயா, அனுஷ்கா, ரோகித், திருவனந்தபுரம்


வாவ் வாட்ஸப்!

சென்ற வார வாட்ஸ் அப் படங்களில் நீரோவிய ஆட்டம், கிளி டான்ஸ், பூனையாரின் பேலன்ஸ் எக்சலண்ட். குதிரையேற்றம் ஓகே... மற்றதெல்லாம் சுமார்தான். கிளுகிளுப்பே காணோம்!

கௌஷிக், தீட்சிதா, சூர்யா, சென்னை


பஞ்ச பூதங்களும், பிரபஞ்சமும்... - ஆரூர் சுந்தரசேகர்.

பஞ்ச பூதங்கள் மற்றும் பிரபஞ்சத்தின் சிறப்புகளை பற்றி சுந்தரசேகர் மிக அழகாக எடுத்துரைத்து இருக்கிறார். இதனால்தான் முன்னோர்கள் பஞ்ச பூதங்களை போற்றி வணங்கினர். ஆனால், தற்போது நிலம், நீர், ஆகாயத்தை மாசுபடிந்த காற்றினால் அழிக்கிறோம். நம்மை நெருப்பு சுட்டு பொசுக்கிவிடுகிறது. என்னே பொருத்தம்!

சௌம்யா நாராயணன், திருச்செங்கோடு


மக்கள் கருத்து...

தமிழக முதல்வரின் தாயார் மறைவுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவிக்க சென்றது பற்றி கூறிய மக்களின் கருத்துகள் மிக சிறப்பு. இனி, இது தொடருமா?

அமிர்தவள்ளி சண்முகம், பல்லடம், கோவை


வந்தார்கள்... வென்றார்கள்... - 10 - மதன்

மதனின் வந்தார்கள், வென்றார்கள் தொடர் படிக்க படிக்க விறுவிறுப்பாக உள்ளது. அதன் படங்களும் மிக அழகாக கண்ணுக்கு விருந்தளித்து வருகின்றன. அவரது வரலாற்று பணி மேன்மேலும் தொடரட்டும்.

சூரியமூர்த்தி, பெங்களூர்


உணவே மருந்து... - 02 - மீனாசேகர்

உணவே மருந்து 2-வது தொடரில், முருங்கை மரத்தின் அருமை பெருமைகளை சுந்தரசேகர் மிக அருமையாக விளக்கியுள்ளார். நாங்ககூட ஏதோ 'முந்தானை முடிச்சு' விவகாரமா இருக்குமோனு நெனைச்சோம். ஆனால், அதன் மருத்துவ குணங்கள் அறிந்ததும் மகிழ்ச்சி பன்மடங்கு பெருகியது.

அலமேலு பார்த்தசாரதி, திருமயம்


நவராத்திரி நிறைவான 9ம் நாள் - புலவர் கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்.

நவராத்திரி திரேவிழாவின் 9 நாள் சிறப்புகளை மிக அழகாக, தெள்ளத்தெளிவாக கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன் விளக்கியதும் நெகிழ்ந்துவிட்டேன். அவரது பணி மேலும் சிறக்கட்டும்.

காயத்ரி ரகுநாதன், மேற்கு மாம்பலம்


ராக தேவதைகள்... - 10 - மாயவரத்தான் சந்திரசேகரன்

ராக தேவதையில் ரீதி கௌளையின் தொடர்ச்சியாக வந்த தகவல்கள், இசையமைப்பாளர் வித்யாசாகர் முதல் பாடகர்களின் சிறப்புகளை மிக அழகாக விளக்கினீர். திகட்டாத தேன்சுவையாக இருந்தது.

கௌரி பார்த்திபன், திருமுல்லைவாயல்


“புது அனுபவம்...” - வெ.சுப்பிரமணியன்

The suspense occult within the story has been enveloped by exciting narration.விரசத்தோல் போற்றிய விவகாரமான,வித்தியாசமான கதை.

மதுரம்


“புது அனுபவம்...” - வெ.சுப்பிரமணியன்

ஒருவனை நாத்திகனாக்குவது அவனின் சுய அனுபவம். அவனையே ஆத்திகனாக்குவது இறை அனுபவம். மொத்தத்தில் புது அனுபவம் ஒரு நிதர்சனமான இனிய அனுபவம்.

யாழினி - சென்னை.


அடுத்த குறி தமிழ்நாடு அமித்ஷாவின் மாஸ்டர் பிளான்! - ஜாசன் (மூத்தப் பத்திரிகையாளர்)

யப்பா... சட்டமன்றத் தேர்தலில் அமித்ஷாவின் அடுத்த குறி தமிழ்நாடா?! ஆட்சியை கைப்பற்றினாலும் ஆச்சரியமில்லை. ஏன்னா, தமிழக ஆளுங்கட்சி விவிஐபிக்களின் குடுமி மத்திய அரசிடம் சிக்கியிருக்கு. அதனால அவங்க அமித்ஷா சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டி, ஆட்சியை பறிகொடுப்பது உறுதி! செம த்ரில்லர் கட்டுரை.

மிருணாளினி குமரேசன், திருச்சூர், கேரளா


எட்டுத் திசைகளிலிருந்தும்.. கொலு அப்டேட்ஸ் !!

விகடகவியில் வந்த அனைவர் வீட்டு கொலுவும் மிக சிறப்பு. ஒவ்வொரு வருடமும் தங்களது பணி சிறக்கட்டும்.

சௌம்யா ராஜசேகர், திருநெல்வேலி


வலையங்கம்

விஜய் சேதுபதியின் 'நன்றி, வணக்கம்' என்ற 2 வார்த்தை, இலங்கை தமிழர்களின் ஆதரவாளர்கள் என கூறிக்கொள்ளும் சுயநலவாதிகளுக்கு சரியான சவுக்கடி. இதனால் அவர்களுக்கு என்ன பயன்? ஒன்றுமில்லை. தமிழில் தடுத்தால் வேறொரு மொழியில் வரப்போகிறது. அதை இவர்கள் கைதட்டி வரவேற்பர்!

ராஜா ரவீந்திரன், திண்டிவனம்


உணவே மருந்து... - 02 - மீனாசேகர்

Aha! Arumaiyana matter!Director mr.Bakiaraj ninaivai varugirathey!

சுப்ரமணியன்


வலையங்கம்

இப்போதே கருத்து சுதந்திரத்திற்கு மறுப்பு காட்டும் இந்த கூட்டங்களையும், அதன் தலைமையும், என்ன என்று புரிந்து கொள்ள? நாளை இவர்களது கூட்டம், அதன் தலைமை ஆட்சியில் இருந்தாலோ...நாம் சிந்திக்க வேண்டும்!

எஸ். பார்கவன், அமெரிக்கா


பஞ்ச பூதங்களும், பிரபஞ்சமும்... - ஆரூர் சுந்தரசேகர்.

Ariya thagavalgalai Alli alli thanthullar Aroor.Sundarasekar! Enghal parattuthalgal!

சுப்ரமணியன்