கடந்த 1986 முதல்,பத்திரிகைத்துறையில் நம் பயணம் தொடங்கியது... ஒரு கட்டத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக, நம் பயணத்தில் சில தடைகள் ஏற்பட்டது.. நம்மால் எழுத முடியவில்லையே என்று சற்று தத்தளித்த போது, முக நூல் நமக்கு கைகொடுத்தது... நம் சொந்த எண்ணங்களை பிரதிபலித்து வந்தோம்..
பத்திரிகையில் எழுதுவது போலல்லாமல், அதிலும் ஒரு சற்று விரக்தி இருந்து கொண்டே இருந்தது.. அப்பொழுது தான்.... 2017 ஆம் ஆண்டு ‘விகடகவி’ உதயமாகிறது....நீங்களும் எழுதலாமே என்று அழைப்பு நம்மை சிலிர்க்க வைத்தது.
நம்ம மதன் சார் தலைமையில். ராவ் சார். சுதாங்கன் சார், சுபா மேடம், பாலஸ்வாமின்தான் சார், பார்த்தசாரதி (மேப்ஸ்) மற்றும் தினகரன் என்ற டீம்... இந்த புதிய டிஜிட்டல் பத்திரிகை யுக்தியை கையில் எடுத்து பயணிக்க... அந்த பயணத்தில் நம்மையும் இணைத்துக் கொள்ள.... மீண்டும் நம் ஜர்னலிச பயணம் அட்டகாசமாகத் துவங்கியது...
அதிலும் விகடகவி ஒரு டிஜிட்டல் வார பத்திரிகை என்றவுடன்... நம் எண்ணங்கள் புதிய ஐடியாக்களை தேடத் துவங்கிவிட்டது...
முதல் இதழ் 29-11-2017... ‘நீங்கள் எழுத ஆரம்பியுங்கள்’ என்ற அன்பான வேண்டுகோள் ஆசிரியர் குழுவிடம் இருந்து வந்த அந்த நிமிடம், நம்மை மெய்சிலிர்க்க வைத்து திக்குமுக்காட வைத்துவிட்டது... முதல் இதழிலேயே நமது ஏதாவது கட்டுரையாவது இடம் பெறவேண்டும் என்று நம் மனம் துடித்தது.... உடனடியாக கிடைத்தது இனிப்பான செய்தி ‘கிறிஸ்துமஸ் கேக்’ தயாரிப்பு... ஊட்டி ஜெம் பார்க் ஹோட்டலில் இந்த கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் நிகழ்வு வருடந்தோறும் கோலாகலமாக நடக்கும்... அதை படம் பிடித்து, ஊட்டியிலிருந்து முதல் இனிப்பான கிக்கான கட்டுரையாக விகடகவிக்கு சமர்ப்பித்தேன். இன்னும் நம் நினைவில் இருக்கிறது அந்த ஸ்வீட் காண்ட்ரிப்யூஷன்!
அதை தொடர்ந்து நம் விரல்களின் துடிப்புக்கு ஏற்ப... மீண்டும் வேகம் எடுத்தது நமது ஜர்னலிச பயணம், விகடகவி என்ற அன்பான குடும்பத்துடன்... தொடர்ந்தது.... மூன்று வருடங்கள் ஓடிவிட்டன.... சில தடங்கல்கள் வந்தாலும், அதை ஓரமாக ஒதுக்கிவிட்டு.... நம் பணியை தொடர்ந்தோம் என்றால், அது விகடகவியின் மேல் நமக்கிருக்கும் அளவற்ற அன்பு தான் என்று சொன்னால் மிகையாகாது...
கடந்த மூன்று வருடமாக வாரந்தோறும் வெளியான விகடகவி, இதுவரை 162 டிஜிட்டல் இதழ்களை வெளிக்கொண்டு வந்து, ஏரளமான வாசகர்களை உலகம் முழுவதும் கவர்ந்து இழுத்துள்ளது... அந்த இதழ்களில் ஓர் சில இதழ்களை தவிர, அனைத்து இதழ்களிலும் நம் கட்டுரை இடம்பெற்றதை பெருமிதத்துடன் பார்க்கிறோம் என்றால் அந்த பெருமை ஆசிரியர் மற்றும் குழுவைத் தான் சாரும்...
விகடகவி ஆசிரியர் குழு அனைத்து பத்திரிகையாளர்களுக்கும்
முழு சுதந்திரத்தை வழங்கி... ஒவ்வொரு கட்டுரைக்கும் அவர்களின் எண்ணங்கள் மற்றும் சிறந்த சொந்த ஐடியாக்களை உபாயோகித்து எழுத தட்டிக் கொடுத்து வருவது சத்தான பூஸ்ட்...
எந்த செய்தியையும் ஒரு சிறந்த கட்டுரையாக எழுத, நாம் அந்த வார நிலைமைக்கு ஏற்றபடி எழுத ஆரம்பித்தது ஒரு சிறந்த விஷயமாக அமைந்து வருகிறது... இந்த மூன்று வருடங்களில் நிறைய ஊட்டி, கோவை மற்றும் நாம் செல்லும் இடங்களில் கிடைக்கும் சிறந்த செய்திகளை கட்டுரையாக வடிவமைத்து எழுதியுள்ளோம்.
முதல்வரின் ஊட்டி விசிட்... முழுமையான தகவல்களை சேகரித்து எழுதியுள்ளோம்..
ஊட்டி பூங்காக்களை பற்றி எழுதியதை பிரமிப்பாக பலர் படித்ததை உணரமுடிந்தது..
‘கோவை புதிய மேம்பாலம் ஒரு ஷோ பிஸ் ’ என்று எழுதியதை... ஷாக்காக பார்த்தனர்...
ஊட்டி அருகில் நிலத்தடியில் நெருப்பு புகை வந்ததை; ‘எரிமலை வெடிப்பா?’ என்று எழுத... பாப்பரப்பு தொற்றி கொண்டதை பார்க்கமுடிந்தது..
ஊட்டி ஸ்டீபன் சர்ச்சில், ‘டைட்டானிக் படத்தில் வயலின் வாசித்த கலைஞர் வாசிக்க.. அவரை நேரில் சந்தித்து, பேசி கட்டுரை எழுதினோம்.... அந்தச் செய்தியை படித்தவர்கள்.... பிரமித்துப் போனார்கள்.. அதே சமயம், அந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர் ஒரு சீனர். அவரின் உத்தரவை பெறாமல், அந்த இசை கலைஞரிடம் பேசியது பற்றி நம்மிடம் அவர் கோபித்துக் கொண்டதை மறக்கமுடியவில்லை...
ஊட்டி தேயிலையை ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்து வியாபாரம் செய்யும் ஜெர்மன் தம்பதியரை, ஊட்டி மார்க்கெட்டில் சந்தித்து லோக்கல் டீயை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்ததை... விகடகவியில் எழுதினது ஒரு திரில்லிங்....
ஊட்டி.. அரசு மருத்துவமனையின் 150 வருட கொண்டாட்டத்தை, பழைய மருத்துவர்களை பேட்டி எடுத்து, விகடகவியில் வெளியிட்டதை அந்த மருத்துவர்கள் நன்றியுடன் பார்த்தார்கள்.
ஊட்டி அதிசிய மாரியம்மன் கோயிலின் கட்டுரை ஒரு வரலாற்று சுவடு போல இருந்தது விகடகவியில்...
ஊட்டியின் முக்கிய எச்.பி.எப். தொழிற்சாலை மூடல் செய்தி... எல்லோரையும் கண்கலங்கச் செய்தது...
ஊட்டி மற்றும் கல்லட்டியில் நடந்த விபத்தை பற்றி எழுதியபொழுது, அது விகடகவியின் லைவ் டெலிகாஸ்ட் என்று கூறினார்கள்...
நீலகிரியின் இசை மங்கையின் மறைவை எழுதினபோது... பல இசைக் கலைஞர்கள் கண் கலங்கினார்கள்...
தென்னிந்தியாவின் முதல் சுரங்க பாதையை பற்றி... கேரளா - திருச்சூர் அருகே சென்று கவர் செய்தோம்... அந்த பணி இன்னும் முடியவில்லை என்பது விகடகவியின் கவலை...
நீலகிரி யானை வழித்தடத்தை க்ளியர் செய்ய... உயர் நீதிமன்றம் உத்தரவு செய்தி... பல அதிர்வை ஏற்படுத்தியது...
“மனித மிருகங்களுக்கு மரண தண்டனை..” எனும் நமது கட்டுரை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை உணர முடிந்தது..
ஊட்டி.. மிரளவைக்கும் ரயில்வே துறை... கட்டுரை, உண்மையில் தென்னக ரயில்வே துறையை திரும்பிப் பார்க்கச் செய்தது...
கேரள வெள்ளம் பற்றி விகடகவி எழுதினபோது... கேரள பத்திரிகையாளர்களே பிரமித்துப் பார்த்தனர்...
குறிஞ்சி மலர் செய்தி கட்டுரை விகடகவிக்கு குறிஞ்சி மலரில் ஆராதனை செய்தது போல இருந்தது...
“ஊட்டியில் காணாமல் போன குடிநீர் ஏரி..” - இந்த செய்தி வெளியானதில் விகடகவிக்கு ஒரு சபாஷ் என்று கூறினர் நீலகிரிவாசிகள்..
யாரும் கண்டுகொள்ளாத கிராமம்.. கட்டுரைக்குப்பின்.. மாவட்ட ஆட்சியர் நேரில் சென்ற நிகழ்வு, விகடகவிக்கு அந்த கிராமத்தினரின் நன்றி பார்வை..
“விஜய் சேதுபதி சொன்ன அந்த பையன்” கட்டுரை.. சினிமா கலந்த புகைப்பட திரில்லிங்....
ஹோமியோ மருத்துவ கட்டுரை விகடகவியின் சிகிச்சையை எடுத்துரைத்தது.....
கிராமத்து கார்த்திகை தீபம்... விகடகவி சூப்பர்.... என்று வர்ணிக்கப்பட்டது .
கலெக்டரை மாற்ற சுப்ரீம் கோர்ட் தடை... கட்டுரை விகடகவியின் சிறப்பு....
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட செய்தியை பனிக் குளிரில் கவர் செய்த விகடகவி...
சூழல் சுற்றுலா ஒரு திக்.. திக்..விகடகவியின் அனுபவம்..
‘அப்துல் காலமுடன் ஃபீல்ட் மார்ஷல் மானெக்ஷா சந்திப்பு’ கட்டுரை.. இரண்டு ஆன்மாக்களுக்கும் விகடகவி சிரம் தாழ்த்தி வழங்கிய தரமான அஞ்சலி.
‘ஜெயலலிதா யூனிவெர்சிட்டியில் பயிற்சி எடுத்த ஒரு மாணவி நான்’
நீலகிரி கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா.. விகடகவிக்கு சிறப்பு பேட்டி... அவரின் இல்லத்தில் விகடகவி இரண்டு மணிநேரம் சந்திப்பு....
சின்னத்தம்பி யானையை.. ஒரு நேரடி ரிலே..... செய்திக் கட்டுரை விகடகவி கொடுத்த விதம் சூப்பர்...
ராகுல் காந்தி வயநாடு விசிட் நேரடி விகடகவி ரிப்போர்ட்.....
பந்திப்பூர் காட்டுத்தீ ஆராய்ந்து விகடகவி ரிப்போர்ட்...
ஜெயின் துறவிகள் விபத்தில் மறைவு.... கட்டுரை சோகத்தை ஏற்படுத்தியது.
யூத காதலர்களின் ஊட்டி விசிட்...... ஒரு கலக்கல் ....
நீலகிரி நிர்வாகத்தின் ஓட்டுபோடுங்க விளம்பரம்... விகடகவியின் கட்டுரையை ஆட்சியர் பாராட்டினர்...
கலெக்டர் ரசித்த அரங்கேற்ற வேளை..நேரடி விகடகவி ரிப்போர்ட்... கலர்ஃபுல்...
நீலகிரி வெள்ளம்... பயங்கர அனுபவம்.....
மங்களகரமான சுஷ்மா... இறப்புச் செய்தியினை நேரலை போல விகடகவி எழுதியது... சுஷ்மாவின் இறுதி யாத்திரை முடிவதற்குள் கட்டுரையை விகடகவி எழுதி அசத்தியது.....
கேரளாவை கலக்கிக் கொண்டிருக்கும்.. ‘சீமாட்டி’ ஜவுளி கடை சொந்தக்காரர் பீனா கண்ணனை தனிப்பட்ட முறையில் சந்தித்து, கட்டுரை வரைந்த விகடகவி...
“இந்திய தண்டனை சட்டம் உருவானது ஊட்டியில்” விகடகவியின் ஆச்சிரிய கட்டுரை....
“காதலர்கள் காதலிக்கும் சொர்க்க தீவு... மால தீவின் அழகை பிரதிபலித்த ஒரு அன்பான விகடகவி கட்டுரை...
கொரோனா தொற்று துவங்கி லாக் டவுன் நேரத்தில்... கொரோனா செய்திகளை வாரம்தோறும் கொடுத்துக் கொண்டே இருந்தது நம்ம விகடகவி... காய்கறி மார்கெட்டாக மாறின ஊட்டி பஸ் நிலையம்.
கொரோனா உலக தமிழர்கள் பேட்டி.... விகடகவி ஸ்பெஷல் ...
மனித உயிர்களை விழுங்கிய தொற்று நோய்களின் வரலாற்றைக் கொடுத்த விகடகவி...
ஊட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுத்தை.. இந்தக் கட்டுரையை எழுத, நாம் நேரில் பலமுறை சென்று அந்த சிறுத்தையை ஊட்டி கால் நடை மருத்துவமனையில் சந்தித்து மருத்துவரிடம் பேசி எழுதினோம்...
followup செய்தியும் விகடகவி வழங்கியது. அந்த சிறுத்தைக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர் சோசெல்லன் ஒரு நாள் இரவு ஒரு மணிநேரம் சிறுத்தை குறித்து நம்மிடம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது...
முதுமலை ஆதிவாசி கிராமத்தில் கொரோனா சமயத்தில் விகடகவி விசிட்....
தீயில் கருகிய ஊட்டி மார்க்கெட் நேரடி ரிப்போர்ட் செய்த விகடகவி..
‘ஊட்டி முதல் மூவர்ண கொடி’ ஏற்றப்பட்ட நுறு வருட மரம் விழுந்த அதிர்ச்சிச் செய்தி....
“செஞ்சுரி அடித்த கிராண்ட்மா” சந்திப்பு, விகடகவிக்கு அந்த குடும்பம் சல்யுட் அடித்த அனுபவம்...
கேரள பஞ்சதந்திரங்களின் திருமணம் விகடகவி கட்டுரை.... சிறப்பான அனுபவம்.... அதிலும் மீடியாவுக்கு பாராட்டை தெரிவித்த நம்ம விகடகவி...
விழ்ப்புணர்வு செய்தியாக, மார்பக புற்று நோயினை தடுக்கும் அமைப்பு பற்றிய கட்டுரை....
கமலா ஹாரிஸ் கட்டுரை, விகடகவியின் ஒரு ஆராய்ச்சி என்று கூட சொல்லலாம்....
தப்பித்த நீலகிரி கட்டுரை... விகடகவியின் சிறப்பான ஆறுதல் ரிப்போர்ட்..
ஆன் லைன் பியோனா இசை வகுப்பு... ஒரு புது அறிமுகம்... விரல்கள் சொல்லிக் கொடுக்கும் பாடம் என்று விகடகவி கூறுவதை கேட்க முடிந்தது...
இப்படி கடந்த மூன்று வருடங்களாக பலதரப்பட்ட செய்திகளை வெளிக்கொண்டு வந்து பிரமிக்க வைத்துள்ளது நம் விகடகவி...!
நான்காம் வருடத்தில் தன் பாதத்தை பதியவைக்கும் விகடகவி... இன்னும் பல சாதனைகளை செய்திகளாகவும், கட்டுரைகளாகவும்.... சமர்ப்பிக்க நாமும் விகடகவியின் பாதையில் தொடர்ந்து ஆனந்தமாகவும் ஆத்மார்த்தமாகவும் பயணிக்கத் துவங்கிவிட்டோம்....! தொடர்ந்து பயணிப்போம்!
Leave a comment
Upload