தொடர்கள்
பேசிக்கறாங்க
பேசிக்கறாங்க......

பேசிக்கறாங்க ......
வாசகர்கள் அங்குமிங்கும் (ஒட்டு....ஹி..ஹி.. ) கேட்ட விஷயங்கள் :

சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் இருவர்:

" புது வருஷத்திலயாவது இந்த நிலை மாறுனா சரி"

" நிலைமை மாறலை கொரோனா மாறிடுச்சு... இன்னும் பவர்ஃபுல்லா வேற ஆயிடுச்சாம்... சனிப்பெயர்ச்சி வருஷக் கடைசியில் வரும் போதே நினைச்சேன்..."

மடிப்பாக்கம் பிரபு.

திருநள்ளாறு கோவில் வாசலில் கணவன் மனைவி....

"ஏண்டி கோயிலுக்கு போறோம்னு சொல்லியும் கூட இப்படி ஒரு பழைய டிரஸ் எடுத்துக் கொடுத்திருக்க, நீயும் பழைய டிரஸ் போட்டிருக்க. யாராவது நம்பள பிச்சைக்காரங்கன்னு நினைச்சு காச போட்டுறப் போறாங்க.."

மனைவி:ம்க்கும்...(முகத்தை நொடிக்கிறார்) இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..ஜோசியர் சொன்னது ஞாபகம் இருக்குல்ல? குளிச்சிட்டு துணிய அங்கேயே விட்டுட்டு வந்துடனும். அதுக்கு தான் இதை போட்டு இருக்கேன், பின்ன இந்த தீபாவளிக்கு எடுத்ததையா போட்டுட்டு வர முடியும்?....ஒழுங்கா குளிச்சிட்டு வாங்க....இப்ப வரைக்கும் துணியை மட்டும் விட்டுட்டு போற ஐடியா ல தான் இருக்கேன்...
(கணவர் பம்மிக் கொண்டு குளிக்க செல்கிறார்...)

காரைக்கால் கமலா.

தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் இருவர்...
"டேய் அண்ணாத்தே பட ஷூட்டிங்ல 6 பேருக்கு கொரோனாவாம்..... தலைவரும் அப்போலோ ல அட்மிட்டாமே ?"

"அப்பத்தானே ‘எனக்கு உயிர் முக்கியம் இல்ல.. சொன்ன சொல்லு தான் முக்கியம்னு 31-ஆம் தேதி வந்து கட்சி அறிவிக்கலாம் .சிம்பதி இமேஜும் சூப்பரா கிரியேட் ஆகுமில்ல?!

டேய் நீங்கல்லாம் இப்ப பிரசாந்த் கிஷோர விட ஜாஸ்தி யோசிக்கிறீங்கடா.....

ஜெயஸ்ரீ. தஞ்சாவூர்

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருவர்...

" என்னங்க எடப்பாடி குப்பைக்கு கட்டணம்னு சொன்னாரு.. மறுநாளே வாபஸ் வாங்கிட்டாரே... என்ன ஆச்சு??

" யாரோ பொங்கல் பரிச தேர்தல் வரதுக்குள்ள வசூலிச்சிடுவீங்க போல இருக்குன்னு சொல்லிட்டாங்கன்னு நினைக்கிறேன்.."

வண்டலூர்..கண்ணன்.

திருச்சி செல்லும் பேருந்தில் இருவர் ...

" அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்றாரே..மாஸ்க் இல்லாம மாஸா நடப்பதற்கு அண்ணன் எடப்பாடியாரின் கொரோனா கட்டுப்பாடு முயற்சிகள் தான் காரணம் னு ...அப்ப மாஸ்க் போட வேண்டாமா ?"

" அவர் சொன்னாருன்னு மாஸ்க்கை கழட்டினே ,அப்புறம் புது வைரஸ் வருதாம் , மேலோகத்துக்கு ஒரேயடியா இ - பாஸ் வாங்கிடுவ"

முன்னவர் மாஸ்க்கை இப்போது இறுக்கி போட்டு கொள்கிறார் .

ராதாபுரம். கந்தன்

இப்பகுதிக்கு வாசகர்களின் பங்களிப்பு வரவேற்கப்படுகிறது. தாங்கள் அன்றாட வாழ்வில் கேட்கும் சுவாரஸ்யமான பேச்சுக்களை வாசகர்கள் தாராளமாக அனுப்பி வைக்கலாம். தகுதியுள்ளவை தேர்ந்தெடுக்கப்பட்டு இத்தொடரில் பிரசுரிக்கப்படும்.