மண்ணில் தான் எல்லாம்....!
மண்ணால் தான் எல்லாம்...!
மண் இல்லையேல்...
மக்கள் இல்லை...!
மண்ணுக்கு...
மனமுண்டு...!
மணமுண்டு...!
மண்ணுக்கு...
மமதையில்லை....!
மரணமில்லை...!
மண் -
உண்ணும்... ஊட்டும்...!
உறங்காது...!
மண் -
ஊறும்... உயிர்ப்பிக்கும்...!
ஊறு செய்யாது...!
மண் -
அட்டாலும் குன்றாது...!
சுட்டாலும் குறையாது...!
மண் -
படைக்கும்... காக்கும்...!
தாங்கும்... தாக்காது...!
மண் -
மனிதனின் அடையாளம்...!
மனதினின் கடிவாளம்...!
மண் -
மதிப்பில்.... என்றென்றும்...
உயர்ந்து கொண்டே....!
மண் இல்லையேல்...
மக்கள் இல்லை...!
மண்ணால் தான்...
மக்களுக்கும் மதிப்பு...!
மண்ணால் தான்...
வளமும்... வாழ்வும்...!
மண்ணில் தான் எல்லாம்....!
மண்ணால் தான் எல்லாம்...!
Leave a comment
Upload