தொடர்கள்
Other
வாசகர் மெயில்

20220308173759715.jpeg

Heading : “திருடித் திங்காதீங்க…!” வெ. சுப்பிரமணியன்

Comment : திருடித் தின்பது ஒரு கலை. அந்த ருசியே தனி. திருடித் தின்ன வயசுவித்யாசமெல்லாம் கிடையாது. ஸ்கூலோ, காலேஜோ,வீடோ, கடையோ எல்லா இடத்திலும் திருடித் தின்னும் பொருளுக்கே சுவையதிகம். திருட்டை கௌரவமாக நினைக்கும் இந்தக் காலத்திலபோய் திருடாதேன்னா எப்படி பாஸ்? உங்க திருட்டுக்கு முன்னாடி உங்க பேத்தியோட திருட்டெல்லாம் ஜுஜூபி. எனக்கும் திருடித்தின்ற அனுபவம் ஏராளம். அந்தக் கால நினைவுகளை கிளறி விட்டீங்க, ரொம்ப நன்றி.

Heading : தீயசக்திகளால் ஏற்படும் பிரச்னைகளை போக்கும் தில்லைக்காளி!! மீனாசேகர்.

Comment : விகடகவி ஆன்மீக ஸ்பெஷல் மிக அருமை!! அதிலும் தீயசக்திகளால் ஏற்படும் பிரச்னைகளை போக்கும் தில்லைக்காளிஅருமையிலும் அருமை!!! எங்களுக்கு சிதம்பரம் தில்லைக்காளி கோயிலுக்கே நேரில் சென்று வந்ததை போன்ற உணர்வு ஏற்பட்டது. முதலில் எங்களது வாழ்த்துகளை கட்டுரை ஆசிரியர் மீனாசேகருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். விகடகவியின் ஆன்மீக பயணம் தொடரட்டும் .

J. விஜயலெக்ஷ்மி பெங்களூர்.

Heading : அத்தை வந்தாள் - சிறுகதை - பா.அய்யாசாமி

Comment : எங்காத்துல நடந்த அசல் சம்பவங்களை, இப்படி இன்ச் பை இன்ச்சா காப்பி அடிச்சு 'அத்தை வந்தாள்'னு சிறுகதையா போட்டுட்டேளா அய்யாசாமி? 'எங்களுக்கு உரிய ராயல்டி கொடுங்கோ!னு எங்க மாமியார் கேக்க சொன்னார்!

பாகீரதி, ரம்யா, மேற்கு சைதாப்பேட்டை

Heading : *'பட்டாம்பூச்சி பேசுது...'* விரைவில்... விகடகவியில்...

Comment : பட்டாம்பூச்சி பேசுதுனு எங்களை ஆவலை கிளறிவிட்டீர். தனித்தனியா பேசுமா, பலகுரல்ல கதைக்குமா, கிச்சுகிச்சு மூட்டுமா என்பதை அறிய ஒரு வாரம் காத்திருக்கணுமா?

தீட்சிதா, கௌஷிக், சாய்கிருஷ்ணா, சென்னை

Heading : சினிமா சினிமா சினிமா

Comment : தங்கள் பட புரமோஷனுக்காக தெலுங்கின் பிரபல ஹீரோக்கள் ஊர் ஊரா போறாங்க. அந்த ஊருக்கேத்த மாதிரி பேசுறாங்க. பாட்டு, படத்தின் ஹைலைட்டை வெச்சு தமிழ்நாட்டு ரசிகர்கள் சக்சஸ் பண்றாங்க. ஆனா, தமிழ் பிரபல ஹீரோக்கள் உள்ளூர் புரமோஷனுக்கே வர்றதில்லை. அப்புறம் எப்படி சக்சஸ் வர்றது?

உத்தமராசா, பிரணிதா, சென்னை

Heading : உடையவர் ஸ்ரீராமனுஜர்!- ஆர்.ராஜேஷ் கன்னா

Comment : உடையவர் ஶ்ரீ ராமானுஜர் குறித்து ராஜேஷ் கன்னா மிக அழகாக விவரித்துள்ளார். அவரது புகழுக்கு சான்றாக, ஐதராபாத்தில் 216 அடி உயர பஞ்சலோக சிலை அமைந்துள்ளதை பார்க்கும்போது நெஞ்சில் மகிழ்ச்சி பொங்குகிறது.

திலோத்தமை, ராஜலட்சுமி, திருக்குறுங்குடி

Heading : காவிரி நதிக்கரையில் பஞ்ச அரங்க ஸ்தலங்கள்! சுந்தரமைந்தன்.

Comment : அடடே.. வாவ்! சுந்தரமைந்தனின் விஷ்ணுவின் பஞ்ச அரங்க திருத்தலங்கள் பற்றி விரிவாக விளக்கினார். மிக அருமை. இப்போதே நாங்கள் அவற்றை காண காரில் குடும்பத்துடன் கிளம்பிவிட்டோம். மிகச் சிறப்பு!

ராதா வெங்கடேசன், நங்கநல்லூர்

Heading : ஆஸ்கரில் விழுந்த அறை -மரியா சிவானந்தம்

Comment : ஒருவரின் நடை, உடை, பாவனை மற்றும் உருவ மாறுபாடு குறித்து கிண்டல், கேலி செய்வது ரொம்ப தப்பு. தனது மனைவியை கேலி செய்த காமெடி நடிகரை ஆஸ்கர் நாயகன் வில் ஸ்மித் அறைந்தது சரியே. இதே மாதிரி ஒருசில தனியார் டிவி சேனல்களில் பெண்களை உருவ கேலி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல், பெண்கள் பொங்கி எழவேண்டும்.

சௌம்யா, சுந்தரவல்லி, மயிலாடுதுறை

Heading : விகடகவியார் டைரிக் குறிப்பு

Comment : அதிமுகவிலும் திமுகவிலும் செந்தில் பாலாஜி அமைச்சரா இருந்தது தப்பாய்யா..? எல்லா ஊழலும் அவர் மட்டும் செஞ்சா மாதிரி சொல்றீங்க... அப்புறம் தேர்தல் வந்துச்சான்னா, 2 கட்சி தலைமையும் மூணு தொகுதி செலவை பார்த்துக்க சொல்றீங்க. ஒத்த மனுஷன் என்னய்யா பண்ணுவாரு, பாவம்!

கனகசபை, லோகநாதன், திருவிடைமருதூர்

Heading : பள்ளிக்குழந்தைகளே உஷார்..! _தில்லைக்கரசிசம்பத்

Comment : பள்ளி வளாகத்தில் வேன் மோதி சிறுவன் பலியான செய்தி மிகக் கொடூரம். ஆனால், இந்த செய்தியை ஒருசில நாட்கள் மட்டுமே மக்கள் பேசி அங்கலாய்க்கின்றனர். அடுத்த பிரச்னை வந்ததும் இதை மறந்துவிடுகின்றனர். இதில் தப்பு செய்யும் பள்ளி நிர்வாகமும் ஊழல் அதிகாரிகளும் தப்புகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் வாய் மூடுகின்றனர். பள்ளி மாணவர்கள் விபத்தில் பலியாவது தொடர்கதையாக நீள்கிறது.

மாயா, ரேணுகா, ஜமுனா, வேலூர்

Heading : காவிரி நதிக்கரையில் பஞ்ச அரங்க ஸ்தலங்கள்! சுந்தரமைந்தன்.

Comment : ஆன்மீக கட்டுரையாளர் திரு.சுந்தரமைந்தனின் காவிரி நதிக்கரையில் பஞ்ச அரங்க ஸ்தலங்கள் உண்மையில் யாவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள். நாங்கள் ஸ்ரீரங்கத்தை தவிர மற்ற ஸ்தலங்களை தெரியாமல் இருந்தோம். உங்கள் மூலம் இந்த அரிய தகவல்கள் தந்த விகடகவிக்கு எங்களது பாராட்டுக்கள். இதேபோல் தொடர்ந்து நிறைய கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன் திருச்சி வெங்கடேசன்

வெங்கடேசன் , திருச்சி

Heading : கைலாஷ் மானசரோவர் - தொட்டு விடும் தூரம் தான். ராம்.

Comment : கயிலாய மலையைப் பற்றிய பல ஆச்சரிய தகவல்களை, அங்கு போய் வந்த உணர்வை ஏற்படுத்தும் வகையில் அருமையாக விளக்குகிறார் விஜயகுமார். நாங்களே போய் வந்த உணர்வை அதிகரித்து, அடுத்த வார தகவலுக்கு காத்திருக்க வைத்துள்ளது.

ராதா வெங்கட், வேணு, ஆலப்பாக்கம்

Heading : வலையங்கம்

Comment : பிராந்தியங்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்ற ஆளுநர் ரவியின் கருத்து வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இதை மாணவர்களிடம் சொல்வதற்கு பதில், அவர் மத்திய அரசிடம் சொல்ல வேண்டும் என்ற விகடகவியின் வலையங்க வரிகள் செம நச்... ஆனால், இது அவரது செவிகளில் ஏறுமா?

சபாரத்தினம், நெல்லை

Heading : கைலாஷ் மானசரோவர் - தொட்டு விடும் தூரம் தான். ராம்.

Comment : excellent conversation - i almost could feel dipping into Manosarover. Bucket list

Heading : ஆன்மீக சிதறல்கள் குடந்தை கீதாமணி

Comment : Arumaiyana.Alaya Thagavalgal given by kudanhai Geethamani..Badrinarayanan. vedal kpm Tk.