மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் கொசுவைப் போன்று ஒரு சிறிய அளவிலான மைக்ரோ டிரோனை ராணுவ நடவடிக்கைகளுக்காக சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த மைக்ரோ டிரோன் ராணுவம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தவிர, பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவக்கூடும் என்று சீன ராணுவஅதிகாரிகள் கூறுகின்றனர்.
.
இந்த சிறிய மைக்ரோ டிரோனின் மாதிரியை சமீபத்தில் சீன சென்ட்ரல் டெலிவிஷனின் ராணுவ சேனல் தொலைக்காட்சியில் சீன விஞ்ஞானிகள் காட்சிப்படுத்தினர். தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் லியாங் ஹெக்ஸியாங், "எனது கையில் கொசு போன்று ஒரு சிறிய ரக ரோபோ டிரோன் உள்ளது. இந்த சிறிய மைக்ரோ டிரோனை கையில் வைத்தபடி, ஒரு ஸ்மார்ட்போன் மூலம் டிரோன்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. தோராயமாக, இது ஒரு கொசுவின் அளவை ஒத்திருக்கிறது. இதன் நீளம் சுமார் 1.3 சென்டிமீட்டர் உள்ளது. இந்த சிறிய டிரோன்கள் ரகசிய ராணுவ நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக இருக்ககூடும்.இதுபோன்ற சிறிய ரோபோ டிரோன்கள், தகவல் சேகரிப்பு மற்றும் போர்க்களத்தில் சிறப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்றது!" என்று தெரிவித்தார்.
Leave a comment
Upload