தொடர்கள்
கவிதை
பிடிவாதம் பிடி...! சி.கோவேந்த ராஜா

2022041916553394.jpg

அன்பு செய்வேன் என்று
அடம் பிடிப்போம்...!

ஆறுதலாய் இருப்பேன் என்று
ஆரத் தழுவுவோம்...!

அள்ளிக் கொடுப்பேன் என்று
துள்ளி எழுவோம்...!

இன்னல் களைவேன் என...
பின்னாலிருந்து முன்னேற்றுவோம்...!

உறுதியாய் வெல்வோம் என...
உடனிருந்து உற்சாகப்படுத்துவோம்...!

ஊக்கப்படுத்தி...
ஆக்கங்கள் பெருகச் செய்வோம்...!

நம் எண்ணம் போல்...
நல்வாழ்வு வாழ்வோம்...என‌
நம்பிக்கை கொள்வோம்...!

மனம் போல் வாழ்வோம்...!
தினம் போல் வளர்வோம்...!

ஆனந்தப் பூக்கள் மலரட்டும்...!
அழகு அகிலம் இனிதே வாழ்த்தட்டும்...!
மக்கட் செல்வம் மகிழட்டும்...!