தொடர்கள்
கவிதை
வியப்பு - லாவண்யா மணிமுத்து

# வியப்பு #

20220524150315450.jpg


சிறுவயதில் விளையாட்டாய் கண்ட கனவு
பலருக்கும் வயப்பட்டிருக்கும்

நிறைவேறியது எப்படி என
நினைத்துப் பார்த்தால்
விளங்கியதொன்றெனக்கு

நீ எதுவாக விரும்புகிறாயோ
அதுவாகவே ஆகிறாய்

ஆழ்மனதில் அழுந்தப் பதிந்தவைகளை
கால ஓட்டத்தில்நாம் மறந்து விடுகிறோம்

ஆனால் இப்பிரபஞ்சம்
அதை நம் கையில் கொண்டுவந்து
கணக்காய் சேர்ப்பதை
தன் கடமையாகவே
வைத்திருக்கிறது

கடமை தவறுவது
மனித இயல்பாகவே மாறிவிட்ட
இப்பொழுதில் மாறா
இயற்கையை
வியக்காமல்
என்ன செய்ய?...