தொடர்கள்
நேயம்
" சப்தத்தை குறைக்கும் ஆலமரம் "- ஸ்வேதா அப்புதாஸ் .

மரங்கள் இயற்கையின் பொக்கிஷங்கள் .இந்த பொக்கிஷங்களை சாலையோரத்தில் நட்டு நிழல் கொடுக்கும் மரங்களை நட்டு பசுமையை ஏற்படுத்திய ஒரு அரசர் அசோகர் .
பெருமப்பாலும் சாலை ஓரங்களில் ஆலமரங்கள், வேப்ப மரங்கள் நடப்பட்டு குளிர்ச்சி மற்றும் நோய்த்தடுப்பு யுக்திகளை மரங்கள் ஏற்படுத்தின என்பது வரலாறு .
அதே சமயம் ஆல மரங்கள் காது கிழியும் சப்தங்களை தடுத்து நிறுத்தும் திறனை பெற்றது என்பது பலருக்கு தெரியாது .

2022052323543768.jpg
கோவை சிங்காநல்லுர் வரதராஜபுரம் காமராஜர் சாலையில் ஆங்காங்கு ஆல மரங்கள் உள்ளது.
இந்த ஆலமரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று சாலை விரிவாக்க செயல் பாட்டில் அதை அப்புற படுத்தும் ஐடியா இருந்ததாம் .
அதே சமயம் கர்நாடக மற்றும் பல நெடுஞ்சாலை ஓரங்களில் ஆல மரங்களை பார்க்க முடியும் .

20220523235904702.jpg
கோவை சிங்காநல்லுர் வரதராஜபுரம் சரவணா ஸ்டோர் மற்றும் பழ கடையின் அருகில் உள்ள ஆல மரம் மிகுந்த உதவிகளை இந்த பகுதியில் நலம் பைக்கவிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது .


இந்த பகுதியில் மிக அதிக போக்குவரத்து அதனால் வாகனங்களின் இரைச்சல் காலை முதல் இரவு வரை ஓயாமல் இருக்கும் அதிகமாக குடியிருப்பு மருத்துவமனை உள்ள பகுதி இந்த பெரிய ஆலமரம் வாகன இரைச்சலை பில்டர் செய்து கொடுப்பது யாருக்கும் தெரியாத ஒன்று .

20220524000253414.jpg
பழக்கடை நடத்தும் நடராஜன் நம்மிடம் கூறும் போது , " இங்கு நான் ஒரு நாற்பது வருடமாக வசிக்கிறேன் இந்த ஆலமரத்தின் ரசிகன் மட்டும் அல்ல அதன் பாசமும் உண்டு .
இந்த பகுதியில் ஏகப்பட்ட வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன எவ்வளவு சவுண்ட் இருக்க வேண்டும் ஒரு இருபது சதவிகிதம் தான் இருக்கும் இதே பீளமேடு , காந்திபுரம் , ஒண்டிப்புதூர் போய் பாருங்க சாலையில் நிற்க முடியாது அவ்வளவு இரைச்சல் இருக்கும் இங்கு அது இல்லை .

20220524000421591.jpg

இந்த ஆல மரத்தால் நிழல் மழை நேரத்தில் ஒதுங்கும் ஒரு கூடாரமுமாக திகழ்வது அதன் சிறப்பு .சாலை விரிவாக்கம் தேவை தான் அதே சமயம் மரங்களை வெட்டி சாய்ப்பது அபத்தமானது .

ஒரு மரத்தை வெட்டினால் இரு மர கன்றுகள் நட வேண்டியது அவசியம் .இந்த ஆல மரத்தை வெட்ட நினைத்தால் நான் தடுத்து நிறுத்தி போரடுவேன் " என்று ஆவேசமாக கூறினார் .
சாலை ஒர மரங்களை வெட்டுவது ஒரு ஊரின் அல்லது இடத்தின் அடையாளங்கள் மறைந்து விடுகிறது .

20220524000820348.jpg
மரங்களை பேணி காக்க முயற்ச்சிப்போம் .